Monday, 31 October 2016

அர்த்தமுள்ள வரிகள்-5


வெற்றிக்கும் தோல்விக்கும்
பெரிய வித்தியாசம்
ஒன்றும் இல்லை.
தம்மாந்துண்டு தான் வித்தியாசம்.

அப்படி  என்னனு தெரியுமா....?

நம் கடமையை செய்தால்
என்றும் வெற்றி தான்.
அதுவே
வெறும் கடமைக்கு செய்தால்
என்றும் தோல்வி தான்.

அர்த்தமுள்ள வரிகள்-4


சிறுவர்களாக இருக்கையில்
பென்சில் பயன்படுத்தினோம். பெரியவர்கள் ஆன பிறகு
பேனா பயன்படுத்துகிறோம்....

ஏன் தெரியுமா.......?

சிறியவர்களாய் இருக்கும் பொழுது நாம் செய்கிற தவறை அழித்து திருத்திக்கொள்ள முடியும்.
ஆனால்,
வயதான பின்னர்
நாம் செய்கிற தவறை ஒருபோதும் அழித்து திருத்தமுடியாது.

அர்த்தமுள்ள வரிகள்-3


நண்பர்களே......
வாழ்க்கையில் ஒருபோதும்
யாரையும் முழுமையாக
நம்பி வாழ்ந்துவிடாதீர்கள்.

ஏன் என்றால்.........
நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரை தான்
துணைக்கு வரும்.

அர்த்தமுள்ள வரிகள்-2

என்னை மதிக்காதவர்களை
நானும் ஒருபோதும்
மதிப்பது இல்லை.

அதற்கு நீங்கள் வைக்கும் பெயர்
தலைக்கனம் என்றால்............

அதற்கு நான் வைக்கும் பெயர் தன்மானம்.

ஜியோ இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்தலாம் வாங்க...


ஜியோ தற்போது தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு தனியார் தொலைதொடர்பு நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே.

அவர்களது அதிவேக வளர்ச்சிக்கு இலவச இன்டர்நெட் ஆபர் மட்டுமல்லாது அவர்களது நெட்ஒர்க் 4ஜி என்பது தான் முக்கிய காரணம்.

ஆனால் இணையவேகம் தான் நாளுக்குநாள் 2ஜிக்கும் கீழே சென்று கொண்டு இருக்கிறது.

நீங்களும் ஜியோ வாடிக்கையாளர்களில் ஒருவர் என்றால் இந்த வேக குறைபாட்டை உணர்ந்து இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அவ்வாறு உணர்ந்து இருந்தால், இணைய வேகத்தை சிறிதளவேனும் அதிகப்படுத்துவது எவ்வாறு...?
என்பது பற்றி தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் செய்யுங்க......
http://sh.st/5qen5

Sunday, 30 October 2016

அர்த்தமுள்ள வரிகள்-1


மனிதா....
மரணம் உன்னை விட
பெரியதுதான்...
ஆனாலும்
அது உன்னை
ஒரே ஒருமுறை தான்
வெற்றிகொள்ள முடியும்.

ஆனால்
நீ வாழும் ஒவ்வொரு நொடியும்
அந்த மரணத்தையே
வென்று கொண்டு தான்
இருக்கிறாய் என்பதை
ஒருபோதும் மறந்துவிடாதே..
மனிதா....

பிளிப்கார்ட் வேண்டாமே.....


என்னடா இப்படி சொல்றான்னு நினைக்கிறீங்களா...இது முழுக்க முழுக்க என் அனுபவத்தால் வந்தது.

ஆகவே மற்றவரும் கஷ்டப்படவேண்டாம் என்கிற அடிப்படையில் இந்த சம்பவத்தை நினைவுகூர்கிறேன்.

தீபாவளிக்கு ஒருவாரத்திற்கு முன்னதாக நான் ஒரு புடவை ஆர்டர் செய்திருந்தேன்.அவர்களும் முறைப்படி தகவல் அனுப்பிக்கொண்டிருந்தார்கள் ஒழிய  அவர்கள் டெலிவரி செய்ய ஒத்துக்கொண்ட நாள்களுக்கு பிறகும்
பொருள் என் கைக்கு வந்த பாடில்லை.

சரி தேடி கண்டுபிடித்து நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை அழைத்தால் தமிழில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. பின்னர் எப்படி நம் குறையை அவர்களிடம் சொல்லி நிவர்த்தி பெறுவது...?

சரி ஒருவழியாக தொடர்புகொண்டால்,
ஆங்கிலம் தவிர்த்து இந்தி தான் பேசுவதற்க்கான ஒரே இந்திய மொழி.
பார்த்துக்கோங்க மக்களே.... ஆகவே தான் இது "இந்தி"ய நிறுவனம்.

சரி ஆங்கிலத்தில் தொடர்புகொண்டு பேசினால் உங்கள் பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும் என சொல்லிவிட்டு போனை துண்டித்துவிடுகிறார்கள்.

இது மீண்டும் மீண்டும் தொடர்கிறது... குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது....

ஒருவழியாக.................................
சிலநாள் கழித்து ஒருநபர் என் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டு என் முகவரி சொல்லி நான் தான் ஆர்டர் செய்தேனா என விவரம் கேட்கிறார்....கேட்கிறார்...........
இன்று மதியத்திற்குள் உங்கள் பொருள் உங்களை வந்து சேரும் என உறுதி அளிக்கிறார்.ஆனால் பொருள் வரவில்லை.....

ஆனால் அன்றைய இரவு நீங்கள் ஆர்டர் செய்த பொருளை நீங்கள் ஏற்க மறுத்ததால் உங்கள்  ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டுவிட்டது என குறுஞ்செய்தி வருகிறது.

ஆர்டர் செய்த நான் எதற்கு கேன்சல் செய்ய வேண்டும் இப்படி ஒரு ஷாப்பிங் தளம் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவையனைத்தும் அவர்கள் டெலிவரி செய்வதாக ஒப்புக்கொண்ட கடைசி நாளில் இருந்து நான்கு நாளாக நடந்த, நான் சந்தித்த மோசமான ஷாப்பிங் அனுபவம்.

இவர்கள் தான் இந்தியாவின் நம்பர் ஒன் ஷாப்பிங் தளமாம்...

சோம்பேறி ஈ கார்ட் கொரியர் வைத்துக்கொண்டு அனைத்து இந்திய நகரங்களுக்கும் வழங்குவதாக பீற்றி கொள்கிறது இந்திய நிறுவனம் எனசொல்லிக்கொண்டு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிளிப்கார்ட்( பிளாப்கார்ட்)
நிறுவனம்.

இதற்கு அமேசான் எவ்வளவோ பரவாயில்லை...

ஒரு அமெரிக்க அமேசான்
நிறுவனத்தால் தமிழ்நாட்டின் குக்கிராமம் வரை சிறப்பாக சேவை வழங்க முடிகிறது.நுகர்வோர் மையத்தை எளிதில் தமிழில் தொடர்புகொள்ள முடிகிறது.

பாருங்கள் மக்களே.....
ஆனால் இந்திய நிறுவனத்தால் தமிழில் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை உருவாக்கவும் முடியல... சிறப்பான சேவையினையும் வழங்க முடியல.....

