Thursday, 19 January 2017

இவருக்கு வணக்கம் வைக்கலாமே....


தமிழகமே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் நம்மைக்காக்கும் காவல் துறையில் இருந்து வெளிப்படையாக ஆதரவுக்குரல் இன்று
வெளிப்பட்டிருக்கிறது இவர் மூலமாக..

ஆம்....
மதியழகு என்கிற காவலர்,
தாங்களும் தமிழர்களே...
தங்களது ஆதரவு என்றும் தமிழ் மண்ணுக்கே..... ஜல்லிக்கட்டுக்கே... என்று வெளிப்படையாக தனது ஆதரவை ஊடகங்களில் மூலம் தெரிவித்துள்ளார்.

அவரது துணிச்சலை பாராட்டி வரவேற்போம்..

தமிழருக்கு எதிராக மோதியும்....நீதியும்...
ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் தங்களால் பிறப்பிக்க இயலாது என
கை விரித்திருக்கிறார் மோடி,என்கிற செய்தியை கேட்டவுடன் தமிழனாய் என் நெஞ்சம் குமுறுகிறது.

நாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாடு மாநில மக்களின் கலாச்சார அடையாளமான வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு,உங்களுக்கு வேண்டும் என்றால் பொழுதுபோக்காக தெரியலாம்.

ஆனால்,ஜல்லிக்கட்டு என்பது
பல்லாயிரம் ஆண்டுகளாக
தமிழர்களாகிய எங்களது உயிரிலும்,
உணர்விலும்,வாழ்விலும் ரத்தமும் சதையுமாக கலந்து கிடக்குறது.

அத்தகைய தமிழரின் வீர விளையாட்டினை நடத்த அவசர
சட்டம் பிறப்பிக்க முடியாது,காரணம்... வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்று நியாயம் கற்பிக்க முயலுகிறீர்கள்.

அந்தளவிற்கு நீங்கள்
நியாயவான்களா....?..என
உங்களுக்கு மனசாட்சி என்று
ஒன்று இருந்தால் நீங்களே
கேட்டுப் பாருங்கள்...

மேலாண்மை காவிரி வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது நீங்கள் என்ன செய்தீர்கள்....?

மேலாண்மை காவிரி வாரியம் நிச்சயம்
அமைப்போம்...என சொல்லிவிட்டு,
சில தினங்களிலேயே எங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்றீர்கள்.
(கர்நாடகத்தில் தங்களது செல்வாக்கை இழக்கக்கூடாது என செய்த அரசியல்
கூத்து என் ஊர் உலகமே அறியும்)

சரி...இதுவரைக்கும் நீங்கள் அவசர சட்டம் போட்டதே இல்லையா...?

மோடி அவர்களே....
உங்களது சுயநலனுக்காக,2014ல்
உங்களது தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன்,நீங்கள் கூட்டிய முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே,
நிர்பேந்திரா மிஸ்ரா என்பவரை பிரதமரின்(தனக்கு) முதன்மைச் செயலாளராகப் பதவியில் அமர்த்த,தொலைத்தொடர்பு துறையில் இருந்த அவரை பணிமாற்றம் செய்வதற்காக TRAI-ன் சட்டத்திருத்தத்தின் மீது அவசர சட்டம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டு அது ஜனாதிபதி ஒப்புதலுடன் அவசர சட்டமாகப் பிறப்பித்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கா....?இல்லை...அதுவும் மறந்துபோச்சா..! மக்களாகிய எங்களிடம் கொடுத்த தேர்தல் வாக்குறுதி போல.

அடுத்ததாக....நிலமசோதா சட்டம் இயற்ற மூன்று முறை அவசர போட்டதை இந்த உலகமே அறியும்.

இதுபோக,முந்தைய BJP கூட்டணி ஆட்சியில் உங்கள் அரசியல் ஆசான்
A.B வாஜ்பாய் பிரதமர் ஆக
இருந்தபோது மட்டும்,சுமார்
58 முறை அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எல்லாம் சரி...நீங்கள் உண்மையிலேயே
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிப்பவராக இருப்பவர் என்றால்....?

ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு எதிராக
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருமெனில், அடுத்த நிமிடமே ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட திருத்தம் நிச்சயம் மேற்கொள்வேன்,என உங்களால் தமிழர்களாகிய எங்களுக்கு உத்தரவாதம் தரமுடியுமா...?

அப்படி அறிவிக்க உங்களுக்கு
திராணி இருக்கா......?...நிச்சயம் உங்களுக்கு இருக்க வாய்ப்பே
இல்லை.

காரணம்,உங்களுக்கு தமிழர்
நலனில் உண்மையான அக்கறை இருந்திருப்பின்,மூன்று வருடமாக ஜல்லிக்கட்டு மீதான தடையினை
நீக்க முயற்சி செய்திருப்பீர்களே...!

உங்களது வோட்டு அரசியலுக்காக, தமிழரது நலனில் தமக்கு அக்கறை
இருக்கிறது என காண்பிப்பதற்காக தமிழில் ட்விட் போடுவது,வேட்டி கட்டி வேஷம் போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உங்களது பேச்சுக்கும், பித்தலாட்டத்திற்கும் இந்தியாவின்
மற்ற மாநிலங்கள் வேண்டுமென்றால் தலையாட்டலாம்.....தமிழர்களாகிய நாங்கள் ஒரு போதும் உங்களை நம்பவோ,ஏமாறவோ தயாரில்லை.

அதிகாரத்தை கையில் வைத்துக்
கொண்டு அவசர சட்டத்தை இயற்ற முடியாது என்கிறீர்கள்.

மக்களுக்காக தான் சட்டமே தவிர, சட்டத்திற்க்காக மக்கள் இல்லை என்பதை உணர்ந்து இருந்தால் நிச்சயம் தமிழர் உணர்வில் கைவைத்து இவ்வாறு வேடிக்கை பார்த்திருக்க மாட்டீர்கள்.

எங்களது கலாச்சாரம்,பண்பாடு பற்றி தெரியாத உங்களைப்போன்ற அரசியல்வாதிகளிடம் நாட்டை கொடுத்தது எங்களது பிழையோ....
என எண்ணத் தோன்றுகிறது.

சரி...அரசியல்வாதிகள் இப்படி இருக்கிறார்களே....என்று நீதிமன்றம் சென்றால்,நீதிமான்கள் அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என, தாங்களும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்களே...என  தங்களது நடவடிக்கையின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்.

மக்களது பாரம்பரியத்திற்கும், உணர்வுக்கும்,கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்காத ஒரு சார்புடைய நீதிபதிகளை என்னவென்று சொல்வது.....?
வெட்கித் தலைகுனிவதை தவிர்த்து.

உண்மையில் நீதிமான்களுக்கு அக்கறையிருந்து இருந்தால்....

கலாச்சார,பாரம்பரிய விஷயங்களில்  நாங்கள் தலையிடமாட்டோம் என ஒதுங்கியிருக்க வேண்டும்.

நாட்டின் ஒரு மாநில மக்கள்
ஒருபக்கம் கொந்தளித்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது,
சூழல் கருதி காலம் தாழ்த்தாது நீதிமன்றம் தீர்ப்பை வழங்காமல் பார்வையாளர் போல் வேடிக்கை பார்ப்பது கொடுமையிலும் கொடுமை.

இதற்கு முன் நீதிபதிகள் யாரும் விரைவாக தீர்ப்பு வழங்கியதே இல்லையா....?...(உலகறிந்த நீதிபதி
குமாரசாமி தீர்ப்பை மறக்க முடியுமா....)

இதில் இருந்து ஒன்றே ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது.ஒருவேளை நீங்களும் மோடி போன்று தமிழர் நலனில் அக்கறையில்லாதவர்களோ.... என்னவோ....என்று..?

அது உங்களது தாமதமாகிற தீர்ப்பின் மூலம் வெளிப்படையாக தெரிகிறது.

