Friday, 30 September 2016

தள்ளுபடிகள் தாராளம்...எச்சரிக்கை..!!


இன்று முதல் விழாக்கால சலுகையாக
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பொருள்களை தள்ளுபடி விலையில் விற்கத்தொடங்கியிருக்கிறார்கள்.

நீங்கள் கவனமாக பொருள்களை தெரிவு செய்யுங்கள்...

திரும்ப பெறுதல் பாலிசி பொருந்தவில்லையெனில் அந்த பொருளை தவிர்த்துவிடுங்கள்...

முன்பணமாக செலுத்துவதை முடிந்தவரை தவிர்க்க முயலுங்கள்..

ஆபர் என்கிற பெயரில் பயன்படுத்தப்பட்ட குறைபாடுள்ள பொருள்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்,ஆகவே மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு ஷாப்பிங் செய்யுங்கள்...

நம்பகத்தகுந்த ஆன்லைன் தளத்தில் மட்டும் ஷாப்பிங் செய்து தரமான பொருள்களை பெறுங்கள்..

பொருள்களுக்கு இலவசம் தருகிறார்கள் என்றால் அதனை வாங்கும் முன் முழுவிவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்...

பொருள்களை தேவை கருதி வாங்குங்கள்.
குறைவான விலையில் கிடைக்கிறது மற்றும் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக வாங்காதீர்கள்...

இந்த விழாக்கால சலுகையை பயன்படுத்தி உங்களுக்கு
விருப்பமான மற்றும்
தரமான பொருள்களை வாங்கி அனைவரும் சந்தோசமாக இருக்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

சியோமி இந்தியாவின் திருவிழா கால தள்ளுபடி விலையில் மொபைல்கள்சியோமி இந்தியா திருவிழா காலங்களில் சலுகை விலையில் மொபைல் போன்களை விற்பது வழக்கம் அதன்படி,


நீங்கள் சியோமி மொபைல் நேசிப்பவராக இருப்பின் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர் இன்றுமுதல் ஆன்லைனிலில் திருவிழா கால விற்பனையை தொடங்குகிறார்கள்.

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

தியாகம் பெரிது....


தன் குழந்தை வரவுக்காக
பத்து மாதம் தவம் கிடக்கும்
தாயின் தியாகம் பெரிது....

நாட்டினை பாதுகாக்க
மழை வெயில் பாராது உழைக்கும் சிப்பாய்களின் தியாகம் பெரிது...

தன் தேச விடுதலைக்காக தன்னுயிர் தந்த தலைவன் மகாத்மா காந்தியின் தியாகம் பெரிது....

மூளைச்சாவடைந்த
தங்கள் பிள்ளையின் உடலுறுப்புகளை தானம் செய்து மற்றவர்க்கு உயிர்கொடுக்கும் பெற்றோர்களின் தியாகம் பெரிது...

பசுவுக்கு நீதி வழங்க
தன் மகனையே
தேரோட்டி கொல்ல உத்தரவிட்டு நீதியை நிலைநாட்டிய மனுநீதிசோழனின் தியாகம் பெரிது....

தன் சொத்தை விற்று
பெரியார் அணை எழுப்ப உதவிய வெள்ளைமனசுக்காரன்
பென்னி குயிக்கின் தியாகம் பெரிது....

தன் தேசத்திற்காக
ஆசைகளை துறந்த
அப்துல் கலாம் போன்ற
ஆயிரமாயிரம் பெரியவர்களின்
தியாகம் பெரிது....

எங்கோ பிறந்து
ஏழைத்தொழுநோயாளிகளின்
கண்ணீர் துடைக்க இந்தியா வந்த அன்னை தெரசாவின் தியாகம் பெரிது...

மக்களுக்காக
தங்கள் உடம்பை வருத்தி உழைக்கும் வர்க்கத்தினரின் தியாகம் பெரிது....

மெழுகைப்போல்
தங்களை உருக்கி
மற்றவருக்கு வெளிச்சம் தரும்
மனிதர்கள் ஏராளம்....ஏராளம்....

வாழ்வில் மறக்காது
மனதில் கொள்வோம்
அவர்களின் தியாகம் பெரிது என்று...


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Thursday, 29 September 2016

உங்கள் குழந்தையை தாலாட்டி தூங்கவைக்கும் பாடல்-2


அழுகிற உங்கள் குழந்தையை தாலாட்டி தூங்கவைக்கும் கிராமிய மணம் வீசும் பாடலினை கேட்க பின்வரும் லிங்கினை கிளிக் செய்யுங்க....
http://sh.st/1xUJE


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் குழந்தையை தாலாட்டி தூங்கவைக்கும் பாடல்-1அழுகிற உங்கள் குழந்தையை தாலாட்டி தூங்கவைக்கும் கிராமிய மணம் வீசும் பாடலினை கேட்க பின்வரும் லிங்கினை கிளிக் செய்யுங்க....
http://sh.st/1xR4B


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, 28 September 2016

மனமயக்கும் மஸ்கோத் அல்வா...


மஸ்கோத் அல்வா என்றதும் நம் நினைவுக்கு வருவது முதலூர்.
சரி முதலூர் எங்கிருக்கிறது ?

நம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிற மிக சிறிய ஊர்.

இந்த ஊர் தான் மஸ்கோத் அல்வாவுக்கு பெயர்போனது, காரணம் அதன் ருசி மற்றும் தரம்.

அத்தகைய ருசி மிகுந்த அல்வாவினை வீட்டில் செய்து பார்க்கலாமா...

தேவையான பொருள்கள்:
ஊறவைத்த உடைத்த சம்பா கோதுமை
தேங்காய் துருவியது
சீனி
முந்திரி
நெய்

மேற்கூறிய பொருள்கள் அனைத்தும் உங்கள் தேவைக்கேற்ப மறக்காதீங்க...

சரி வாங்க எப்புடி செய்யலாம்னு பார்க்கலாம்...

முதலில் ஒருநாள் இரவு ஊறவைத்த சம்பா கோதுமையை ஆட்டி கிடைக்கும் பாலை வடிகட்டி எடுத்து வச்சுக்குங்க..

அப்புறம் துருவிய தேங்காயினை சுடுநீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிற்பாடு மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ அரைத்து பின் வடிகட்டி பாலை எடுத்துக்குங்க..

அவ்வளவு தான் முக்கியமான வேலை முடிச்சாச்சு...

இனி அடுப்பை பத்தவைத்து முதலில் கடாயில் நெய் விட்டு அதில் முந்திரி முதலான அழகுபடுத்தும் பொருள்களை சிவப்பு செந்நிறம் வரும் வரை மிதமானா தீயில் வறுத்து வைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்...

அப்புறம் கடாயில் தேங்காய்ப்பால், கோதுமைப்பால், சீனி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக குறிப்பிட்ட இடைவெளியில் சேர்த்துக்கொண்டே ஒருபக்கம் விடாது கரண்டி கொண்டு கிண்டி கொண்டே இருக்கணும்...

ஒருபோதும் கிண்டுவதை நிறுத்தக்கூடாது.
கிண்ட கிண்ட கெட்டிபதம் அடையும் தருவாயில் தேங்காய் எண்ணெய் வாசனையுடன் மேலெழும்பி வரும் அதுதான் இறுதி நிலை.

இவை அனைத்தும் குறைந்த தீயில் அடுப்பை வைத்தே செய்யுங்கள். இல்லையேல் அடிபிடித்துவிடும் மறக்காதீங்க...

கமகம என தேங்காய் எண்ணெய் வாசம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடுங்க.

பின்னர் வறுத்த வைத்த முந்திரி முதலான பொருள்களை தூவிடுங்க,முடிந்தது வேலை.

சுவையான மனமயக்கும் மஸ்கோத் அல்வா உங்கள் வீட்டிலேயே தயார்.


சுவைக்க தயாரா...


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Tuesday, 27 September 2016

எச்சில் ஊறவைக்கும் கருப்பு தொதல் அல்வா..


என்னடா இது புதுசால்ல இருக்குனு நினைக்குறீங்களா ?

சரி வாங்க...தெரிஞ்சுக்குலாம்...

