Saturday, 31 December 2016

நல்லது நடக்கட்டும்....புதுவருசம் புறந்தாச்சு.....
அனைத்து நல் உள்ளங்களுக்கும்
என் மனம்கனிந்த ஆங்கில
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

'பீம்' எனும் பணமில்லா பரிவர்த்தனைக்கு வலு சேர்க்கும் வங்கிகள்....


குறிப்பாக பீம் செயலியின் மூலம்,
பணமில்லா பரிவர்த்தனைக்கு துணை புரியும் வங்கிகளின் விவரம்:

அலகாபாத் பாங்க்
ஆந்திரா பாங்க்
ஆக்சிஸ் பாங்க்
பாங்க் ஆப் பரோடா
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் மகாராஷ்டிரா
கனரா பாங்க்
கத்தோலிக் சிறியன் பாங்க்
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
டிசிபி பாங்க்
தேனா பாங்க்
பெடரல் பாங்க்
எச்டிஎப்சி பாங்க்
ஐசிஐசிஐ பாங்க்
ஐடிபிஐ பாங்க்
ஐடிஎப்சி பாங்க்
இந்தியன் பாங்க்
இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்
இந்துஸ் இந்த் பாங்க்
கர்நாடகா பாங்க்
கரூர் வைஸ்யா பாங்க்
கோடக் மகிந்தரா பாங்க்
ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் பஞ்சாப் நேஷனல் பாங்க்
ஆர்பிஎல் பாங்க்
சவுத் இந்தியன் பாங்க்
ஸ்டாண்டர்டு சார்ட்டடு பாங்க்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
சிண்டிகேட் பாங்க்
யூனியன் பாங்க் ஆப் இந்தியா யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா
விஜயா பாங்க்


பணமில்லா பரிவர்த்தனைக்கு வந்தாச்சு புதிய 'பீம்' ஆண்ட்ராய்டு ஆப்.....?


பணமில்லா பரிவர்த்தனையின் ஒருபகுதியாக,இந்திய அரசு புதிய 'பீம்'
(பாரத் இன்டர்பேஸ் பார் மணி) எனும் ஆண்ட்ராய்டு செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலியினை பற்றிய உண்மையான பல தகவல்களை தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க......
Link:1
http://viid.me/qyYqQe
Link:2
https://youtu.be/lBW758jg4yo

அர்த்தமுள்ள வரிகள்-32


மனிதனுக்கு பிரச்சனையே
வயிறு தான்.
பாதிப்பேர் குறைக்க ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.....
பாதிப்பேர் நிறைக்க ஓடிக்கொண்டு
இருக்கிறார்கள்......

Friday, 30 December 2016

மோ திரைப்படம்-மோசமில்லை ரசிக்கலாம்


ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆர்ஜே சுரேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த மோ.
இந்த திரைப்பட விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
Link:1
http://viid.me/qykRxN
Link:2
https://youtu.be/8_Mqfz7uq64


துருவங்கள் பதினாறு-புதியதோர் அனுபவம்இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்து வெளிவந்திருக்கும் முற்றிலும்
மாறுபட்ட திரைப்படம் தான்
துருவங்கள் பதினாறு.
இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
Link:1
http://viid.me/qykm79
Link:2
https://youtu.be/xRWyfVjTk68

Thursday, 29 December 2016

அர்த்தமுள்ள வரிகள்-31


அருகில் இருக்கும் அன்பானவர்களை
ஒருபோதும் தொலைத்து விடாதீர்கள். இல்லையென்றால்;
எங்கு தேடினாலும் உங்களது கண்களுக்கு மட்டும் ஏனோ
அவர்கள் புலப்படவே மாட்டார்கள்.

மக்களே.... நமக்கு உசுரு முக்கியம்


இன்று செய்தித்தாளை எதார்த்தமாக புரட்டும் பொழுது,இந்த செய்தி மிகவும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அப்படி என்னனு கேட்குறீங்களா...?

செய்தி இது தான்.

இந்தியாவிலேயே அதிகமான சாலை விபத்து ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மேலும் சாலை விபத்தில் வருடந்தோறும் அதிகம் மரணித்தோர் அடங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில்,அதாவது உத்தரப்பிரதேசுக்கு அடுத்த இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்களுடன் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் சுமார் பதினைந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்தில் மரணித்துள்ளனர்.சரியாக சொன்னால் சாலை விபத்தால் வருடந்தோறும் 15,500 பேர் மரணத்தை அடைந்திருக்கிறார்கள்.

என் கணிப்பு படி,இதற்கு முதன்மை காரணம் ஆக நான் கருதுவது....