தமிழர் விஷயத்தில் நீதிபதிகளும், அரசியல்வாதிகளும் அக்கறையின்மையுடன் செயல்படுவது வெட்கக்கேடானது.

உங்கள் இருவரது வஞ்சகத்தை, எங்களது அகிம்சை போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்வோம்...சட்டத்தை மாற்றியமைப்போம்...அது நிச்சயம்.

பிற வேடிக்கை மனிதரைப்போல், தமிழனை வீழ்வான் என நினைத்தாயோ....

Wednesday, 18 January 2017

'பீட்டா'எனும் கொலைகார கும்பல்.....


என்னடா....மிருகவதை என்று சொல்லி தானே நம் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியது இந்த பீட்டா அமைப்பு.

அது எப்படி....இவர்களை மிருகவதை கும்பல் என்கிறீர்கள்.....ஒன்றும் புரியலையே....!!!..என நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது.

அதற்கு விடை சொல்லவே இந்த பதிவின் நோக்கம்.

வாங்க.....சற்று விரிவாக பார்க்கலாம்..


PETA (People for the ethical treatment of animals) அமைப்பானது 1980ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது.

அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும்
ஒரு காப்பகம் என  தன்னைப்
பதிவு செய்து கொண்டது.

சரி...அதன் பின்னர் நடந்தது
என்ன...?

வீதியில் ஆதரவின்றி அலையும்
நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப்
போவதாக அறிவித்தது பீட்டா.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன் கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின.

லட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே
அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி
ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.

அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால்,பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.


1998 ல் இருந்து 2015 ஆம் ஆண்டு
வரை பீட்டா கொலை செய்த
நாய்கள், பூனைகள், முயல்கள்
மற்றும் இன்ன பிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அதிர்ச்சி அடைய வேண்டாம்...34,970
மேலும் விவரங்களுக்கு:
http://viid.me/qaBUbU

ஆமாம் நண்பர்களே...இந்தக் கருணை
நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்....
கொம்பைப் பிடிக்கிறாய்....
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்...
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்...

எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று.

எப்படியென்றால், 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்,
பீட்டா செய்வது அதுவே தான்...

பீட்டா - மிருகவதை வியாபாரம்

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில்
ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?

அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!

அமெரிக்காவில் வளர்ப்புப்
பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.

எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது
என்பது தான் உண்மை.


சரி....அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று
நீங்கள் கேட்கலாம்.

நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.

போட்டியே இல்லாமல் நடக்கும்
இந்த மிருகவதை வியாபாரம்
பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும்
அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது
என்பதே இன்றைய நிலை!

சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?


நம்ம தெருவில் சாதாரணமாக
காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை
பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.

பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.

நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.

காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.

இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு
இந்த மாடு வைத்திருப்பவர்கள்
பால் கறப்பார்கள்.

பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் இது போல்
சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே? மூன்றரை இலட்சம் கோடிகள்!

சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.

இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை. சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும். ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.

வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!

எனவேதான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை  இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.

உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.

அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.

அதனால்தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை
என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள்....


இதில் என்ன வியப்பு என்றால்....!!! மிருகவதைக்கு எதிராக போராடுகிறோம் என சொல்லிக்கொள்கிற இந்த அமைப்பு (peta),ஒருபக்கம் மிருகங்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது,
கருணைக்கொலை என்கிற பெயரால்...

இத்தகைய கேடுகெட்ட அமைப்பை அங்கீகரித்ததோடு மட்டுமல்லாது;
இவர்கள் சொல்வது எல்லாம் தான்
நியாயம் என நம்பி,நம் கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒழித்துக்கட்ட துணைபோயுள்ளனர், வெட்கம் கெட்ட கைக்கூலிகளான இந்திய ஆட்சியாளர்களும்,
நீதிமான்களும் (தற்போதைய செய்தி: மான் வேட்டை வழக்கில் இருந்து சல்மான் கான் விடுதலை).

இவர்களிடம் இருந்து நியாயம் கேட்பது, நம் அறிவீனமே தவிர...வேறென்ன.