இந்த அல்வா பற்றி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பக்கம் போனீங்கனா தெரிஞ்சுக்குலாம். அங்கு இதற்கு பெயர் தொதல்..

குறிப்பா இந்த பகுதிக்கு இலங்கையோட மிக நெருங்கிய வணிக தொடர்பு இருந்ததாகவும், அதன் வாயிலாக அங்கு இருந்து இந்த இனிப்பு வகையானது இங்கு வந்ததாகவும் சொல்றாங்க.

எது எப்படியோ நமக்கு நல்ல ஒரு புதுவிதமான இனிப்பு கிடைச்சிருக்கு.

இதையே இந்த தீபாவளிக்கு செஞ்சு உங்க வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க

தேவையான பொருள்கள் :
தேங்காய்ப்பால்
ஊறவைத்த ஜவ்வரிசி
சீனி
கருப்பட்டி வெல்லம்
ஊறவைத்த மைதா பால்
முந்திரி
தேங்காய் எண்ணெய்
ஏலக்காய் பொடி

மேலே சொன்ன பொருள்கள் அனைத்தும் உங்கள் தேவைக்கு ஏற்ப மறந்துடாதீங்க....

சரி வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்...

விறகு அடுப்பு இருந்தால் நல்லது. முதலில் கடாயில் தேங்காய்ப்பாலை ஊத்துங்க. அப்புறம் ஊறவைத்த ஜவ்வரிசியை அதில் சேர்த்து கரண்டியை வைத்து விடாமல் கிண்டிக்கொண்டே இருக்கணும்.

அதற்கப்புறம் சீனியை சேருங்க, கிண்டுங்க.பிற்பாடு சுத்தப்படுத்திய கருப்பட்டி வெல்ல கரைசலை சேர்த்துடுங்க.
இதுதான் இந்த தொதல் அல்வாவிற்கு அடிப்படை நிறமாக கறுப்பினை தருகிறது.

இதெற்கு அடுத்ததாக ஒருநாள் இரவு ஊறவைத்த மைதா பாலினை சேருங்க, அவ்வளவு தான்.

நான் சொன்ன ஒவ்வொரு பொருளும் ஒருபக்கம் சேர்க்க சேர்க்க இன்னொரு பக்கம் கடாய் அடிபிடிக்காதவாறு கிண்டிக்கொண்டே இருக்கணும்.

மறந்துடாதீங்க இது முழுமையான பக்குவத்தை அடைய இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகும். ஆகவே பொறுமை மிகவும் அவசியம்.

இறுதியாக பதத்தை அடையும் தருவாயில் ஏலக்காய் பொடி முந்திரி சேர்க்கவும்.

அடுத்ததாக தேங்காய் எண்ணெய் சேர்த்து கிண்டி இறக்கிவிட வேண்டியதுதான்.

சுவையான தொதல் அல்வா இல்லை கருப்பு அல்வா தயார்...சுவைக்க தயாரா...


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இவரைத் தெரியுமா...?-2


பெரிய தலையுடன் பிறந்ததால் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார் என மருத்துவர்களால் கைவிடப்பட்ட குழந்தை...

சிறுவயதில் ஸ்கேர்லெட் காய்ச்சலால் காது கேட்கும் திறனை இழந்த சிறுவன்...

வறுமையின் காரணமாக ரயில் நிலையத்தில் செய்தித்தாள் விற்பனை மூலம் தன் தாயின் கஷ்டத்தை இளம்பிராயத்தில் பகிர்ந்து கொண்ட பள்ளி மாணவன்...

இந்த மாணவன் படிப்பில் தேறமாட்டான் என ஆசிரியர்களால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு, தன் தாயின் வழிகாட்டுதலால் படிப்பறிவினை பெற்ற அறிவாளி...

ஆயிரத்திற்கு மேல் தான் கண்டுபிடித்த அனைத்தையும் மனித குலத்துக்கு அர்ப்பணித்த அதிசய பிறவி...

முயற்சிகள் ஆயிரம் தடவை தோற்றாலும் முயற்ச்சிக்க ஒருபோதும் தவறக்கூடாது என்று நம்பிக்கை விதைத்த மாமனிதன்...

உலகிற்க்கு வெளிச்சம் கொடுக்க ஈராயிரம் தோல்விகள் சந்தித்தும் முயன்று ஜெயித்த மூத்தஞானி..

அவர் இறந்தாலும் அவர் கண்டுபிடிப்புகளால் மனிதகுலம் மறையும் வரை வாழ்ந்துகொண்டே இருப்பார்...

யார் என்று தெரியலையா ? நண்பர்களே..

இவர் தான் சினிமா, மின்சாரம் என மனிதன் அன்றாட வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருக்கும் பல ஆயிரம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ஆசிரியர்களால்
புறக்கணிக்கப்பட்டு
அன்புத்தாய் நான்ஸியால் அறிவூட்டப்பட்ட அதிசய விஞ்ஞானி

தாமஸ் ஆல்வா எடிசன்...

நான்சி என்கிற தாய்
இல்லை என்றால்
எடிசன் இல்லை..

எடிசன் இல்லை என்றால்  
இந்த  உலகிற்க்கு
வெளிச்சம் இல்லை...

இவரை மறக்கலாமா....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Monday, 26 September 2016

கலங்கடிக்கும் ஜிகினா...உங்களை
ஜிலிர்க்க வைக்கும்
இதன் பெயர் ஜிகினா...

உங்களை
மயங்க வைக்கும்
மந்திரச்சொல் ஜிகினா...

இனிப்புகளில்
சில்வர் கலரில் ஜொலிக்கும்
இந்த ஜிகினா...

ஜிகினா
தயாரிப்பை கேட்டால்
உங்கள் வயிறு கலங்குவது நிச்சயம்...
ஒரு இனிப்பு கூட
உங்க வாயினுள் நுழையாது...

ஆடு மாட்டு தோலை
அடித்து துவைத்து ஊறவைத்து கிடைக்கும் மெல்லிய
அடித்தோல் தான் இதற்கு ஆதாரம்...

அடித்தோலில்
சில்வர் பேப்பரை சுற்றி திணறத்திணற அடித்தால் கிடைப்பதே
ஜிலிர்க்க வைக்கும் ஜிகினா...

ஜிகினா ஒருபோதும்
ஜீரணிப்பதில்லை...

வாயைக்கட்டிவிடுங்கள்
இல்லையேல்
உங்கள் வயிறு மந்தமாகிவிடும்...

ஜிகினா
உங்கள் கண்களுக்குத்தான்
விருந்தே தவிர
வயிறுக்கல்ல...

ஆசையைத்தூண்டும் ஜிகினா
உங்கள்
ஆயுளை காலிசெய்திடும்...

சிந்திப்போம்..
சில்வர் முலாம் பூசிய ஜிகினா இனிப்புகளை தவிர்ப்போம்.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Sunday, 25 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-10


ஒருமுறை ஸ்பாஸ்க்கிக்கும் பிஷெருக்கும் இடையே நடந்த உலக சதுரங்க போட்டியில் கடும் போராட்டத்திற்கு பிறகு பிஷெர் வென்று சாம்பியன் ஆனார்.

அப்பொழுது எப்படி வென்றீர்கள்? என கேட்டதற்கு, பயிற்சி தான் என சுருக்குமாக சொல்லி முடித்தார்.

உடனே எவ்வளவு நேரம் செஸ்ஸில் பயிற்சி எடுப்பீர்கள் ? என கேட்டவுடன், நான் நீச்சல் பயிற்சி எடுப்பேன் என்றார்.

கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே பிஷெரிடம் நீச்சல் பயிற்சிக்கும் செஸுக்கும் என்ன சம்பந்தம்? என கேட்டனர்.

செஸ் என்பது மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டு. மூளை எப்பொழுதும் புத்துணர்வுடன் இருக்க பிராணவாயு அவசியம்.பிராணவாயு நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நுரையீரல் சிறப்பாக செயல்படவேண்டும்.

ஆகவே தான் நுரையீரல் சிறப்பாக செயல்பட நீச்சல் பயிற்சியினை கடுமையாக மேற்கொண்டேன்.
அதன் வாயிலாக என் எனெர்ஜியை மேம்படுத்தி செஸ்ஸில் வெற்றிபெற்றேன் என்றார் பிஷெர்.