உடனே வெளிநாட்டிற்கு ஆதரவா பேசுறேன்னு யாரும் நினைக்கவேண்டாம் இது என் அனுபவ பாடம் அவ்வளவுதான்.

ஒரு வெளிநாட்டு நிறுவனத்தால் சிறப்பான சேவையினை நமக்கு வழங்கமுடியும் பொழுது இந்திய நிறுவனங்கள் என பீற்றி கொள்ளும் இவர்களால் ஏன் வழங்கமுடியவில்லை என்பதே என் ஆதங்கம்.

பேர் மட்டும் தான்
இந்தியர்களை வசீகரிக்க 
இந்திய நிறுவனம் என்று....

Saturday, 29 October 2016

ஆமை வேகத்தில் ஜியோ நெட்...


ஜியோவை பொறுத்தவரை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான்.

ஜெட் வேகத்தில் இருக்கும் ஜியோ என்றார் முகேஷ் அம்பானி.ஆனால் தற்போது நம்மூர் புஷ்வானம் செல்லும் வேகம் கூட இல்லை.

நான் கூட இணைய வேகம் தொடர்பாக
ட்ராய் வெளியிட்ட தகவல் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் வற்புறுத்தலால் வந்ததோ என நினைத்தேன்.தற்போது தான் தெரிகிறது நூற்றுக்கு நூறு உண்மை என்று.

சரி இணைய வேகம் தான் இப்படி என்றால் போன் கால் கனெக்ட் படுமோசம்.எவ்வளவு முயன்றாலும் சில
நேரங்களில் தோல்வி தான் மிச்சம்.

குறிப்பிட்டு சொல்லனும்னா ஏர்டெல் மற்றும் வோடபோன் நெட்ஒர்க் நண்பர்களை தொடர்பு கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

இலவசம் என்கிற பெயரால்
இந்திய மக்கள் அனைவரையும் இளிச்சவாயனாக்கும்
இவர்களை என்ன செய்வது...?
இதுக்கு மோடி ஆதரவு வேற.

எம்பி/செகண்ட்
ஸ்பீட் என்று சொல்லிட்டு கேபி/செகண்ட் வேகத்தில் இயங்கும் 4ஜி நெட்ஒர்க் தான் இந்த ஜியோ..


மற்ற நெட்ஒர்க்குகள் கொள்ளை அடிக்கின்றன என்று இவர்கள் பக்கம் சாய்ந்தால் 4ஜி என சொல்லிட்டு 2ஜியை விட மட்டமான ஆமை வேகத்தில் நெட் வழங்கினால் எப்படி?

இவர்களை கட்டுப்படுத்தவேண்டிய TRAI யோ அறிக்கை மற்றும் அபராதம் விதிப்பதோடு சரி.மக்களுக்கு சரியான வகையில் சேவை கிடைக்க இதுவரை எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

ஆமை ஒருபோதும் முயலாகாது; ஆனாலும் ஜியோ ஒருநாளேனும்
இணையவேகத்தில் முயலாக மாறும் என்கிற எண்ணத்தில் தொடர்ந்து நம்பிக்கையோடு பயன்படுத்திவரும் சாதாரண கடைக்கோடி இந்தியன்.

நீங்களும் இதுபோன்ற அனுபவத்தை பெற்று இருந்தால் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்.

கொடி-நிச்சயம் பறக்கும்


தீபாவளி திரைப்படமாக தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் கொடி திரைப்பட விமர்சனத்தை காண கீழே உள்ள வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க...
http://sh.st/4Vlme

பட்டாசு...பலகாரம்... உங்கள் உடம்பு பத்திரம்....


தீபாவளியும் வந்தாச்சு......

பட்டாசும் பலகாரமும் ஒருவிதத்தில் உங்கள் உடம்பை பதம்பார்ப்பவை
என்பதை மறக்க வேண்டாம்.

பட்டாசு வெடிக்கும் போது கவனமா இருங்க.அவசரப்பட்டு வெடிக்கிற பட்டாசும் உண்டு,கொஞ்சம் தள்ளி நின்று பற்றவைய்யுங்க.

குழந்தைகள் என்றால் இன்னும் கவனமாக கையாள சொல்லுங்கள்.

ஒருநாள் சந்தோஷத்திற்காக உங்கள் உடம்பை கவனமின்றி காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

அதுமட்டுமின்றி தீபாவளி என்றாலே பலகாரத்திற்கு பஞ்சமிருக்காது.

தீபாவளி பதார்த்தங்கள் உங்கள் உடம்பை பதம்பார்க்கவல்ல பல எண்ணெய்கள் கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.

இவையாவும் உங்கள் உடம்புக்கு ஒவ்வாதவையாக இருக்கக்கூடும். ஆகவே
இன்று மட்டும் கொஞ்சம் நாவை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள்.
இல்லையேல்
நண்பர்களின் பலவீட்டு பலகாரங்கள் உங்கள் உடம்பை பாடாய்படுத்திடும்.

ஆகவே உங்கள் தீபாவளியை சந்தோசமாக கொண்டாட
அளவோடு கவனமோடு
மிகவும் எச்சரிக்கையோடு
பட்டாசையும்
பலகாரத்தையும்
பயன்படுத்துங்கள்.

இனிய தீபாவளி திருநாளாக அனைவருக்கும் அமைய
என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Friday, 28 October 2016

தீபாவளி நல்வாழ்த்துக்கள்....தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும்
என் இனிய உளம்கனிந்த
தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

Thursday, 27 October 2016

உங்கள் மொபைலினை வைபை ஹாட்ஸ்பாட் ஆக மாத்தலாம் வாங்க...நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைலினை பயன்படுத்துபவர் என்றால் நிச்சயம் இந்த வீடியோ வாயிலாக உங்களது மொபைலினை எளிதில் மொபைல் ஹாட்ஸ்பாட்டாக மாற்றி மற்றவர்களும் இன்டர்நெட் இலவசமாக பயன்படுத்த வழிவகை செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க
http://sh.st/4DWrT

Wednesday, 26 October 2016

பேசும் படம்-2


நிகழ்கால தொழில்நுட்பவளர்ச்சியின் நிஜமுகம்.இது எங்கே போய் முடியுமோ யார் அறிவார்..?

மேலும் இப்படம் உங்களின் மனதில் சிறிதேனும் சலனத்தை ஏற்படுத்தியிருந்தால் அதனை தங்கள் கருத்தாக பதிவிட்டு செல்லலாமே....

ஸியோமியின் புதிய விலை உயர்ந்த ரக ஸ்மார்ட்போன்...


சியோமி நிறுவனம் அதன் புதிய Mi நோட் 2 ஸ்மார்ட்போனை மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.அதன் முன்னோட்டமாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மொபைல் பற்றிய விவரங்களை பார்ப்போம்....