மது அருந்தி வண்டி ஓட்டுவது..... செல்பேசியில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுவது......
அளவுக்கு அதிகமான வேகத்தில்
வண்டியை ஓட்டுவது....
அஜாக்கிரதையாக வண்டியை
ஓட்டுவது...

ஓய்வில்லாமல் வண்டியினை ஓட்டுவது
(அதிகாலையில் நிகழும் பெரும்பாலான விபத்துகளுக்கு இதுவே காரணமாக இருக்கிறது)...

மேல்குறிப்பிட்ட யாவும் வண்டி ஓட்டும் நபர்களால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் என்றால்........

பயணம் செய்பவர்களின் சேஷ்ட்டை
மற்றும் அஜாக்கிரதையால் ஏற்படுகிற விபத்துக்கள் இன்னொரு ரகம்.

சரி...இது தான் இப்படி என்றால்,நம்மூர் சாலைகள் மற்றும் வாகனங்கள் (இரும்புக்கடைக்கு போக வேண்டியவை இன்னும் நடமாடும் அமரர் ஊர்தியாக
சாலைகளில் வலம் வருகின்றன)
இன்னும் மோசம்.நம்மூர் சாலைகளே பல வாகனங்களை பதம் பார்த்து விடுகிறது.

இதுதான் இப்படி என்றால்......
சரியாக சேவையினை செய்யவேண்டிய சாலை போக்குவரத்து (RTO) அதிகாரிகள் சிலரோ பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு,
மோசமான வாகனங்களை கூட நன்றாக இருப்பதாக சொல்லி சான்றளித்து,பலரை கொல்வதற்க்கு துணைபோகிறார்கள்(சமீபத்தில் கூட பள்ளிக்குழந்தை ஒன்று பள்ளி வாகன ஓட்டை வழியாக விழுந்து இறந்தது  என்ற செய்தியினை கேள்விப்பட்டிருப்பீர்கள்).

இத்தகைய பொறுப்பற்ற தன்மைக்கு அரசு கடும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாது......

மது அருந்தி வண்டி ஓட்டுவோரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் (ஏன் மதுவுக்கே முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது...? நீதிமன்றம் உத்தரவிட்டும், நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பது வேதனையளிக்கும் விஷயமே).

சாலைகளை முறைப்படுத்த வேண்டும். எவ்வாறு என்றால்,வெளிநாட்டில் வேகமாக மற்றும் மெதுவாக செல்ல தனித்தனியாக சாலைகள் இருப்பதை போன்று.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் (ஒன்று தெரியுமா....?
சாலை விபத்துகளில் இறப்போர் பெரும்பாலானோர் தலையில் அடிபட்டு தான்)

நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர் தங்கும் ஓய்வறைகளை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் இரு ஓட்டுநர் முறையினை அமல்படுத்த வேண்டும் (இதன் மூலம் ஓய்வில்லாமல் வண்டி ஓட்டி அதன் மூலம் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்).

நீங்க சொல்றது எல்லாம் சரி. சாலையில் ஓரமாக நடப்போரையும் மற்றும் சாலையோரத்தில் உறங்குவோரையும் எற்றிக் கொல்கிறார்களே...அவர்களை என்ன செய்றது...? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

மனிதம் செத்து விட்டது என்பதை தவிர்த்து வேற என்ன சொல்றது (மனிதனை தண்டிக்கலாம்.....
மிருகத்தை....?)

எது எப்படியோ...இனியாவது நம் உயிரோடும்,உடலோடும் விளையாடாமல் எச்சரிக்கையாக இருப்போம்.

மரணம் நம்மை தேடி வந்தால்,
அது நம் தப்பில்லை.
ஆனால்......
அதுவே மரணத்தை நாம் தேடி சென்றால்,அது நம் தவறு தானே.

என்ன தான் சொல்லுங்க மக்களே....
நம் உசுரு நமக்கு மட்டுமல்ல;
நம் குடும்பத்துக்கும் முக்கியம்.

விவேகானந்தர் சொன்னது.....


பிறர் முதுகுக்கு பின்னால்,
நாம் செய்ய வேண்டிய வேலை
என்ன தெரியுமா.....?
அவர்களை தட்டிக்கொடுப்பது மட்டுமே.

சார்லி சாப்ளின் சொன்னது....


உன் மனம் வலிக்கும் போது,
நீ சிரி......
பிறர் மனம் வலிக்கும் போது,
நீ சிரிக்க வை.....

ஹிட்லர் சொன்னது......