மாற்று சிந்திப்பவன்
ஒருபோதும்
தோற்பதில்லை என்பதற்கு மிகச்சரியான உதாரணம்
இந்த சம்பவம்.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அர்த்தமுள்ள சம்பவம்-9


ஒருவன் தனக்காக உழைத்து வந்த மாடு முதிர்ச்சியின் காரணமாக ஒழுங்காக வேலை செய்ய மறுத்தது.
இதனால் மனம் வெதும்பி ஒருவழியாக அந்த மாட்டை விற்க முடிவு செய்து சந்தைக்கு ஒட்டி கொண்டு போனான்.

அங்கு மாடு நீண்ட நாள் எனக்காக உழைத்தது. இப்போது அதற்கு வயதாகி விட்டதால் அது வேலை செய்ய மாட்டிக்கிது ஆகவே, அதனை விற்கிறேன் யாராவது உங்களுக்கு தேவை என்றால் வாங்கி கொள்ளுங்கள் என உண்மையை சொல்லி கூவினான்.

யாரும் வாங்குவதாக இல்லை.
இது அவனை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.அப்பொழுது அவன் நண்பன் அங்கு வந்தான்.என்ன பிரச்சினை என அவனிடம் கேட்க, அவனும் நடந்ததை சொல்லி வருந்தினான்.

உடனே அவன் நண்பன்,
உனக்கு உன் மாடு விற்கணும் அவ்வளவு தானே !
நான் உனக்கு விற்று தருகிறேன், என்று சொல்லிவிட்டு மாட்டை பற்றி புகழ்ந்து சொல்ல முடிவு செய்தான்.

அதாவது இந்த மாடு ராசியானது, இந்த மாடு உங்கள் வீட்டில் இருந்தால் போதும் செல்வம் வந்து சேரும்,அவருக்கு சிறு பணப்பிரச்சினை, ஆகவே விற்க முடிவு செய்துள்ளார் என கூவினான்.

அவ்வளவுதான் ஆளாளுக்கு பேரம் பேச ஆரம்பிக்க ஒருவழியாக மாட்டை நல்ல விலைக்கு ஒருவருக்கு விற்று அந்த பணத்தை தன் நண்பரான மாட்டின் உரிமையாளரிடம் கொடுத்தான்.

அவனுக்கு தன் வயதான மாடு அதிக விலைக்கு போனதால் சந்தோஷத்தில் திளைத்தான்.

அவன் நண்பரோ கமிஷனை பெற்று கொண்டு அடுத்த நபரிடம் சென்றுவிட்டான்.

நண்பர்களே!
உண்மையாக மட்டும் இருந்தால் போதாது....
சாதுர்யமும் வேண்டும் தானே.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

வந்தாச்சு அடுத்த தேர்தல் திருவிழா....


தமிழக உள்ளாட்சி தேர்தல்களுக்கான தேர்தல் தேதிகளை மாநிலத்தேர்தல் ஆணையர் அறிவித்தார். அதன்படி 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர-21 ல்  முடிவுகள் அறிவிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.ஆகையால் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான பதவிக்காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் மட்டும்
12 மாநகராட்சிகள்,
124 நகராட்சிகள்,
31 மாவட்ட பஞ்சாயத்துகள்,
385 பஞ்சாயத்து யூனியன்கள்,
528 பேரூராட்சிகள்,
12,524 கிராம பஞ்சாயத்துகள், உள்ளன. இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன.

இந்த முறை வார்டு கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளுக்கு மட்டும் நேரடித் தேர்தல் நடக்கிறது.

மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மொத்தம் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

மறக்காமல் வாக்களியுங்கள்..

பணத்தை பெற்று கொண்டு உங்கள் ஓட்டை விற்காதீர்கள்...

மீண்டும் ஏமாறாதீர்...
நம்மில்
நல்லவரை தேர்ந்தெடுப்போம்...
நம் பகுதி பிரச்சினைகளை தீர்ப்போம்.
Saturday, 24 September 2016

இவரைத் தெரியுமா...? -1


நம்மூரில் மரம் நடுவதாக சொல்லி நடாமலேயே போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அரசியல்வாதியை பார்த்திருக்கிறோம்.
ஆனால் இவர் உண்மையிலேயே மூன்று கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு தன் நாட்டுக்கும் மட்டும் அல்ல; இந்த உலகுக்கே முன்னுதாரணமாய் திகழும் பெண்மணி...

கறுப்பர் இனத்தில் சாதாரண குடும்பத்தில் உதித்த சூரியபுத்ரி..

தன்னுடைய நாட்டு காடுகள் அழிக்கப்பட்டு செழிப்பை இழந்துவருவதை தடுக்க
"க்ரீன் பெல்ட் மூவ்மெண்ட்" என்கிற இயக்கத்தை முன்னெடுத்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்க புறப்பட்ட சூறாவளி...

முதல் முயற்சியிலே மற்றவர்க்கு முன்னுதாரணமாய் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்ட அசராத பெண்மணி...

தன்னுடைய நாட்டு காடுகளை அழித்து தொழிற்சாலை அமைக்க வந்த வெளிநாட்டு கம்பெனியை மக்களை திரட்டி விரட்டி அடித்த வீரமங்கை...

தேர்தலில் மக்கள் ஆதரவுடன் போட்டியிட்டு வென்று தான் விரும்பிய சுற்றுப்புற சூழல் துறைக்கு அமைச்சர் ஆனவர்...

ஒருவருக்கு பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால் ஒரு ஏக்கர் நிலம் முழுக்க மரம் நட வேண்டும் என சட்டம் கொண்டுவர திட்டமிட்டு முயற்சி செய்பவர்...

"மரங்கள் வைக்கும்போது தான் நம்பிக்கை விதைகளை ஊன்றுகிறோம்.இதுவே நம் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் விட்டு செல்லும் சொத்து" என சொன்னவர்..

யாரும் செய்யத்துணியாத அடிமைப்பட்டு கிடந்த கறுப்பினத்தில் இருந்து வந்து உலகை திரும்பி பார்க்க செய்த இந்த பெண்மணி அமைதிக்கான நொபேல் பரிசினை பெற்றவர்..

யார் என தெரியலையா ?

இவர்தான் கென்யா தேசத்தில் உதித்த ஒளிக்கீற்று
வாங்கரி மாத்தாய்....

இவரை மறக்கலாமா....
நினைவில் கொள்வோம்...
நாமும் அவரது பணியை நம் நாட்டிலும் தொடர்வோம்.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அர்த்தமுள்ள சம்பவம்-8


மறைந்தும் வாழும் மனிதன் ஆல்ப்ரெட் நோபேல் ....

ஒருநாள் காலையில் செய்தித்தாளை பார்த்ததும் நோபேலுக்கு அதிர்ச்சி. அதற்குக்காரணம் அந்த செய்தியில் டைனமைட் கண்டுபிடித்த மரணவியாபாரி மறைந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததுதான்.

இந்த செய்தியில் குறிப்பிட்டு இருந்த மரணவியாபாரி என்கிற வார்த்தை அவர் மனதில் ஆறாத வடுவாக மாறியது.

தான் வெடிமருந்து கண்டுபிடித்ததால் தானே இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே வெடிமருந்து கண்டுபிடித்ததனால் கிடைத்த மொத்த பணத்தையும் பொதுநலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்கிற நினைப்பில் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

அந்த அமைப்பு அமைதிக்கு மட்டும் அல்லாது பல துறையில் சிறப்பாக செயல்படுவோருக்கு இன்றும் அவர் நினைவாக அவரது பெயரிலேயே
வழங்கப்பட்டு வருகிற   உலகப்புகழ்பெற்ற நோபேல் பரிசு.

இன்று யாராவது மரணவியாபாரி என்பார்களா நொபேலை....

மரணித்தும் வாழ்கிறார் மாமனிதாய்....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

நம்பினால் நம்பு....


அந்த காலத்தில் நம் வைத்தியர்கள் கடைபிடித்ததாக நான் படித்த செய்தி என்னை ஆச்சிரியப்படுத்தியது.