சியோமி Mi நோட் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

டூயல் சிம் ஆதரவு
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ 1080x1920 பிக்சல்
5.70 இன்ச் FULL எச்டி IPS OLED டிஸ்ப்ளே
முன் மற்றும் பின்புறத்தில் 3டி வளைந்த கிளாஸ்
2.35GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 ப்ராசசர்
22.56 மெகாபிக்சல் பின்புற கேமரா
8 மெகாபிக்சல் முன்புற கேமரா
LED பிளாஷ் ஆதரவு
Wi-Fi 802.11 ac
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத் 4.20
NFC
இன்ஃப்ராரெட்
3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்,
GSM
3G
4G
LTE
மைக்ரோ-யூஎஸ்பி
குயிக் சார்ஜ் 3.0
4070mAh பேட்டரி


இந்த சியோமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் மூன்று விதமாக வருகிறது.அதாவது,
1)4ஜிபி ரேம், 64ஜிபி வித
ஸ்மார்ட்போன் ரூ.27,600 விலையிலும்,
2)6ஜிபி ரேம், 128ஜிபி வித
ஸ்மார்ட்போன்  ரூ.32,600 விலையிலும்,
3)6ஜிபி ரேம், 128ஜிபி வித கோல்ட்
ஸ்மார்ட்போன் ரூ.34,500 விலையிலும்
இந்தியாவில் விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் விற்ற சியோமி முதல் முறையாக 30000க்கும் அதிகமான விலையில் ஸ்மார்ட்போனை களமிறக்குகிறது.

மற்ற சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்த வரவேற்பு இதற்கு கிடைக்குமா என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

எப்பொழுதும் போல முதலில் சீனாவில்
அதுவும் குறிப்பாக நவம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் விற்பனை செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்தியாவில் எப்பொழுது வெளியாகும் என்கிற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் முதல் வாரத்திலோ
இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tuesday, 25 October 2016

உங்களை வாழவைக்கும் அதிசய வாழைப்பழம்....


முக்கனிகளில் மூன்றாவது கனியான வாழைப்பழத்தின் வரலாற்றை முதலில் கொஞ்சம் திரும்பி பார்ப்போம்....

வாழைப்பழம் அக்காலத்தில்
இப்போது போன்று அளவில் பெரிதாக
இருந்ததில்லை. விரல் நீளம் தான் இருக்குமாம்,அதனால் தான்
அரேபியர்கள் வாழைப்பழத்துக்கு பனானா என்று பெயரிட்டு அழைத்தனர்.பனானா என்றால் அரேபிய மொழியில் விரல் என்று அர்த்தமாம்.நாளடைவில் ஆங்கிலத்திலும் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டு, உலகம் முழுதும் இன்று  "banana" என்று வாழைப்பழம் அழைக்கப்படுகிறது.

மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபொழுது இந்த வாழைப்பழ மகிமையினை உணர்ந்து உண்டதாகவும்,அவர்மூலமாகவே இந்த பழம் பற்றிய விவரம் உலகம் முழுக்க பரவியதாகவும் ஒரு வரலாற்று சேதி உண்டு.
இன்று உலகு முழுக்க வாழைப்பழம் பரவி கிடக்க காரணமான அலெக்சாண்டருக்கு நன்றி சொல்வோம் நண்பர்களே...சரி விசயத்திற்கு வர்றேன்...........

ஒரு விஷயம் தெரியுமா...?
உலகிலேயே அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம்.

என்ன...?.வகை மற்றும் பெயர் தான் வேற வேற இருக்கும், குணம் ஒன்று தான்.அதனை மறக்கவேண்டாம்.


வாழைப்பழம் என்றால் யாருக்குத்தான் புடிக்காது.
ஆனால் விலைதான் அதிகம்
என யோசிக்கிறீர்களா....?

சற்று சிந்தியுங்கள்...🤔

நோய் வந்த பின் மருந்துக்காக லட்சக்கணக்கில் செலவழிப்பதை விட நோய் வருமுன் உங்கள் பொன்னான உடம்பை காக்க அன்றாடம் குறைந்தது ஐந்து ரூபாய் செலவழிக்கலாமே...

எங்கள் பகுதியில் ஒரு சிலேடை உண்டு அது என்னனா...

"வைத்தியனுக்கு கொடுக்குறத வாணிகனுக்கு கொடு"

இது சரியா தவறா என ஒவ்வொருவரும் ஆராய்ச்சியில் இறங்கத்தேவையில்லை.
ஆனால் சிந்திக்க வேண்டிய விஷயம்.

எழுபதுக்கும் மேல் வாழைப்பழ வகைகள் இருக்கின்றன.அவற்றுள் ரஸ்தாலி,செவ்வாழை,மொந்தன்,பச்சைவாழை, மலைவாழை, பேயன் வாழை,நவரை வாழை போன்ற அனைத்தும் நம் பகுதியில் எளிதில் கிடைக்கவல்லவை.இவற்றில் தினசரி ஏதேனும் ஒரு வகை வாழைப்பழத்தை சாப்பிட்டு வாங்க..அதுபோதும்,ஒருபோதும் நோய் அணுகாது உங்கள் உடம்பை அது பாதுகாக்கும்.இந்த பழங்களை அனைத்து வித வயதினரும் சாப்பிடலாம்.

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள வாழைப்பழ வகைகளின் சிறப்பு பற்றி பார்ப்போம்...உடல் சூட்டை தணிக்க பச்சைவாழை,
நா சுவைக்கு ரஸ்தாலி,
உடல் பலத்திற்கு செவ்வாழை,
காமாலைக்கு மொந்தன்,
ரத்தசோகைக்கு மலைவாழை,
குடல்புண்ணிற்கு பேயன் வாழை,
கரப்பான் நோயிற்கு நவரை வாழை.சரி அப்புடி என்னதான் உடம்பிற்கு செய்துன்னு பார்ப்போம்.இவயாவும் வாழைப்பழங்களால் ஏற்படும் பொதுவான பலன்கள்...

மலச்சிக்கல் இருந்தால் போக்கிவிடும்.
சரும நோய்களுக்கு நிவாரணி.
ஒழுங்கற்ற மாதவிலக்கு சரிசெய்திடும்.
ஜீரணத் தொடர்பான நோய்களுக்கு சிறந்த இயற்கை மருந்து.
சாப்பிட்ட பின் சுறு சுறுப்பு உண்டாக்கும் ஆற்றல்.
பக்கவாதம் வராமல் தடுக்க உதவுகிறது.
மூலம் மற்றும் பவுத்திரம் நோய்களுக்கு நிவாரணி.
நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது.
அல்சர் நோயிற்கு அருமருந்து.இவ்வளவு நோயிற்கு இயற்கை உணவே மருந்தாக செயல்படும் வாழைப்பழத்தில் அப்படி என்னதான் அதியசம் புதைந்து கிடைக்குனு பார்ப்போமா....

டிரிப்டோபன்
செரடோனின்
வைட்டமின் A
வைட்டமின் C
வைட்டமின் E
வைட்டமின் K
வைட்டமின் பி1
வைட்டமின் பி2
வைட்டமின் பி3
வைட்டமின் பி5
வைட்டமின் பி6 அதிகளவு
வைட்டமின் பி9
கால்சியம்
மெக்னீசியம்
ஜின்க்
பாஸ்பரஸ்
மாங்கனீசு
செலினியம்
பொட்டாஷியம் அதிகளவு
ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்
இரும்பு
காப்பர்
பயோட்டின்
நார்ச்சத்து அதிகளவு
கார்போஹைடிரேட்ஸ்
புரதம்
கொழுப்பு  குறைந்தளவு
ஆன்டாசிட்

எப்புடி...எப்ப சாப்பிடுறது?