இந்த உலகமே உன்னை திரும்பி
பார்க்க வேண்டுமா....?
ரொம்ப எளிது,
நீ யாரையும் திரும்பி பார்க்காதே.

Monday, 26 December 2016

தங்கமோகத்தில் தகிக்கும் தமிழகம்..


இரண்டு நாளாக இணையத்தில் எந்த செய்தி தளத்தை திறந்தாலும்,இந்த செய்தி நம் கண் முன்னே வந்து பல் இளித்து நிற்கிறது.

ஆமாங்க...அது வேற ஒன்றுமில்லை...
நம் நாட்டில் உள்ள தங்கமோகம் பற்றியது தான்....

நாட்டிலேயே  தங்கமோகத்தில் புதைந்து கிடக்கும் மாநிலங்களில் நம் தமிழகம் இடம்பெற்று இருக்கிறது என்றால் பெரிதாக நமக்கு ஒன்றும் வியப்பு இருக்க போவதில்லை.

காரணம்...இதற்கு நம்மூரில் தெருக்கு தெரு காலம்காலமாக புதிது புதிதாய் முளைத்து நிற்கும் நகைக்கடைகள் மற்றும் நகைக்கடன் தரும் நிதி நிறுவனங்களுமே சாட்சி.

நாட்டிலேயே சரி நம்மாளுங்க தங்கமோகத்தில் எத்தனாவது இடம் பிடித்திருக்கிறார்கள் என முதலில் பார்ப்போம்....

கிராமப்புற அளவில் நாட்டிலேயே கேரளாவிற்கு அடுத்த படியாக அதாவது இரண்டாம் இடத்தில் உள்ளது நம்  தமிழகம் (நம் கிராமப்புற மக்கள் சராசரியாக 1,08,094 ரூபாய்க்கு தங்கம் வச்சுருக்காங்களாம்).

நகர்ப்புற அளவில் கோவாவிற்கு அடுத்த படியாக அதாவது மூன்றாவது இடத்தில் உள்ளது நம்  தமிழகம்
(நம் நகர்ப்புற மக்கள் சராசரியாக
1,86,738 ரூபாய்க்கு தங்கம் வச்சுருக்காங்களாம்).இதுலயும் ஒண்ணாவது இடத்தில் கேரளா தான் இருக்காம்.


ஒப்பீட்டளவில் பார்க்கும் பொழுது, தமிழக நகர்ப்புற அளவில் அதிக தங்கமோகம் இருப்பதாக தோன்றும்.
ஆனால் ஒட்டுமொத்த அளவில் பார்க்கும் பொழுது,தமிழக கிராமப்புறங்களில் தான் அதிக
தங்கநகை மீதான மோகம் உள்ளது என்பதே எதார்த்த நிலவரம்.

இன்னொன்று தெரியுமா....?

மிசோரம் மக்கள் தான்...
கிராம மற்றும் நகர்ப்புற அளவில் நாட்டிலேயே குறைந்த அளவிலான
தங்கத்தை கையிருப்பில்
வைத்திருப்பவர்கள்.

ஒரு வேளை சிறுமாநிலம் என்பதால... இல்லை..உண்மையில் தங்கமோகம் இல்லாதவர்களா....?
இல்லை.... ஏழ்மை நிலையில் இருக்கிறார்களா என்பதால....

என்ன காரணம்....என்று தெளிவான விவரம் இதுவரை தெரியவில்லை.

ஏதோ ஒருவகையில் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கும்,இந்த
கையிருப்பு தங்கத்திற்கும்
தொடர்பு உண்டு,என்பதால் யாரும் இதனை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது.


ஒன்று மட்டும் புரிகிறது.....
தங்கம் என்கிற கையிருப்பை வைத்து பார்க்கிற பொழுது,நாட்டிலேயே நம்மாளுங்களும் ஒருவகையில்
பணக்காரங்க தான்...

அடுத்த வருடம் தமிழ்நாடு தங்க மோகத்தில் முதலிடம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நயா பைசா செலவில்லாமல் 2ஜிபி 4ஜி இன்டர்நெட் நெட் டேட்டா பெறலாம் வாங்க...


நீங்க ஐடியா வாடிக்கையாளர் ஆக இருந்தால் இந்த இனிப்பான செய்தி உங்களுக்கு தான்...

ஆமாங்க...

நயா பைசா செலவில்லாமல் 2ஜிபி 4ஜி இன்டர்நெட் நெட் டேட்டா பெறலாம்.

அது எப்படி....?...என தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
Link:1
http://viid.me/qtTVfy
Link:2
https://youtu.be/6XJEye-rDVA

ரிக்டர் என்ன தான் சொல்லுது...?