அது என்னவென்றால்,
இன்றைய காலத்தில் நமக்கு நோய் வந்தால் உடனே மருத்துவர் லேபிற்கு நம்மை அனுப்பி ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மருத்துவம் செய்வார்.

ஆனால் அன்றோ மருத்துவ வசதி இல்லாத காலத்தில் நோயாளியின் காதில் வரும் கழிவுப்பொருளான குரும்பியினை சுவைத்து பார்த்து,
"இனிப்பாக இருந்தால் உடலுக்கு நோய் உள்ளது"எனவும்,"கசப்பாக இருந்தால் உடலுக்கு நோவு இல்லை" எனவும், அதற்கேற்றவாறு மருத்துவம் பார்ப்பாராம் மருத்துவர்.

உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியாது.ஆனால் நம் முன்னோர்கள் கடைபிடித்த மருத்துவ சோதனை தான் ஆச்சிரியப்படுத்துகிறது.

இந்த செய்தி முழுக்க முழுக்க தெரிந்து கொள்வதற்கு தானே தவிர முயற்சி செய்வதற்கல்ல...


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Friday, 23 September 2016

ஆண்டவன் கட்டளை-சிரிக்கலாம் சிந்திக்கலாம்....
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங், யோகிபாபு, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தின்  விமர்சனத்தை காண கீழ்கண்ட வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க...
http://sh.st/MJLdP

அபுமலை ஒரு அதிசயம்.....


வறண்ட பாலை மாநிலத்தில் வானுயர்ந்து நிற்கும் மலைவாசஸ்தலம்...

சுற்றிப்பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலம்....


அனைவரும் அதிசயிக்க 
பளிங்கியில் பளபளக்கும் 
தில்வாரா கோயில்....


மன அமைதிக்கு 
ஓம் ஷாந்தி பவன்....


படகு சவாரிக்கு 
நக்கி லேக்...


சாமிதரிசனம் செய்ய 
அற்புத தேவி கோயில்...

மறக்காமல் 
செல்லவேண்டிய 
மலைவாசஸ்தலம் 
இந்த மவுண்ட் அபு...

தேனிலவு செல்ல 
தெரிவு செய்யலாம் 
தயங்காமல்...

எந்த மாநிலம் 
என்று தெரிகிறதா? 
பாலைக்கும், வெயிலுக்கும் கோட்டைக்கும்,பாரம்பரியத்திற்க்கும் 
பெயர் போன நம் ராஜஸ்தான்..

ஆச்சிரியம் 
உங்களுக்கு மட்டுமல்ல 
எனக்கும் தான்...

அபுமலை 
நிச்சயம் அதிசயம் தான்....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Thursday, 22 September 2016

தொடரி-வேகம் இல்லாத வண்டி....

 
தனுஷ் மற்றும் பிரபு சாலமோன் இணைந்திருக்கும் முதல் படம்.
ரயில் பயணத்தை மட்டுமே முழுமைப்படுத்தி எடுத்த முதல் படம் என்கிறார்கள்.
இந்த படம் எப்புடி இருக்கு என அறிய கீழ்காணும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க....
http://sh.st/MDzWi

Wednesday, 21 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-7


ஒருநாள் படிக்கல்லானது கற்சிலையை பார்த்து கேட்டது,

"நீயும் நானும் ஒரே இடத்தில் இருந்து தான் வந்தோம்,ஆனால் உன்னை மதிக்கிறார்கள் என்னை மட்டும் ஏன் மிதிக்கிறார்கள் என்று"

உடனே கற்சிலை சொன்னது, சிற்பியின் உளியினால் ஏற்பட்ட வலியினை பொறுத்து கொண்டேன்,ஆதலால் நான் உயர்ந்து நிற்கிறேன்.

ஆனால் நீயோ,
உளியின் வலி பொறுக்காது உடைந்து போனாய்,ஆகவே தான் நீ
படிக்கல்லாய் படுத்து கிடக்கிறாய் என்று.

சரிதானே நண்பர்களே வலியில்லாமல் வாழ்க்கை உண்டோ...


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

காகத்திடமும் கற்கலாம்......அண்டவெளியை
அன்றாடம் 
சுத்தம் செய்யும் 
ஆகாயசூரன்...

தன் எச்சத்தின் மூலம் 
விதை தூவி 
தரணியை தழைக்கச்செய்த பசுமைப்புரட்சியாளன்...

அசுத்தத்தை 
அகந்தையில்லாமல் அப்புறப்படுத்தும் அஞ்சாநெஞ்சன்....
நீயில்லையேல்
நாறிப்போய்விடும் நம்நாடு....

கொஞ்சம் நீருள்ள பானையில் 
கல் நிரப்பி 
அதன் மூலம் நீரை மேலெழுப்பி 
தன் தாகம் தணித்து 
அனைவருக்கும் 
அறிவு புகட்டிய அறிவாளி...

மின்சாரக்கம்பியில் 
சம்சாரத்துடன் கூடுகட்டி 
பயமில்லை எனக்கென்று  
பறைசாற்றிய பங்காளி...

மரணித்தால் கூட 
கூக்குரலிட்டு கூட்டத்தைக்கூட்டி 
ஒப்பாரி வைத்து 
ஒற்றுமையை 
உலகிற்கு உரைத்தவன்...

தான் தனியாக கத்தினால் 
நல்லது நடக்கும்..
கூட்டமாக கத்தினால் 
கெட்டது நடக்கும் என 
மக்கள் நம்பிக்கை பெற்ற  நாயகன்...

உன்னை மறக்கலாமா 
உயிர் உள்ளவரை... 
ஆகவேதான் 

சனிதோறும் சாப்பாடு வைக்கிறார்களோ! உனக்கு.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Tuesday, 20 September 2016

இனி ஈஸியா ஷேர் செய்யலாம் வாங்க....


உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து உங்கள் நண்பர் மொபைலுக்கு எளிதில் விரைவாக இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் அனைத்துவிதமான பைல்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் இந்த செயலியின் மூலமாக. மேலும் இந்த ஷேர் ஆப் பற்றி விவரம் அறிய ஏதேனுமொரு பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க...
http://sh.st/MExJK
http://adf.ly/1e8P3f


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

எளிமையான ஏர்டெல் மொபைல் செயலி


ஏர்டெல் மொபைல் நெட்ஒர்க் தனது வாடிக்கையாளர் வசதிக்காக எளிதில் பயன்படுத்த கூடிய myairtel
என்கிற மொபைல் செயலியினை வெளியிட்டுள்ளது.இந்த செயலியின் முழுவிவரம் அறிய கீழே உள்ள ஏதேனுமொரு வீடியோ லிங்கினை கிளிக் செய்யுங்கள்..
http://sh.st/MExak
http://adf.ly/1e8OcQ


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கைபேசி வங்கி....எஸ்பியை வங்கியானது தனது வாடிக்கையாளர் வசதிக்காக இணையதள வங்கி சேவையினை கைபேசி வாயிலாக பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு செயலியினை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி விவரம் அறிய கீழே உள்ள   ஏதேனுமொரு வீடியோ லிங்கினை அழுத்துங்கள்....
http://sh.st/MEznb
http://adf.ly/1e8NgS


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையாளர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்...என் வலைப்பூவிற்குள்
வந்து செல்லும்
வாசகர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்...

நீங்கள் பார்த்து செல்லும்
தளமாக இல்லாமல்
உங்கள்
பார்வைத்தடத்தை
கருத்துப்பதிவின் மூலம்
பதியலாமே...

உங்கள் உணர்வினை
பதிவின் இறுதியில்
டிக் செய்து
வெளிப்படுத்தலாமே...

உங்கள் பார்வை மட்டும்
போதாது,
கருத்து பகிர்வும் வேண்டும்
என்கிறேன்...

உங்கள் விமர்சனமே
என் பதிவுகளின் தரத்தினை
மேம்படுத்த உதவும் என்கிற நம்பிக்கையோடு...

என்றென்றும்
உங்கள் ஆதரவை
எதிர்நோக்குகின்ற நண்பன்...

அர்த்தமுள்ள சம்பவம்-6


ஒரு நாள் தீடீர் என புயல் மழை அடிக்க பல ஆண்டாக உயர்ந்து வளர்ந்த மரம் அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பெயர்ந்து கீழே விழுந்துவிட்டது.