வாழைப் பழத்தை அப்புடியே....ஆமாங்க தோலை உரித்து சாப்பிடலாம்..
பாலில் போட்டு சாப்பிடலாம்...
வேகவைத்து சாப்பிடலாம்...
மசித்து சாப்பிடலாம்...

காலை,மாலை,இரவு என எப்பொழுதும் சாப்பிடலாம்.
நோய் வந்த பின் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.நோய் வருமுன் நம் உடம்பை காப்போம், என இன்றில் இருந்து ஏதேனும்
ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவோம்.

நம் வாழ்நாளை கொஞ்சமேனும்
இந்த
அவசரகதி உலகத்தில்
அதிகப்படுத்தி கொள்வோம்.

Sunday, 23 October 2016

எச்சரிக்கை..☠...நண்பர்களே..ஆப்பிள் ஐபோன் 7னும் வெடிக்குதாம்....


இந்த சீசன் பெரிய மொபைல் நிறுவனங்களுக்கு போதாத காலம்னு நினைக்குறேன்.

கொஞ்ச நாளா சாம்சங் காலெக்ஸி நோட் 7 வெடித்ததால் அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறும் நடவடிக்கையை சாம்சங் நிறுவனம் மேற்கொண்டது.

தற்போது ஆப்பிள் ஐபோன் 7னும் வெடிக்க தொடங்கி இருப்பதாக ஆதாரங்களோடு இணையத்தில் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த மேட் ஜோன்ஸ்
தனது காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது புத்தம் புதிய ஐபோன் 7 வெடித்ததை புகைப்பட மற்றும் வீடியோ பதிவாக வெளியிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.வெடிப்பதற்கு முதற்காரணம் லித்தியம் அயன் பேட்டரி தான் என தெரியவந்துள்ளது.மேலும் இது ஆப்பிளுக்கு புதிய தலைவலியை உண்டாக்கியுள்ளது.
ஆனாலும் சாம்சங் காலக்க்ஷி நோட் 7 அளவுக்கு நிலவரம் மோசமா இல்லை.

ஆகவே வெடிப்பதற்க்கான காரணத்தை கண்டறிந்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர முற்று புள்ளி வைக்க முனைப்போடு செயல்பட தொடங்கியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.


எனினும் அதிக விலை கொடுத்து வாங்கிய ஆப்பிள் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனக்கு என்னவோ இந்த ரெண்டு மொபைல் கம்பெனிகளும் ஒருத்தனை ஒருத்தன் காப்பி அடிச்சுருப்பாய்ங்கனு தோணுது எப்படி நம்மூர் சினிமாக்காரய்ங்க போல...

எது எப்படியோ எச்சரிக்கையாக இருங்க..

தீபாவளின்னு நினைச்சு போய் அவசரப்பட்டு பிரச்சினையை விலைகொடுத்து வாங்கிடாதீங்க....பின்னர்
அவஸ்தைப்படாதீங்க.சாம்சங்கின் அடுத்த நகர்வு சாதிக்குமா அல்லது மீண்டும் சறுக்குமா?


ஒருபக்கம் கேலக்ஸி நோட் 7 வெடிக்கும் சர்ச்சை நீடித்தாலும் மறுபக்கம் அசராது தனது புதிய கேலக்ஸி வகை ஸ்மார்ட்போன்களை மார்க்கெட்டில் விட்டுக்கொண்டே இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

எவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்தாலும் நான் தான் மொபைல் உலகின் ராஜா என்பது போல மீண்டும் மெய்ப்பிக்கும் விதமாக மிக குறுகிய காலத்தில் புதிய மூன்று விதமான மொபைலினை வெளியிட்டுள்ளது.

அதனையும் தாண்டி தன்னுடைய மிகப்பெரிய அடுத்தகட்ட நகர்வாக இந்த விலை உயர்ந்த வசதியுடன் கூடிய கேலக்ஸி நோட் 7 யைப் போன்றே புதிய ஒரு மொபைலினை அதிரடியாக அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம்.

கேலக்ஸி சி9 ப்ரோ என்பது தான் அதன் பெயர்.

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோவில் உள்ள வசதிகள்:
ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0
6 இன்ச் எச்.டி. தொடுதிரை
6 ஜிபி ரேம்
64GB சேமிப்பு கொள்ளளவு
கைரேகை சென்சார்
இரட்டை பிளாஷ் ஆதரவு
16 எம்.பி முன்பக்க கேமிரா
16 எம்.பி பின்பக்க கேமிரா
இரண்டு சிம்கார்டு வசதி
ப்ளூடூத் 4.2
4000 mah பேட்டரி
ஸ்னாப்ட்ராகோன் 652 ப்ரோசெசர்

சீனாவில் நவம்பர் 11 முதல் விற்பனை செய்ய  திட்டமிட்டுள்ளது.ஆனால் இந்தியாவில் எப்பொழுது அறிமுகமாகும் என்பது பற்றி விவரம் ஏதும் சாம்சங் நிறுவனத்தால்
இதுவரை வெளியிடப்படவில்லை.

அநேகமாக இந்திய மதிப்பில் சுமார் 30000 ரூபாயிற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலாவது வெடிக்காமல் இருந்தால் சரி.

சாம்சங்கின் அடுத்த நகர்வு சர்ச்சையில் சிக்காமல் சாதிக்குமா அல்லது மீண்டும் சறுக்குமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, 22 October 2016

இவரைத் தெரியுமா....?-3


தென் ஆப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1960 செப்டம்பர் 13-ல்
ஜோகானஸ்பேர்க்கில் பிறந்தவர்.

இளம் வயதில் தென் ஆப்பிரிக்காவில் நிறப்பாகுபாடு அரசியல் மேலோங்கியிருந்தது. இந்த பாகுபாட்டை இவர் வெறுப்பவராக இருந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்பு மருந்தாளுநர் ஆகும் பொருட்டு மருந்தாளுமையியல் படித்தார்.
ஆனால் அப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார்.

அதன் பின்னர் இராணுவ சேவைக்கு ஆட்படுத்தப்பட்ட இவர் தொழில்முறை வான்படையில் இணைந்தார்.

உணவு விடுதியில் கறுப்பினத்தைச் சேர்ந்த உணவு பரிமாறுபவர் ஒருவர் கொடுமையான முறையில் இராணுவ வீரர்களால் நடத்தப்படுவதைக் கண்டு அவருக்காகப் பரிந்து பேச அதனால் மற்ற இராணுவ வீரர்களால் இவர் மோசமாக தாக்கப்பட்டார்.

டேவிட் என்ற புதிய பெயரில்
வானொலி வர்ணணையாளராக
புதுவாழ்வைத் துவக்கினார்.
ஆனால் எதிர்பார்த்ததை விட
மிகக் கடினமாக இருந்ததால் மனத்தளர்ச்சியுற்று தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

இறுதியாக உலகம் போற்றிய மற்றும் தூற்றிய ஒரு புகைப்படப் பத்திரிக்கையாளராக மாறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டின் பட்டினி கோரத்தை தன் புகைப்படம் மூலம் வெளிக்கொணர்ந்து
இவ்வுலகையே அதிரவைத்த இளைஞன்...