Tuesday, 17 January 2017

நீங்கள் சைவப்பிரியரா....?...அப்ப படிங்க.


இன்று நாம் சாப்பிடுகிற, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில்,ஏதோ ஒருவகையில் மிருகங்களில் இருந்து பெறப்பட்ட பல வேதிப்பொருள்கள்
சுவைக்காகவும்,நிறத்திற்காகவும்
கலக்கப்படுகிறது.

இத்தகைய மிருகங்களில் இருந்து பெறப்பட்ட வேதிப்பொருள்களில்
எது நாம் சாப்பிடுகிற உணவில்
சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை நாம் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக ingredients என்கிற தலைப்பின் கீழ் சேர்மானங்கள்
உணவுபாக்கெட்டின் ஒரு பகுதியில்
வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

அதில் நீங்கள் கவனிக்க வேண்டியது
E என்று பெரிய ஆங்கில எழுத்தில் ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
(நம்மூரில் விற்பனையாகும் உணவுப்பொருள்களின் பாக்கெட்டுகளில் 'E' குறிப்பிடப்படாமல் வெறும் எண் மட்டும் கூட  குறிப்பிட்டு இருக்கலாம்)

'E' - என்றால் ஐரோப்பா என பொருள்படும்.
எண்கள்  வேதிப்பொருளினை குறிப்பிடும்.
'e' -என்றால் எமல்சிபையர் என பொருள்படும்.

நூற்றுக்கணக்கில் இது போன்ற குறியீடுகள் உலகளவில் இன்றும்
நடைமுறையில் இருக்கிறது.

அவற்றில் சில மிருக (எருது,கோழி மற்றும் பன்றி) இறைச்சிகளில் இருந்தும்,கடலில் இருந்தும் பெறப்படும் வேதிப்பொருள்களை குறிக்கிறது.

அந்த குறியீட்டு எண்கள் மற்றும் அது குறிக்கும் வேதிப்பொருள்கள்.....

E120-
கொச்சினில்
(cochineal)

E441-
ஜெலட்டின்
(gelatin)

E542-
எலும்பு பாஸ்பேட்
(bone phosphate)

E570-
ஸ்டெரிக் அமிலம்
(stearic acid )

E572-
மெக்னீசியம் ஸ்டிரேட் மற்றும்
கால்சியம் ஸ்டிரேட்
(magnesium stearate and calcium stearate)

E585-
பெர்ரோஸ் லாக்டேட் (ferrous lactate)

E620-
குளுட்டாமிக் அமிலம்
(glutamic acid)

E621-
மோனோசோடியம் குளுட்டாமேட்
(monosodium glutamate)

E626-
குவானிலிக் அமிலம்
(guanylic acid)

E631-
டைசோடியம் இனோசினேட்
(disodium  inosinate)

E635-
டைசோடியம் 5'-ரிபோநீக்ளியோ டைடுகள்
(disodium  5'-ribonucleotides)

E640 -
கிளைஸின் மற்றும் அது சார்ந்த சோடியம் உப்பு
(glycine and its sodium salt)

என்ன நண்பர்களே....
நீங்கள் சைவப்பிரியர் என்றால்,  சாப்பிடுவதற்கு முன் உணவு பாக்கெட்டை (பிஸ்கட்,மேகி,சிப்ஸ், பப்பிள் கம்,கேக்,சாக்லேட் என எதுவாகவும் இருக்கலாம்) கொஞ்சம் திருப்பி பாருங்கள்.

மேலே சொன்ன குறியீடுகளில்
ஏதேனும் ஒன்று இருந்தாலும்,அந்த உணவுப்பொருளில் அசைவம் கலந்திருக்கிறது என உணர்ந்து கொள்ளுங்கள்.

இது ஒருபுறம் இருக்க....இந்த வேதிப்பொருள்களால் ஏற்படுகிற விளைவுகள் இன்னும் தாராளம்.அது பற்றிய தகவல்களை விரிவாக
இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.

இவரைக் காணவில்லை.....