மரத்தின் அருகில் இருந்த நாணலோ ஒன்றும் நடக்காதது போல நின்றுகொண்டு இருந்தது. அப்போது நாணலை பார்த்து என் நிலையை பார்த்தாயா?

இத்தனை காலம் இங்குள்ள அனைவருக்கும் நிழல் கொடுத்தேன்,கனி கொடுத்தேன், ஒதுங்க இடம் கூட கொடுத்தேன்.
இன்று வேர் அறுந்து வீழ்ந்து கிடக்கிறேன்,என வேதனையுடன் கூறியது.

எல்லாம் சரிதான். ஆனாலும் நீ தவறிழைத்து விட்டாயே ! என்றது நாணல்.
அப்படி நான் என்ன பெரிய தவறு
இழைத்துவிட்டேன்? என கோபத்துடன் கேட்டது வீழ்ந்த மரம்.

நீயே சொல்,
உன்னைவிட பலசாலியான புயல்மழையை எதிர்த்து நிற்கலாமா ?
எதிர்த்து நின்றாய்,அதனால் வீழ்ந்தாய்.

என்னைப்பார் வளைந்து வழிவிட்டேன் எனக்கு எந்த துயரமும் இல்லை.

நம் பலம்
நமக்கு தெரியும் தானே
நண்பர்களே....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Monday, 19 September 2016

நினைத்து பார்க்கிறேன்


அம்மாவிடம்
அழுது அடம்பிடித்து
நாலணா வாங்கிக்கொண்டு
நாடார் கடைக்கு
மூச்சிரைக்க ஓடுவேன்
மிட்டாயி வாங்க....

ஒருவழியாக
பத்து பைசாவுக்கு கல்கோனா.. இன்னொரு பத்து பைசாவுக்கு தேன் மிட்டாயி..
கடைசியா அஞ்சு பைசாவுக்கு
சூட மிட்டாயினு..
கால் ரூபாயும் காணாம போயிரும்...தேன் மிட்டாய் தேவாமிர்தமாய் வாய்முழுக்க இனிக்கும்.
பல் லேசாக பட்டால்
கரைந்து காணாமல் போய்விடும்...


கல்கோனா கல்லை போன்றது.
வாயில் வைத்தால் போதும்
உமிழ்நீரும் ஊற்றெடுக்கும்
பல்லுக்கு பகையாளி...


சூடமிட்டாய் சுல்லென எரியும்
ஆனாலும்
சிறிது நேரத்தில்
கற்பூரமாய் கரைந்து போகும் உமிழ்நீரில்....

அன்றைய  தேன் மிட்டாய்
இன்று தேன்குழல்..
அன்றைய கல்கோனா
இன்று கம்மர்கட்..
அன்றைய சூடமிட்டாய்
இன்று மெந்தால்...

பேரும் ருசியும்
காணாமல் போனது இன்று..
ஆதலால்
நினைத்து பார்க்கிறேன்.......

உங்களுக்கும் அனுபவம் இருந்தால் கருத்தினை பகிரலாமே....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

மெலிதான மோட்டோ 4ஜி பிலே மொபைல் விமர்சனம்
லெனோவா அறிமுகப்படுத்தியுள்ள புதிய மெலிதான மொபைல் தான் இந்த மோட்டோ 4ஜி பிலே.
இது அமேசான் இணையத்தளத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த மொபைலினை பற்றி விவரம் அறிய பின்வரும் வீடியோ தொடர்பினை கிளிக் செய்யுங்க....
 Moto g4 play mobile unboxing video link:
 http://sh.st/Mk2We
 Moto g4 play mobile support OTG or not?  video link:
 http://sh.st/Mk3Jl


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அர்த்தமுள்ள சம்பவம்-5பிரபல உணவுவிடுதிக்கு ஒரு நாள் ஒருவர் சாப்பிட செல்கிறார். அப்போது மிகவும் சாதாரண உடை அணிந்திருந்தார்.
அவர் சர்வரை அழைத்தாலும் அவர் இவரது தோற்றத்தைப்பார்த்து ஒழுங்கான முறையில் உணவினை வழங்கி உபசரிக்கவில்லை. ஒருவழியாக அசௌகரியத்துடன் சாப்பிட்டு முடித்தார்.

பின்னர் சர்வர் பணம் வேண்டி பில்லை நீட்டினார். அவரோ பில்லுக்கு உரிய தொகையை காட்டிலும் கூடுதலாக நூறு ரூபாய் கொடுத்தார் .
அவனுக்கோ ஆச்சர்யம் !! ஒருவேளை பணக்காரராக இருப்பாரோ ? என நினைத்துவிட்டு தன் தவறுக்கு மனதுக்குள்ளேயே வருந்தினான்,நன்றாக கவனித்து இருந்தால் இன்னும் கூடுதலாக பணம் கொடுத்திருப்பாரென்று.

சில நாட்களுக்கு பிறகு அதே உணவுவிடுதிக்கு அவர் சாப்பிட சென்றார். அதே சர்வர் ஆனால் போனமுறையை விட பிரமாதமாக உணவினை உபசரித்தார். சாப்பிட்டு முடித்தபின் டிப்ஸாக ஐந்து ரூபாய் மட்டுமே கொடுத்தார்.

அப்போது அந்த சர்வரிடம் ,
இது நீ அன்று எனக்கு உபசரித்ததற்க்கு.அன்று  கொடுத்தது இன்று நீ செய்த உபசரிப்பிற்கு என்றார் பாருங்கள்.
உடனே சர்வர் தன் தவறிற்கு மன்னிப்பு கேட்டான்.ஆனால் அவர் பொருட்படுத்தவேயில்லை.

ஒருவர் தோற்றத்தை வைத்து எடைபோடுவது தவறு தானே நண்பர்களே.....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Sunday, 18 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-4


பேராசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு
கவலை மற்றும் பிரச்னைகள் பற்றி் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது நாற்காலியில் பெரியதும் சிறியதுமாக வெவ்வேறு கற்களை
வைத்திருந்தார்.அவை எளிதில் கையால் தூக்கக்கூடியவே.

சிறிது நேரத்தில் மாணவர்களை பார்த்து இந்த கற்களை உங்களால் தூக்க இயலுமா ? என்றார்.
உடனே மாணவர்கள் உறசாகமாய் தலையசைத்து ஆளுக்கொரு கல்லை எடுத்தார்கள்.எடுத்த கல்லை கையில் வைத்து நீட்டி பிடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
அவர்களும் சந்தோசமாக எளிதாகத்தான் இருக்கிறது,அவ்வளவு ஒன்றும் கனமாக இல்லையே ! என்றனர்.

அப்படியா? என்று கேட்டுவிட்டு பேராசிரியர் வேறு வேலையில் மூழ்கிவிட்டார்.

நேரம் ஆக ஆக மாணவர்கள் கை வலிக்கிறது,கல்லை பிடித்து கொண்டு நிற்கமுடியவில்லை என முனங்க ஆரம்பித்தார்கள்.

அப்போது பேராசிரியர் அங்கு வந்து அவர்களை பார்த்து,
வாழ்க்கையில் கவலைகளும் பிரச்சனைகளும் இப்படித்தான்.. சிறிதாக இருந்தாலும் மனதிலே சுமந்து கொண்டிருந்தால் பாரமாகத்தான் இருக்கும். ஆகவே அந்தந்த நேரத்தில் சமாளித்து விடுங்கள்.மாறாக சுமந்து கொண்டே திரிந்தால் உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களை விட்டு காணாமல் போய்விடும்.

பிரச்சனை சிறிது தானே என்று இனி உங்கள் மனதில் தேக்கி வைக்கமாட்டீர்கள் தானே....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Saturday, 17 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-3குருவிடம் ஒருவன் வந்து அய்யா எனக்கு வாழ்க்கை முழுவதும் பிரச்சினையாக இருக்கு ஆகவே இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு வழி சொல்லுங்க சாமி என்றான்.