முதன்முறையாக  necklacing எனப்படும் கொடியதொரு கொலைமுறையை
பத்திரிக்கையில் புகைப்படமாக வெளியிட்டவர்.

1994 ஜூலை 27-ல் புலிட்சர் பரிசு பெற்ற தென்ஆப்பிரிக்க இளம்
புகைப்படப்பத்திரிக்கையாளர்.

மனத்தளர்ச்சி காரணமாக 1994 ஆம் ஆண்டு ஜீலை 27 ஆம் நாள் மோட்டார் புகைபோக்கி செயல்முறையைப் பயன்படுத்தி கார்பன் மோனாக்சைடு
விஷவாயுவால் தன் 33 வது வயதில் வாழ்வை முடித்துக் கொண்டார்.

யாரென்று தெரியலையா.....?
இவர் தான்
கெவின் கார்ட்டர்.

அவரால் பதிவு செய்யப்பட்ட
உலகை உருக்கிய அவரது
புகைப்படம் மற்றும் அதனால் அவர் சந்தித்த விமர்சனத்தையும்
கீழே பாருங்கள்.....


போரினால் பாதிக்கப்பட்ட சூடான்
நாட்டில் 1993 ஆம் ஆண்டில் கார்ட்டர் ஒரு காட்சியைக் கண்டு நிற்கிறார்.

உணவு வழங்கும் இடத்தை நோக்கி மெல்லிய முனகலுடன் உடல் நலிந்த பெண் குழந்தையொன்று வழியில் போராடிக் கொண்டிருந்தது.

மேலும் நடக்க வலுவில்லாமல் குழந்தை ஓய்வெடுத்த வேளையில் கழுகு ஒன்று அவ்விடத்தில் வந்தமர்கிறது.

கழுகு தன் இறக்கையை விரிக்குமென கார்ட்டர் 20 நிமிடம் காத்திருக்கிறார்.அது விரிக்கவில்லை.
எனவே குழந்தையும் கழுகும் இடம்பெறும் வகையில் இக்கோரக்காட்சியைப்
புகைப்படமாக எடுக்கிறார்.

இதுதான் அந்த புகைப்படம்


இதுதான் அப்பொழுது சூடான் நாட்டில் அயோடு கிராமத்தில் நிகழ்ந்த நிகழ்வு .

குழந்தைக்கு நடந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் இருந்தது.ஆனால் அவளின் இறுதி முடிவு என்ன என்பது அறியப்படவில்லை -இப்புகைப்படம் முதன்முதலாக வெளியிட்ட  நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ஆசிரியர்

குழந்தையின் துன்பத்தைப் போக்காமால் அவள் படும் துயரத்தை சரியான கோணத்தில் படமெடுக்கும் பொருட்டு தன் புகைப்படக் கருவியின் லென்சைச் சரி செய்து கொண்டிருந்த கார்ட்டர் இன்னொரு கொலையாளியாகத்
தான் இருக்க முடியும்.
கார்ட்டர் காட்சியின்
இன்னொரு கழுகு -
புளோரிடா செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ் நாளிதழ்

இந்த விமர்சனமும் இவரது தற்கொலைக்கு காரணம் என சொல்லப்படுவதுண்டு.


எது எப்படியோ இளம்வயதில் மண்ணைவிட்டு மறைந்த
இன்னொரு சாதனையாளன்
கெவின் கார்ட்டர் என்றால்
அது மிகையில்லை.Friday, 21 October 2016

ஜியோ இலவச சேவை அம்பேல்...


ஜியோ வாடிக்கையாளர்களே......
இது சற்று வருத்தமான சேதி தான்,
மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

ரிலையன்ஸ்  ஜியோ டெலிகாம்
தனது 3 மாத இலவச சேவையை
டிசம்பர் 31ஆம் தேதி வரை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முழுமையாக அளிக்க வேண்டும்.ஆனால் ஜியோ தற்போது தனது இலவச சேவைகளை வருகிற டிசம்பர் 3ஆம் தேதியே முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

காரணம் TRAI சட்டதிட்டங்கள் படி எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும் வெல்கம் ஆபர் என்ற பெயரில் இலவச திட்டங்களை 90 நாட்களுக்கு
அதிகமாக அளிக்கக் கூடாது.

ஜியோ தனது சேவையைச் செப்டம்பர் 5ஆம் தேதி அறிவித்துள்ள நிலையில் டிசம்பர் 3ஆம் தேதியுடன் 90 நாட்கள் முடிவடைகிறது. ஆகவே
டிசம்பர் 4ஆம் தேதி முதல் ஜியோ வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் எந்தவித இலவச சேவையினையும் பெற முடியாது .

ஜியோ நிறுவனம் தனது அதிரடி இலவச ஆஃபர் மூலமாக மட்டும் தற்போது வரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

இந்த செய்தி ஜியோ நிறுவன
வாடிக்கையாளர்கள் மத்தியில்
பெரிய அதிர்வலையினை நிச்சயம் ஏற்படுத்தும்.அதனை எவ்வாறு ஜியோ நிறுவனம் சமாளிக்கப்போகிறது என்பதனை பொறுத்த இருந்து தான் பார்க்க வேண்டும்.

டிசம்பர் 4ஆம் தேதிக்கு பிறகு தான் இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையே உண்மையான போட்டி ஆரம்பமாக இருக்கிறது.

ஜியோ தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள என்ன செய்கிறதுனு பார்ப்போம்.
அதுவரை பொறுமனமே.....


Thursday, 20 October 2016

பேசும் படம்-1


அப்புடி இந்த படம்
என்னதான் சொல்லுது
உங்கள் பார்வையில்....

ஒருவன்
பின்னே சுமக்கிறான்..
இன்னொருவன்
முன்னே சுமக்கிறான்..

இதுதான் உலகநியதியோ.!!
உங்களுக்கு
புரிந்துவிட்டால்
நிச்சயம் நீங்கள் புத்திசாலி தான்..


ஏதாவது புரிந்ததா....?


இன்னும் புரியலையா....?


அப்ப கொஞ்சம்
கீழே பாருங்க....


நீங்கள் மேலே காணும் படத்தை பற்றி உங்கள் கருத்துகளை கொஞ்சம் பகிர்ந்திட்டு செல்லலாமே....


Tuesday, 18 October 2016

ஒன்பிளஸ் -இன் ஒரு ரூபாய் மொபைல் வாங்கணுமா....


சியோமி நிறுவனம் போன்றே ஒன்பிளஸ் நிறுவனமும் இந்த வருடம் வாடிக்கையாளர்களை கவர ஒரு ரூபாய் போன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி ஒன்பிளஸ் நிறுவனம் தங்களது  தீபாவளி பண்டிகை சலுகையாக ரூ.1க்கு மொபைல்போன்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விற்பனையானது அக்டோபர் 24-அக்டோபர் 26 ஆம் தேதி வரை ஒன்பிளஸ் தீபாவளி டேஷ் சேல் என்ற பெயரில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் நடைபெறும்.

இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி,மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணி என மூன்று முறை
இந்த பிளாஷ் விற்பனை நடைபெறும்
என தெரிவித்துள்ளது அந்த மொபைல் போன் நிறுவனம்.

விற்பனையின் போது நீங்கள் மிஸ்ட்ரி பாக்ஸ்களை தேர்வு செய்ய வேண்டும்.அதில் ஏதேனும் ஒரு ஒன்பிளஸ் போன் கூட இருக்கலாம்   அல்லது இல்லாமல் இருக்கலாம்.அது உங்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

ஒருவர் தனது அக்கவுண்ட் மூலம்
ஒரு மிஸ்ட்ரி பாக்ஸ் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.மிஸ்ட்ரி பாக்ஸ் கார்ட்டில் சேர்க்கப்பட்டதும் உடனே ரூ.1 செலுத்தி அதனுள் இருக்கும் பொருளை  பற்றி தெரிந்து கொள்ள முடியும்.கட்டணம் செலுத்தாத பாக்ஸ்கள் மூன்று மணி நேரத்தில் வாபஸ் பெறப்படும்.

ஆசையா இருக்கா....ஒரு நிமிசம்..
அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான்...

ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோரில் முதலில்
உங்கள் பெயர்,மொபைல் போன் நம்பர், மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை   உள்ளீடு செய்து பதிவு செய்யுங்கள்.

உங்கள் ஈமெயில் மற்றும் மொபைல் எண் மூலம் உங்கள் கணக்கை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக #DiwaliDashSale என்ற பதிவினை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்   அவ்வளவு தான்..

தங்கள் வெற்றி வாய்ப்புகளை அதிகரித்து கொள்ள இந்த விற்பனை
குறித்து தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அதிக அளவில்
பகிர்ந்து கொள்ள வேண்டும்.

என்ன மக்களே சந்தோசமா...


Monday, 17 October 2016

என் கைபேசி காதல்.....எனக்கு விவரம் தெரிந்து சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு தான் எனக்கு
கைபேசி அறிமுகம் ஆனது.
எல்லாரையும் போல எனக்கும் ஆசை தான்....எப்படியாவது ஒரு சொந்த கைபேசி வாங்கிவிடலாம் என்று.

அப்பொழுது இணையம் இப்ப இருக்கும் அளவுக்கு மிகப்பிரபலம் இல்லை. ஆகவே, இயல்பாகவே கைபேசி பேசுவதற்கு மட்டுமே பிரபலமாக இருந்த காலம்.

படிக்கும் காலகட்டத்தில்  நிர்மல்,வேடி, சாம் போன்ற நண்பர்களது கைபேசிகள் எனக்கு விளையாட்டு பொம்மை போன்று சும்மா பூந்து தப்பு தப்பா விளையாடுவேன்.

அதுமட்டுமல்லாது என்னை என் குடும்பத்தார் தொடர்பு கொள்ள அவ்வப்போது பயன்படுத்தி கொண்டேன் நண்பர்களது உதவியோடு இரவலாக அவர்களது கைப்பேசிகளை...

தவறுதலாக படங்களை, ரிங்க்டோனை அழித்து விட்டு ஒண்ணும் தெரியாதது போல் திருதிரு என ஒருகாலத்தில் விழித்தவன் தான் நான்.

சரியோ தவறோ அடுத்தவன் பொருளை ஓசியா பயன்படுத்துறதுல அப்புடி ஒரு சந்தோசம்..
சரி இருந்தாலும் எவ்வளவு நாள் தான் அடுத்தவன் பொருளை
பயன்படுத்துறது ?

ஆசை யாரைவிட்டது....
எனக்கும் வந்தது கைபேசி மீது காதல்....

ஆனால் துட்டு ?

நினைத்துக்கூட பார்க்கவில்லை அதுவாக என்னை தேடிவந்தது என் தாயார் மூலமாக...

தொலைதூரத்தில் இருக்கும் அவனிடம் பேச சிரமமா இருக்கு ஆகவே, அவனுக்கு ஒரு கைபேசி வாங்கிகொடுங்க என என் தாயார் வற்புறுத்தலுக்குப்பிறகு என் தகப்பனார் எனக்காக வாங்கித்தந்த முதல் கைபேசி நோக்கியா 1600.
அதன் விலை அன்றைக்கு இந்திய மதிப்பில் சுமார் 3700
ரூபாய்.


மறக்கமுடியுமா....அந்த நாளை..!!!
அன்று அப்படி சந்தோசம்....
புதுசாக ஏதோ சாதிச்சது போன்று.

ஆமா...அப்ப புதுசா ஒருத்தன் கைபேசி வைத்திருந்தாலே அதிசயமா  பார்த்த உலகமாச்சே...பின்ன நமக்கென்ன சொல்லவா வேணும்....

இப்ப இருக்குற வசதிகள் ஒன்னு கூட இல்ல பேசுவதை தவிர்த்து...
ஆனாலும் அடக்கமுடியாத சந்தோசம் அன்று இரவு முழுதும்...
படுக்கையின் பக்கத்தில் வைத்து உறங்குனேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி ஆசைப்பட்ட கைபேசி வாங்கியாச்சு எப்புடி பயன்படுத்துறது ?
அதானே தெரியல...
தெரிஞ்சவன்ட கேட்டா நம்ம கௌரவம் என்னாவுறது...
விதி வலியதுனு பழையபடி தப்பு தப்பா பூந்து விளையாட ஆரம்பிச்சேன்.

பலநேரம் தொடர்பை துண்டிக்க தெரியாம கைபேசியை அணைத்துவிடுவதுண்டு.
அப்புறம் ஏன் அணைந்ததுனு ஆராய்ச்சி வேற...

சிலநேரங்களில் தொலைபேசி நிறுவனங்களிடம் பணத்தை விவரம் தெரியாம பறிகொடுத்ததுண்டு (இப்ப நமக்கு தெரிந்தே காசு புடுங்குறானுக என்ன செய்ய )அப்ப புகார் மய்யம் பற்றியும் தெரியாது.

ஒருவழியா அனைத்தையும் முயன்று தவறி கற்றேன்... இப்பொழுதும் அப்படியே...!!!

இன்றும் அந்த கைபேசி என்னிடம் இருக்கிறது.இல்லை உறங்குகிறது...
பலமுறை கைநழுவி கீழே விழுந்திருக்கிறது.....ஆனால் எனக்கு உபத்திரம் ஒருபோதும் கொடுத்ததில்லை....

அவ்வப்போது தூசிதட்டி
அழகு பார்த்து வீட்டு மீண்டும் அணைத்து வைத்துவிடுவதுண்டு.

காலம் செல்ல செல்ல வசதிகள் வந்தன.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதற்கு இணங்க என் மனசு வசதி நிறைந்த கைபேசிக்கு தாவியது..

அன்று நோக்கியாவில் தொடங்கிய என் கைபேசி காதல் இன்று ஸியோமியில் வந்து நிற்கிறது.

Sunday, 16 October 2016

இளைஞர்களின் கனவு நாயகன்.....


இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்படும் APJ அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு oct-15ல்  ஜெயினுலாவுதீன் மரைக்காயர் மற்றும் ஆஷியம்மாள் தம்பதியருக்கு மகனாக
ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

தனது குடும்ப வறுமை காரணமாக
பள்ளிப்படிப்பின் போது நாளிதழ்களை விற்று அதன் மூலம் தனது துவக்க கல்வியினை படித்தார்.