அதென்னப்பா ரிக்டர்....எங்கேயோ கேட்ட வார்த்தை போல தெரியுதே...!!

பொதுவாக நம்மில் பலருக்கு நில நடுக்கம் என்றால் என்ன....? என்று அடிக்கடி ஒரு கேள்வி உண்டாகும்.

அது என்னவென்றால்...

நமது பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகப்படியாக உண்டாகும் பொழுது, பெரிய அளவில் ஆற்றல் வெளிப்பட்டு அதன் மூலம் நிலத்தளத்தட்டுகள் நகர்கின்றன.இதனால் உருவாகும் அதிர்வே நிலநடுக்கம்,பூகம்பம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இந்த நில நடுக்கம் மற்றும் நில
அதிர்வு என்கிற வார்த்தைகளை செய்தியாளர்கள் உச்சரிக்கும்
பொழுது கூடவே இந்த வார்த்தை ஓட்டிக்கொண்டே வரும்.

ஆம்....அதாங்க ரிக்டர் அளவுகோல்...

ஒன்று தெரியுமா உங்களுக்கு....?

நாம் நினைப்பது போல் இது உண்மையில் இயற்பியல் கருவி அல்ல; மாறாக இது கணித சமன்பாடு ஆகும்.

அதுசரி...இதற்கு பெயர் ஏன் ரிக்டர் என வந்தது என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

சரி வாங்க...நான் அது பற்றி சற்று விரிவாக சொல்கிறேன்.

அமெரிக்காவில் குறிப்பாக கலிபோர்னியா பகுதியில் அடிக்கடி ஏற்படுகிற நிலநடுக்கத்தின் உண்மைத்தன்மையினை கண்டறிய கியூ வாடாட்டி ஆலோசனையின் பேரில் சார்லஸ் ரிக்டர் மற்றும் பையினோ கூட்டன்பெர்க் இருவரும் முயற்சி செய்ததன் விளைவாக சீஸ்மோகிராப் என சொல்லப்படுகிற நிலநடுக்க வரைவுமானியை கண்டறிகின்றனர்.

அதன் பின்னர் இந்த நில நடுக்கத்தின் தீவிரத்தை அளப்பதற்காக இருவரில் ஒருவரான சார்லஸ் ரிக்டர்,1934 ஆம்
ஆண்டில் தனது தீவிர முயற்சியினால்
கணித வாய்ப்பாட்டை உருவாக்கினார்.அதுவே பின்னர்
இவர் பெயரான ரிக்டர் கொண்டு அழைக்கப்பட்டது.அது தான் ரிக்டர் அளவுகோல் என்று இன்றும்
தொடர்கிறது.

மனிதனால் உணர முடியாத நில நடுக்கங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது,
இவை மைக்ரோ நிலநடுக்கம் என்றழைக்கப்படும்.

ஆனால் இது போன்ற சாதாரண
நில அதிர்வில் இருந்து மிகப்பெரிய
நில அதிர்வு வரை முன்கூட்டியே உணரும் சக்தி பறவைகளுக்கும்,
மிருகங்களுக்கும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அது எப்படி...? அவைகளால் மட்டும்
முன்னரே எவ்வாறு அறியப்படுகிறது என்று அறிய மனிதன் பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறான். விடை தான் முழுமையாக கிடைத்த பாடில்லை.

அதுதான் அந்த ஜீவராசிகளுக்கு மட்டுமே இயற்கையால் கொடுக்கப்பட்ட
வரமோ...என்னமோ...யார் அறிவார்.

இந்த ரிக்டர் அளவுகோலின் படி
2 or 3 என்கிற அளவில் இருக்கும் நில அதிர்வை மனிதனால் உணர முடிவதில்லை.அதுவே  6 or 7க்கு மேல் பதிவாகும் பொழுது மனிதனால் உணரமுடிந்தாலும்,நிலைமை என்னவோ மோசமாகிவிடுகிறது.

குறிப்பாக ஜனம் அதிகம் இருக்கும் இடத்தில் ஏற்படும் பொழுது உயிர் சேதம் பெரிய அளவில் இருக்கக்கூடும்.
மாறாக அதுவே இயற்கை வனப்பகுதியில் ஏற்படும் பொழுது பெரிய அளவில் நாசம் ஏற்படுவதில்லை.

இன்று கூட பாருங்கள்...சிலி நாட்டில் என்ற 7.6 என்கிற அளவில் பதிவாகி மிகப்பெரிய அளவில் நாசம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ நில அதிர்வின் வீரியத்தை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள கிடைத்த தற்போதைய எச்சரிக்கை மணி,
'ரிக்டர்' அளவுகோல் என்றால் மிகையில்லை.