உடனே குரு சிரித்தார்.பின்னர் கொஞ்சம் யோசித்துவிட்டு சரி என்னுடன் நீ வா,நான் உனக்கு பிரச்னையில்லாத மனிதர்களையும், இடத்தையும் காட்டுகிறேன் என அழைத்து சென்றார் .
அவனுக்கு ஒன்றும் புரியல எங்கு கூட்டி செல்கிறார் என்று.

கொஞ்சநேரத்தில் அவன் அதிர்ச்சியாகி விட்டான்.காரணம் குரு கூட்டிச்சென்ற இடம் கல்லறைத்தோட்டம்.
உடனே குரு அவனை ஆசுவாசப்படுத்தி அவனிடம்,இந்த கல்லறைக்குள் இருக்கும் மனிதர்களுக்கு தான் பிரச்சனையே கிடையாது.
அவ்வாறு உனக்கு இருக்க விருப்பமா ? விருப்பம் என்றால் சொல் என்றார் பாருங்கள். தலைதெறிக்க ஓடியே போய்விட்டான் அவன்.

நீங்களே சொல்லுங்க பிரச்சனை இல்லாத மனிதன் யாராவது இருக்கிறானா?


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அர்த்தமுள்ள சம்பவம்-2


ஒரு முதலாளிக்கு தனது கம்பெனியின் முக்கியமான பதவிக்கு யாரை நியமிப்பது என்கிற மிகப்பெரிய குழப்பம்.ஒருவழியாக நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார்.
மூன்று பேர் நேர்காணலுக்கு ஒரே தகுதியுடன் வந்திருந்தனர்.மூன்று பேரையும் தனித்தனியாக அழைத்து ஒரே கேள்வியை முன்வைத்தார்.
அதாவது இன்று மதுரை எக்ஸ்பிரஸ் தாமதமாக போகும்னு சொல்றாங்க அதை விசாரிச்சு சொல்லுங்க என்று.

உடனே முதலாம் நபர் வந்தார்.பத்து நிமிடம் தாமதமாகுமாம்,போனில் கேட்டேன் என்றார்.

அரைமணி நேரம் கழித்து இரண்டாம் நபர் வந்தார்.ஏதோ விபத்தாம் அதான் தாமதம்,நான் ஸ்டேஷன்ல விசாரிச்சேன் என்றார்.

மூன்றாவது நபர் ஒரு மணிநேரம் கழித்து வந்தார்.அய்யா வண்டி தாமதமாக தான் போகுது.அதே நேரம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் சரியான நேரத்துக்கு போகுது. டிக்கெட் கூட இருக்கு உங்களுக்கு புக் பண்ணனும்னா புக் பண்ணலாம் அய்யா என்றார் விவரமாக.

நீங்களே சொல்லுங்கள் இந்த மூவரில் யாருக்கு அந்த முக்கியமான பதவியை வழங்கியிருப்பார் என்று ?

வேற யாருக்கு அந்த
மூன்றாவது நபருக்கு தான்....

முழுமையாக தெரிந்தவனுக்கே எங்கும் முன்னுரிமை மறந்துடாதீங்க.
மூன்றாவதாக வந்தாலும்....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அர்த்தமுள்ள சம்பவம்-1ஒரு நாள் சீடன் ஒருவன் குருவிடம் வந்து எனக்கு அதிகளவு கஷ்டம் உள்ளது என்றான் . உடனே குருவானவர் அவனுக்கு பதில் சொல்லாமல் தனித்தனியாக மூன்று அடுப்புகளை பற்ற வைத்து அதில் மூன்று பானைகளில் முழுமையாக நீரை நிரப்பி கொதிக்க வைத்தார்.

பிறகு முட்டை,காரட், காபிக்கொட்டை என தனித்தனியாக ஒவ்வொரு பானையிலும் போட்டுவிட்டு சீடனை உற்று பார்க்க சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியல.சிறிது நேரம் கழித்து குரு அடுப்பை அணைத்தார்.

ஒவ்வொரு பானையிலிருந்தும் ஒவ்வொரு பொருளாக எடுத்தார். குறிப்பாக முட்டை வெந்து இறுகி இருந்தது. காரட் கொழகொழவென இருந்தது. காப்பிக்கொட்டை மட்டும் மணமிக்க பருகக்கூடிய காபி பானமாக மாறியிருந்தது.

அப்பொழுது சீடனை கூப்பிட்டு இப்ப பார்.. கடினமாக இருந்த காரட் கஷ்டத்தில் குழைந்து போய் விட்டது.
உடைந்து விடுவோமோ என்றிருந்த முட்டை வெந்து இறுகி தன் இயல்பை இழந்துவிட்டது. ஆனால் காப்பிக்கொட்டை மட்டும் தன்னை கொதிக்க வைத்த நீரையே சுவைமிகு காபி பானமாக மாற்றிவிட்டது.

ஆக நீ கஷ்டம் வரும் போது காப்பிக்கொட்டையாக இரு உன் இன்னல்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாது போய்விடும்.

ஆக நீங்களும்
காப்பிக்கொட்டையாக மாறி
இருக்கும் இடத்தில்
மணம் பரப்புவீர்களா....

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Friday, 16 September 2016

மலிவான விலையில் மற்றுமொரு சியோமியின் புதுவரவு ரெட்மி நோட் 4


சியோமி நிறுவனம் இந்தியாவில் குறுகிய காலத்தில் மிக வேகமாக பிரபலமாகி வருகிறது.அதற்கு முக்கிய காரணம் குறைந்த விலையில் கவர்ச்சிகரமான புதிய வசதிகளை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களை வெளியிடுவது.அந்த வரிசையில் புதிதாக ரெட்மி நோட் 4 யினை இந்த மாத இறுதியில் மலிவான விலையில் வழங்குவதாக அறிவித்துள்ளது.இதன் விலையானது இந்திய ரூபாய் மதிப்பில் 9000 இருந்து 13000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே சியோமி ரெட்மி நோட் 3  பெரும் விற்பனையை ஈட்டி தந்தது.அதே போலவே ரெட்மி நோட் 4 ம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொபைலில் உள்ள வசதியினை பின்வரும் பகுதியில் பாருங்கள்......

NETWORK
GSM / CDMA / HSPA / EVDO / LTE

Body Dimension
151 x 76 x 8.4 mm (5.94 x 2.99 x 0.33 in)

Weight
175 g (6.17 oz)

SIM
Dual sim (Micro-sim/Nano-sim, dual stand-by)

DISPLAY
IPS LCD capacitive touchscreen, 16M colors

SCREEN
Screen size:5.5 inches
Screen resolution:1080 x 1920 pixels (401 ppi pixel density)
Multi touch: Yes

operating system
Android OS, v6.0 (Marshmallow)
MIUI 8.0 platform

Processor
Mediatek MT6797 Helio X20
CPU:Deca-core 2.1 GHz
GPU:Mali-T880 MP4

MEMORY
microSD, up to 256 GB (uses SIM 2 slot)
16 GB, 2 GB RAM - Standard edition
64 GB, 3 GB RAM - High  edition

CAMERA
Primary: 13 MP, f/2.0, phase detection autofocus, dual-LED (dual tone) flash
Features:Geo-tagging, touch focus, face/smile detection, HDR, panorama
Video:1080p@30fps, 720p@120fps
Secondary:5 MP, f/2.0, 1080p

SOUND
Vibration,MP3, WAV ringtones
Loudspeaker:Yes
3.5mm audio jack:Yes - 24-bit/192kHz audio,Active noise cancellation with dedicated mic

CONNECTIVITY
Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot
Bluetooth:v4.2, A2DP, LE
GPS:Yes, with A-GPS, GLONASS, BDS
Infra red:Yes
USB:microUSB v2.0, USB On-The-Go

FEATURES
Sensors:Fingerprint, accelerometer, gyro, proximity, compass
Messaging:SMS(threaded view), MMS, Email, Push Mail, IM etc
HTML5 browser
Java-no
XviD/MP4/H.265 player
MP3/WAV/eAAC+/Flac player
Photo/video editor
Document viewer

BATTERY
Fast battery charging technology
Non-removable Li-Po 4100 mAh

COLORS
Silver, Gray, Gold

மலிவான விலை கொண்ட  இந்த மொபைல்களை ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் என்பதனை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
எல்லாம் சரி....
நீங்க வாங்க தயாராகிட்டிங்களா....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.உளவியல் தந்தையின் உன்னத வரிகள....