ராமேஸ்வரத்தில் தொடங்கிய தனது கல்விப்பயணத்தை சென்னை MITயில் நிறைவு செய்தார். ஆனால் ஆசிரியராக தனது பணியினை இறுதி மூச்சு
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கடந்த வருடம் ஜூலை மாதம் 27ம் தேதி நிற்கும்வரை செய்து கொண்டே இருந்தார்.

இவரது சேவைக்காக கிடைத்த விருதுகள் ஏராளம். இந்தியாவின் அனைத்து உயரிய விருதுகளையும் வென்ற முதல் விஞ்ஞானி.
அதிலும் குறிப்பாக
1981ஆம் ஆண்டு பத்ம பூஷண்
1990 ஆம் ஆண்டு பத்ம விபூஷண்
1997ஆம் ஆண்டு நாட்டின் உயரிய பாரத ரத்னா போன்ற விருதுகள் இவரை கவுரவித்தன.

அவர் வகித்த பதவிகளும் ஏராளம் திருவனந்தபுரம் மற்றும் ஒரிசா மாநிலத்தில் உள்ள சண்டிப்பூரில் பல ஆண்டுகள் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் விஞ்ஞானியாக பணியாற்றிய அக்னி மனிதன்.
மேலும் அவர்,
1982ஆம் ஆண்டு விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராக செயல்பட்டார்.
1998ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு மூளையாக செயல்பட்டார் .
1999 நவம்பர் முதல் 2001 நவம்பர் வரை  அறிவியல் ஆலோசனைக்குழுவின் தலைவராக மற்றும் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகராகவும்
செயல்பட்டார்.

இதைவிட உச்சபட்சமாக நாட்டின் முதல் குடிமகன் என்கிற பதவியும் அவரை தேடி வந்தது.அது நடந்தேறியது 2002ல்.

எளிய மனிதராக,குழந்தைகள் விரும்பும் தலைவராக, இளைஞர்களின் எழுச்சி நாயகனாக இந்தியா மட்டுமின்றி உலகிற்கே விளங்கிய காலம் அது.

கனவு காணுங்கள்....
அந்த கனவு உங்கள் தூக்கத்தில் வருவதாக மட்டும் இருக்கக்கூடாது ;
உங்களை தூங்க விடாமல் செய்வதாக இருக்க வேண்டும் , என இளையோர் மனதில் தன்னம்பிக்கை விதைகளை தூவிவிட்டு சென்ற தலைவன்.

அவரது கனவுகள் ஏராளம்.அவற்றில் குறிப்பிட தகுந்தவை...

நாடு முழுதும் உள்ள நதிகள் அனைத்தையும் இணைக்கவேண்டும்.

இளையோர் பலரும் அரசு வேலைக்கு காத்திராது சுயதொழிலை தொடங்கி பலருக்கு வேலை வழங்கி வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும்.

நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும்.

நாடு முழுதும் மரக்கன்றுகள் நட்டு பசுமையான இந்தியாவினை உருவாக்க பாடுபடவேண்டும்.

2020ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம் பெருமை தானே...

அவர் கண்ட கனவு
ஏதேனும் ஒன்று நிறைவேற
நாமும் முயற்சிக்கலாமே..

Friday, 14 October 2016

பேலியோ உணவுமுறைக்கு மாறலாமே.....


பேலியோ உணவுமுறை என்பது பழங்கற்கால,குகை வாழ் மனிதர்கள் உணவுமுறையாகும்.

பேலியோலித்திக் என்கிற பழங்கற்காலத்தில் பின்பற்றிய உணவுமுறை.ஆகவே இதன் பெயர் இயல்பாகவே மறுவி பேலியோ என்றானது.

அக்காலத்தில் மனிதர்கள் வேட்டை ஆடுபவர்களாகவும்,உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்தனர்.
மேலும் அவர்கள் காய்கள், கனிகள், வேர்கள், கொட்டை வகைகள், மீன்கள் போன்றவற்றை உண்டு வாழ்ந்தனர்.

சரி விசயத்திற்கு வர்றேன்....

பொதுவாக நம் உடம்பு கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் ஆகிய இரண்டு சக்திகளால் இயங்குகிறது.

மாவுச்சத்து உணவுகளால் குளுக்கோஸ் சக்தி கிடைத்து உடல் இயங்குவது நடைபெற்றாலும், அதிகப்படியான குளுக்கோஸ் சார்ந்த மாவுச்சத்து உணவுகளால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து  எடை கூடுகிறது.

ஆனால், கொழுப்பு சார்ந்த உணவுகள், பசியை அடக்கி, உயர்தர கொழுப்பு மற்றும் புரதத்தை உடலுக்குத் தந்து உடல் எடையைக் குறைக்கிறது.மேலும்
ரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்தும், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களையும் அளித்தும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

பேலியோ டயட்டின் அடிப்படையே, உடலின் ரத்த சர்க்கரையை அபரிமிதமாக ஏற்று, உடல் கட்டமைப்புக்கு உதவும் கணையம் சுரக்கும் இன்சுலின் ஹார்மோனை அதன் இயற்கையான வேலைக்குப் பயன்படுத்துவதேயாகும்.

மேற்கூறிய காரணங்களால் பேலியோ டயட்டின் தேவை நிகழ்காலத்திற்கு அவசியமாகிறது.

சரி வாங்க இந்த உணவுமுறையில் என்ன சாப்பிடலாம்,என்ன சாப்பிடக்கூடாது,என்பதனை பற்றி காண்போம்....பேலியோ டயட்டில் உண்ணக்கூடிய உணவுகள்:
பச்சை காய்கறிகள்
பாதாம்
பிஸ்தா
மஞ்சள் கருவுடன் முட்டைகள்
கொழுப்புடன் கூடிய இறைச்சி
கடல் உணவுகள்
நெய்
வெண்ணெய்
சீஸ்
பனீர்
முழுக்கொழுப்பு பால்
தயிர்
மோர்
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்
நல்லெண்ணெய்
அனைத்து வகை கீரைகள்

பேலியோ டயட்டில் தவிர்க்கவேண்டிய உணவுகள்:
தானிய வகைகள்
சக்கரை கலந்த குளிர்பானம் பதப்படுத்தப்பட்ட பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருள்கள்
உப்பு சார்ந்த பொருள்கள்
பதப்படுத்திய பால் பொருள்கள்
எண்ணெயில் பொரித்து பேக் செய்யப்பட்ட பொருள்கள்

உணவே மருந்தாக ஆரோக்கியம் பேணும் இந்த உணவுமுறையினை பின்பற்றி நாம் அனைவரும் நோயில்லாமல் நலமுடன் வாழவேண்டும் என்பதே என் ஆசை.

Tuesday, 11 October 2016

வந்தாச்சு.....இனி ஆன்லைன் மூலம் ரேசன் கார்டு


புதிய ரேசன் கார்டு வாங்க இனி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் தீபாவளி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு நீங்கள் www.tnpds.com என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் தங்கள் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

குடும்பத் தலைவரின் புகைப்படம், குடும்ப உறுப்பினரின் பெயர்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள் என அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்த பின்,காஸ் சிலிண்டர் விபரம் குறித்து பதில் அளிக்க வேண்டும் .

இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்ததற்கான தனி அடையாள எண் வழங்கப்படும்.
பின்னர் அந்த மொபைல் எண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம்.

இந்த திட்டம் தீபாவளி முதல் அமலுக்கு வரவுள்ளது.என்ன மக்களே சந்தோசமான சேதி வந்தாச்சு.....

இனி தாலுகா அலுவலகங்களில் புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க நிற்க தேவையில்லை.

அனைவருக்கும் மகிழ்ச்சி தானே...

மேற்கூறியவற்றை வீடியோ வடிவில்
காண- http://sh.st/30ZYG


 

Monday, 10 October 2016

உங்கள் விருப்பமான சியோமி மொபைலை வெறும் ஒரு ரூபாய்க்கு வாங்கணுமா....


சியோமி மொபைல் நிறுவனம் இந்த வருடமும் தீபாவளி சலுகைகளை இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது. அதுவும் குறிப்பாக நீங்கள் ஒரு ரூபாய்க்கு உங்கள் விருப்பமான சியோமி மொபைலை வாங்க வழிவகை செய்துள்ளது.
இதுபற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யுங்க...
http://sh.st/2MQ3T


Sunday, 9 October 2016

மன்னிப்பு எனும் மந்திரச்சொல்...


நம் மீது தவறு இருந்தால் பாதிக்கப்பட்டவர் சிறியவரோ, பெரியவரோ, ஒரு போதும் மன்னிப்பு கேட்க மறக்க கூடாது.

அவர்களிடம் மன்னிப்பு கேட்பதால் மானம் போய்விடாது...

அவர்கள் உங்களை மன்னிக்கலாம் அல்லது மன்னிக்காமலும் இருக்கலாம். அது பற்றி ஒருபோதும் நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை.

மன்னிக்கிறவர்,மன்னிப்பு எனக்கு பிடிக்காத வார்த்தை என ஒருபோதும் ஒதுங்கி செல்லக்கூடாது.

மன்னிக்கும் மனப்பாங்கு நிச்சயம் ஒவ்வொருவருக்கும் அவசியமும் கூட என்பதை மறக்க கூடாது.

இப்படித்தான்,
ஒருமுறை பெரியவர் கூட்ட நெரிசலில் அடித்து பிடித்து பஸ் ஏறினார்.ஆனாலும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.
கூட்டத்தில் கால்வலியோடு நின்று கொண்டே வந்தார்.ஒருவரும் அவருக்கு சீட் கொடுக்க முன்வரவில்லை.

அப்பொழுது ஒரு பஸ் நிறுத்தம் வந்தது. அப்ப மாணவர்கள் கூட்டமாக சத்தமிட்டு கொண்டு ஏறினர்.

அப்பொழுது ஒரு மாணவர் தவறதுலாக பெரியவர் காலில் மிதித்து விட,அவர் கோபத்தில் திட்டிவிட, அவனோ "மன்னிச்சுடு தாத்தா நா வேணும்னு மிதிக்கல" என சொல்லிச்சிட்டு முன்னே நகர்ந்துட்டான்.பெரியவரோ தன் செயலுக்கு மனுதுக்குள்ளே வருந்தினார்

சிறிது நேரத்தில் கூட்டம் குறைய தொடங்கியது.அப்போது பெரியவரிடம் வசை வாங்கிய மாணவன் அருகில் சீட் காலியானது.
அவனோ ஒரு நொடி கூட தாமதிக்காது,கால்கடுக்க நிற்கும் பெரியவரை அழைத்து அமரச்சொல்ல,அவரோ கண்கலங்கி மறுத்தார்.
வற்புறுத்தி "தாத்தா உட்காரு"
என்று சொல்லிட்டு, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டான்.

இது போன்ற சம்பவங்கள் நம் அன்றாட வாழ்வில் நடப்பவையே...
இது உங்கள் வாழ்விலும் நடந்திருக்கலாம்.

அவ்வாறு நடந்திருந்தால்...
எத்தனை பேர்
இந்த மன்னிப்பு எனும்
மந்திரச்சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்?

மன்னிப்பு எனும் மந்திரச்சொல்லை இதுவரை
பயன்படுத்தவில்லை என்றால்... ஏன்?
இனிமேயாவது பயன்படுத்துங்கள்.

மன்னிப்பு
கல்மனதை கூட கரைக்கும்
மந்திரச்சொல் என்பதை
மறக்காதீர்......


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

நெஞ்சு பொறுக்குதில்லையே.....1


ஆராதனா....

தன் குடும்பத்திற்காக
பதிமூணு வயதில்
பட்டினி கிடந்து
பரலோகம் சென்ற பதுமை...

பெற்றோர் சொல்லை
தட்டாத பிள்ளை;
ஆதலால்,இன்று அவள்
உயிரோடு இல்லை...

வாழ்ந்து முடித்தவர்கள் செய்கிற உண்ணாநோன்பினை
வாழ வேண்டிய வயதில் செய்து
தன் உயிரை துறந்தவள்...

நான் கேட்கிறேன்...........

68 நாட்களாக
ஆகாரம் சாப்பிடாமல்
அப்படி என்ன ஒரு சாதனை வேண்டிகெடக்கு...
அதனை கொண்டாட
அம்மாநில அமைச்சர் வேற...

அன்று இந்த பெண்ணின்
நோன்பு முடிப்பை
சாதனை என சொன்னவர்கள்,
இன்று
வேதனை என சொல்கிறார்கள்...

ஊரார் பேச்சை கேட்டு
தன் பிள்ளை உயிருக்கே
உலை வைத்த பெற்றோர்
உண்மையில் மனிதப்பிறவிகள் தானா..

பள்ளிக்கு செல்லவேண்டிய வயதில்
இந்த பெண்ணின் வாயில்
பால் ஊற்றி பரலோகம் அனுப்பிவிட்டார்களே! பாவிகள்...

இது போன்ற மூடநம்பிக்கையால் மூழ்கிப்போன சமூகத்தை மீட்கப்போவது யாரோ...

இனியாவது இந்த மூடநம்பிக்கையை தூக்கி எறிந்து விடுங்கள்...

வரும் கால சந்ததிகளாவது நிம்மதியாக வாழ்ந்துவிட்டு போகட்டும்.

இதுவே கடைசி ஆராதனவாக இருக்கட்டுமே....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Saturday, 8 October 2016

றெக்கை - தாழ்வாகவே பறக்கிறது
விஜய் சேதுபதி முதல்முறையாக மசாலா படமான இந்த றெக்கையில் நடித்திருக்கிறார்.இந்த படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் லிங்கினை கிளிக் பண்ணுங்க 

Friday, 7 October 2016

தேவி - ரசிக்கலாம்


இயக்குனர் விஜய் கதை மற்றும் திரைக்கதையில் பிரபு தேவா மற்றும் தமன்னா நடித்திருக்கும் தேவி திரைப்பட விமர்சனத்தை பார்க்க பின்வரும் லிங்கினை அழுத்துங்க....
http://sh.st/2YySS