பகுப்பாய்வு உளவியலின் தந்தை

கார்ல் ஜங் இன் பொன்மொழிகள்....

நம்மால் எதையும்
மாற்ற முடியாது
அதை நாம்
ஏற்றுக்கொள்ளும் வரை....

வாழ்க்கையில்
அர்த்தமற்ற
பெரிய விஷயங்களை விட
அர்த்தமுள்ள
சிறிய விஷயங்களே
மதிப்பு மிக்கது.....

மனிதனுக்கு கஷ்டங்கள் தேவைப்படுகிறது
அதுவே
அவன் ஆரோக்கியத்திற்கு அவசியமாகிறது....

வெளிப்புறத்தை காண்பவர்களே
கனவு காணுகிறார்கள்.
உள்மனதை காண்பவர்கள் எப்பொழுதும்
விழிப்புடனே இருக்கிறார்கள்....

மனிதனுக்கு
வலி இல்லாமல்
உணர்வுநிலை
ஏதும் வருவது இல்லை...

அன்பு இருக்கும் இடத்தில் அதிகாரத்திற்கு இடமில்லை.
அதிகாரம் இருக்கும் இடத்தில்
அன்பிற்கு வேலை இல்லை....

மேலே குறிப்பிட்டுள்ள பொன்மொழிகள்
உங்கள் வாழ்க்கைக்கு வலுசேர்க்கும் என்கிற நம்பிக்கையோடு..💃


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


தாயை தவிக்க விடலாமா தம்பி விக்னேஷ்....
தம்பி
இந்த வயதில்
தாயை
தவிக்கவிடலாமா....

உன் முகம் பார்த்தால்
காவிரித்தாய் கூட
கண்ணீர் வடிப்பாளே...

உன் நோக்கம் பெரிது
அதற்காக
உன் உயிருக்கே
உலை வைக்கலாமா...

ஏனடா தம்பி
மீண்டும் ஒரு முத்துகுமாராய் மாறிப்போனாய்...

உரிமைக்காக
உன்னையே
தீயில் உருக்கியது ஏனோ....

வாழ வேண்டிய வயதில்
ஏன்
வாக்கரிசிக்கு ஆசைப்பட்டாய்...

மற்றவர்க்கு
முன்னுதாரணமாய்
இருக்கவேண்டிய நீ
முன்னே செல்லலாமா....

தண்ணீருக்காக போராடி
எங்களை
கண்ணீரில் அல்லவா
மிதக்க விட்டுவிட்டாய்....

இந்த காவிரியின்
பெயரால்
இன்னும் எத்தனை காவோ.....

தம்பி விக்னேஷிற்கு
என் வீரவணக்கம்.

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Thursday, 15 September 2016

ஜியோ ஆபருக்கு ஆதரவளிக்கும் மொபைல் மாடெல்கள்....


ஜியோ ஆபர் சப்போர்ட் செய்யக்கூடிய மொபைல் நிறுவனங்களையும் மற்றும் அந்த கம்பெனி மொபைல் மாடெல்களையும் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அவையாவன......

Samsung
Micromax
Karbonn
Lava
HTC
LG
Gionee
Lenovo
Motorola
Xiaomi
Oppo
Xolo
Panasonic
Vivo
OnePlus
Intex
Sony
ASUS
Yu
TCL
Alcatel
Huawei
InFocus
Celkon
Itel
LeEco
Sansui
Videocon
                   
                          Samsung
Grand Prime 4G, Galaxy J1, Galaxy J2, Galaxy J7, Galaxy J5, Galaxy S5 Plus, Galaxy A5, Galaxy A7, Galaxy Core Prime 4G, Galaxy S6, Galaxy J3 (2016), ON7, Galaxy A8, Galaxy S6 Edge, ON5, Galaxy Note 5, Galaxy Note 4, Galaxy Alpha, Galaxy S6 Edge Plus, Galaxy Note 4 Edge, Galaxy Note 5 Duos, Galaxy S5 Neo, S7, Galaxy A5 (2016), Galaxy A7 (2016), S7 Edge, A8 VE, J5 (2016), J7 (2016), ON5 Pro, ON7 Pro, Galaxy J2 (2016), J Max, Galaxy A9, Galaxy A9 Pro, Galaxy C5, Galaxy C7, Galaxy J2 Pro, Galaxy Note 7.

                        Micromax
Bolt Selfie, Canvas 5, Canvas 5 Lite, Canvas 5 Lite Special Edition, Canvas 6, Canvas 6 Pro, Canvas Amaze 4G, Canvas Blaze 4G, Canvas Blaze 4G Plus, Canvas Evok, Canvas Fire 4G, Canvas Fire 4G plus, Canvas Fire 6, Canvas Juice 4G, Canvas Knight 2, Canvas Mega 2, Canvas Mega 4G, Canvas Nitro 4G, Canvas Pace 4G, Canvas Play 4G, Canvas Pulse 4G, Canvas Sliver 5, Canvas Tab, Canvas Unite 4, Canvas Xpress 4G, Unite 4 Plus, Unite 4 Pro

                        Karbonn
Aura 1, Aura Power, Quattro L45 IPS, Quattro L50 HD, Quattro L51 HD, Quattro L52 VR, Quattro L55 HD

                            Lava
A71, A72, A88, A89, Ivory s 4g, Lava V5, Pixel V2, V2s, X10, X11, X12, X17, X28, X38, X46, X50, X81

                             HTC
Desire 626 dual Sim, Desire 628, Desire 630, Desire 728 Dual SIM, Desire 820, Desire 820Q, Desire 820S Dual Sim, Desire 825, Desire 826, Desire 826 DS, Desire 828 DS, Desire 830, Desire Eye, HTC 10, HTC 10 Life style, One A9, One E9 S dual sim, One E9+ Dual Sim, One M8, One M8 Eye, One M9 Plus, One ME Dual Sim, One X9

                             LG
K332 (K7 LTE), K520DY (Stylus 2), K520DY, H860 (LG G5), K500I (X Screen), K535D (Stylus 2 Plus), LGH630D (G4 Stylus 4G) & LGH 442 (LGC70 Spirit LTE)

                           Gionee
E8, F103 Pro, F103(1GB), F103(2GB), F103(3GB), M4, M5, M5 Lite, M5 Lite CDMA, M5 Plus, P5L, S Plus, S6, S6s, S7, V6L

                          Lenovo
A6600, A2010, A2020, A6000, A6000 shot, A6600, A7000, A7700, K3 Note, Vibe K4 Note, Vibe K5, Vibe K5 Note, Vibe K5 plus, Vibe P1, Vibe P1m, Vibe S1, Vibe Shot, Vibe X3, ZUK Z1
                         Motorola
Moto E (2nd Gen), Moto G (2nd Gen), Moto G (3rd Gen), Moto G3 Turbo Edition, Moto G4, Moto G4 Play, Moto G4 Plus, Moto X (2nd Gen), Moto X Force, Moto X Play, Moto X Style
                         Xiaomi
Redmi 2 Prime, Redmi 2, Mi4i, Redmi Note 4G, Redmi Note 3, Mi5, Redmi Note 4G Prime, Mi Max, Redmi 3s, Redmi 3s Prime

                          Oppo
F1, A37, F1 Plus, F1s, Neo 7, R7k

                          Xolo
Black-1X, era 4G, era 4K, era X

                       Panasonic
ELUGA L, ELUGA Switch, ELUGA Icon, T45, ELUGA I2 ( 1GB ), ELUGA L2, ELUGA Mark, ELUGA Turbo, ELUGA Arc, ELUGA I2 2GB, ELUGA I2 3GB, ELUGA I3, ELUGA Icon 2, ELUGA A2, ELUGA Note, P55 Novo 4G, ELUGA Arc 2, P77

                             Vivo
vivo V3, vivo V3Max, vivo Y21L, vivo Y51L

                         OnePlus
Oneplus 2, Oneplus 3, Oneplus 1, Oneplus X

                           Intex
Aqua 4G, Aqua 4G Star, Aqua 4G Strong, Aqua 4G+, Aqua Ace, Aqua Ace 2, Aqua Ace Mini, Aqua Craze, Aqua Eco 4G, Aqua GenX, Aqua Music, Aqua Power 4G, Aqua Raze, Aqua S7, Aqua Secure, Aqua Shine 4G, Aqua Strong 5.1, Aqua Super, Aqua Trend, Aqua Turbo 4G, Aqua View, Aqua Wing, Cloud 4G Smart, Cloud 4G Star, Cloud Crystal 2.5D, Cloud Fame 4G, Cloud Flash, Cloud Glory 4G, Cloud Jewel, Cloud String HD, Cloud String V2.0, Cloud Swift

                           Sony
Xperia X A, Xperia X A Ultra, Xperia X(F5122), Xperia Z5 Dual(E6883), Xperia Z5 Premium Dual

                          Sansui
S50 FD45S

                           ASUS
ZenFone 2 Laser (ZE550KL), Zenfone 2 (ZE551ML), Zenfone Max (ZC550KL), Zenfone 2 Laser 5.0 (ZE500KL), Zenfone 2 (ZE550ML), Zenfone Selfie( ZD551KL), Zenfone 2 Laser (ZE601KL), Zenfone Zoom(ZX551ML), Zenfone Go 5.0 LTE (T500), Zenfone 3 ZE552KL, Zenfone 3 Laser( ZC551KL), Zenfone 3( ZE520KL)
Zenfone 3( ZS570KL), Zenfone 3 ( ZU680KL)

                            Yu
Yu Yureka, Yu Yutopia, YU Note, Yu Yuphoria, Yunicorn, Yunique, Yuphoria, Yureka Plus, Yureka S

                           TCL
FIT 5.5, Pride T500L, TCL 560, TCL 562

                         Alcatel
OneTouch X1, Pixi 4 -5, POP Star, POP3, POP4

                         Huawei
holly2 Plus, Honor 4C, honor 4X, honor 5C, honor 5X, Honor 6, honor Bee4G, honor6 Plus, honor7, Nexus 6P, P9

                         InFocus
Bingo 50+, M370i, M425, M430, M460, M535, M535+, M680, M808i, M812i

                         Celkon
4GTAB-7, 4GTAB-8, ACE, POP, Q4G, Q4GPlus"

                            Itel
SelfiePro it1511, Wish it1512, SelfiePro it1520

                          LeEco
Le 1s, Le 1s Eco, Le Max, Le 2, Le Max2

                          Sansui
S50 FD45S

                       Videocon
Cube 3 V50JL, Graphite1 V45GD, Krypton 3 V50JG, Graphite1 V45ED, Q1, V50FG6, V50FA3

                        Nextbit
Robin

மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு மொபைல் மாடல் உங்களிடம் இருந்தால் நீங்கள் மூன்று மாதத்திற்கு இணையத்திற்காக ஒரு பைசா செலவழிக்க வேண்டியதில்லை. சந்தோசமா......

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

தங்கிலீஷ் டூ தமிழ்.....


தமிழில் எளிமையாக தட்டச்சு செய்யலாம்..... விவரமாக தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோ லிங்கினை அழுத்துங்க....
http://sh.st/N30gc


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ 500க்கு 600 ஜிபி டேட்டா - ஜியோவின் அடுத்த பாய்ச்சல்ஜியோ ஜிகாஃபைபர்  திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1Gbps வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் திட்டத்தின் கீழ் ரூ.500/- செலுத்தி
600 ஜிபி டேட்டாவினை சுமார் 30 நாட்களுக்கு  பெற முடியும். மேலும்
ரூ.500 செலுத்தி  நாள் ஒன்றுக்கு 3.5 ஜிபி டேட்டாவினை சுமார் 30 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.

இந்தியா முழுக்க 100 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவை வழங்கப்பட இருக்கிறது.ஜியோ ஃபைபர் ரௌவுட்டர் ரூ.6000 செலுத்தியும் வாங்க முடியும்.இதனைப்  பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் ஸ்டோர்களில் பெற முடியும்.

பிராட்பேன்ட் பிரீவியூ சலுகையின் கீழ் நொடிக்கு 800 எம்பி வேகத்தில் இண்டர்நெட் சேவையை பெற முடியும்.

இனி பிராட்பேன்ட் பயனர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, 14 September 2016

ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்க ஆசையா......ஆன்லைனில்
அதிகம் சம்பாதிக்கலாம் என
ஆசை காட்டுவார்கள்...

ஒரு மணியில் ஓராயிரம்
ஒரு நாளில் ஒரு லட்சம் என்று...

மயங்கி விடாதீர்கள்
அந்த
மாயாஜால வார்த்தைக்கு....

பதிவுக்கு பணம் கேட்டால்
பதிலாக
மறுத்து விடுங்கள்....

உங்கள் முதலீடு
மூளையாக இருக்க வேண்டும் முன்பணமாக இருக்கக்கூடாது....

ஆன்லைனிலில்
ஆயிரம் தளங்கள் இருந்தால்..

அதில்
பத்து சதவீத தளங்களே
பணம் தருகின்றன
அதுவும் மிக அரிதாக...

புதிய
சம்பாதிக்கும் தளங்கள்
புற்றீசலாய் கிளம்பும்...

பயன்படுத்தியிருந்தால்
பயன் பற்றி
பகிர்ந்து கொள்ளுங்கள்
பக்கத்து நண்பனுக்கு.....

பகிர்ந்து கொண்டால்
பணம் சம்பாதிக்கலாம்
என்று
இன்னொரு கூட்டம்...

பயனில்லாததை பகிர்ந்து
சக நண்பனின்
பகையை சம்பாதிக்காதீர்கள்...

அவசியமில்லை என்றால் ஆன்லைனிலில்
அதிகநேரம் செலவழிக்க வேண்டாமே...

எச்சரிக்கையாக இருங்கள்..
கழுகு போல
காத்திருக்கிறார்கள்.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் ரேஷன் விவரம் உங்கள் கைபேசியில்......


உங்கள் ரேஷன் விவரம் உங்கள் கைபேசியில் தெரிஞ்சுக்கலாம்.இந்த செயலியில் குறைபாடு இருந்தாலும் தமிழக அரசின் புது முயற்சியை நாம் வரவேற்கலாம்.இந்த செயலி பற்றி விவரம் அறிய பின்வரும் லிங்கினை கிளிக் பண்ணுங்க..
http://sh.st/N2lJ1


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.Monday, 12 September 2016

தமிழனாய் பிறந்தது தவறா...

நாங்கள் தமிழனாய்
பிறந்தது
எங்கள் தவறா.....

உரிமைக்கு
குரல் உயர்த்தினால்
எங்கள் உயிருக்கு
உலை வைக்கிறாய்....

வாடிய பயிரை
கண்டபோது வாடியவன்
என் முப்பாட்டான்.....

அவன் வழியில்
வாடுகிற பயிர் உயிர் வாழ
நீர் கேட்டால்
சிறுநீரைக் குடி என்கிறாய்....

காவிரி
எனக்கு மட்டுமே சொந்தம்
என்று
தண்ணீர் தர மறுக்கிறாய்....

நாங்களும்
எனக்கு மட்டுமே சொந்தம்
என்று
மின்சாரம் தர மறுத்தால்...
அரிசி தர மறுத்தால்....
மணல் தர மறுத்தால்....

மானுடம் எங்கே வாழும்
மடையர்களே....

நீங்கள் நொறுக்கியது
எங்கள் பொருள்களையல்ல
இதயத்தை....

வீழ்வோம் என நினைக்காதே
வீறு கொண்டு எழுவோம்....

அடிப்பது
உன் குணம் என்றால்....

அரவணைப்பது
எங்கள் குணம்....

அதற்காக
அடிக்க தெரியாது
என நினைத்து விடாதே....

இது
பாரதியை பார்த்த பூமி..
வாஞ்சிநாதன் வாழ்ந்த பூமி..

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

சதுரகிரி மலை பயணம் - பகுதி 2


This place called sithar boom bcz peoples believe sithar's living in this mountain.if you feel free while go to this place.n ow continues our trip to sathuragiri
For more info plz click following link
http://adf.ly/1dutYx

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.