தற்போதைய நிலவரப்படி,
இந்த துறையில் இன்னும் முன்னேற மனிதன் நெடுந்தூரம் செல்வது அவசியம் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

அதுவரைக்கும் இந்த ரிக்டர் என்ன தான் சொல்லுதுனு கொஞ்சம் கேட்போமே...

பேசும் படம்-5


மேலே உள்ள படம் உங்களுக்கு மனதிற்குள் என்ன மாதிரியான சிந்தனையை தூண்டுகிறதோ அதனை கருத்து பகுதியில் பதிவிட்டு செல்லலாம். 

Sunday, 25 December 2016

வேலியே பயிரை மேயலாமா...?


மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை நகையாக மாற்றி வீட்டில் வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று வங்கி லாக்கர்களில் வைத்தால்,அந்த வங்கி ஊழியர்களே அதற்கு வேட்டு வைத்தால் எப்படி....?

ஆமாங்க....

திருவாரூர் மாவட்ட பாவட்டக்குடியில் உள்ள கனரா வங்கியில் இரண்டு கோடி மதிப்பிலான ஒரிஜினல் தங்கநகைகளை நயவஞ்சமாக திருடிவிட்டு,அதற்கு பதிலாக அச்சு அசலான போலி தங்க முலாம் பூசிய நகைகளை வைத்திருக்கின்றார் அங்கு வேலை பார்க்கும் ஊழியரே...!

இந்த விவரம் தெரிய வந்ததும், உடனடியாக அந்த வங்கி மேலாளர் காவல் துறைக்கு தகவல் சொல்ல,
காணாமல் போன சம்பந்தப்பட்ட
நகைகளை மாற்றி வைத்த வங்கி நகை மதிப்பீட்டு ஊழியர் ஜெகதீசை போலீஸ்
தேடி வருவதாக தகவல்.

நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள்....
திருடனுக்கு பயந்து போலீஸ் வீட்டில் ஒரு பொருளை வைத்தால்,அந்த பொருளை போலீசே திருடினால் எப்படி....?

அப்படி தான் இங்கும்....
வேலியே பயிரை மேய்கிறது.

அன்றாடம் இது போன்ற செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது, என்றாலும் இதற்கு யார் தான்
முற்றுப்புள்ளி வாய்ப்பது....?

என்ன செய்ய....?
மனிதனுக்கு ஆசை வந்தால் பரவாயில்லை:ஆனால்
பேராசை வந்தால்.....

இது உண்மையா.... இல்ல பொய்யா ...?


எனக்கு கிடைத்த புதிய அதிரவைக்கும்
வரலாற்று சேதியினை சொல்கிறேன்.

செய்தி இதுதான்....

தாஜ்மஹால் கட்டிய ஷாஜகானுக்கு ஏழு மனைவிகள்...

அந்த ஏழு மனைவிகளில் நாலாவது நபர் தான் மும்தாஜ் பேகம்...
(இவர் நினைவாக தான் தாஜ்மஹால் ஷாஜகான் அவர்களால் கட்டப்பட்டது என்று நான் வரலாற்று பாடத்தில் படித்து இருக்கிறேன்)

இந்த மும்தாஜ் ஏற்கனவே மணம் முடித்தவர் என்றும்,இவரை திருமணம் செய்வதற்காக இவரது கணவனை ஷாஜகான் கொன்றார்....

மும்தாஜ் தனது பதினாலாவது பிரசவத்தின் போது உயிர் இழந்தார்...

மும்தாஜ் இறந்த பின் மும்தாஜின் தங்கையை ஷாஜகான் மணமுடித்தார்..

இந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி உங்களுக்கு ஏதாவது கருத்தொற்றுமை இல்லை என்றால், தயவு செய்து விவரத்தோடு
சொல்லுங்கள்.

நானும் தெரிந்து கொள்கிறேன்..இது வரலாற்று பிழையா அல்லது வரலாற்று உண்மையா என்று.

தெரிந்துகொள்வதால் ஒண்ணும் தப்பில்லையே...!

Saturday, 24 December 2016

வயிறு குலுங்க சிரிக்க வைத்த மாமனிதன்...


தம்மாந்துண்டு மீசை வைத்துக்கொண்டு இருவர் இவ்வுலகை ஆட்டிப்படைத்தனர்.

அவர்களில் ஒருவர் மற்ற
மனிதனை சாகடித்து அதன் மூலம்
இன்பத்தை சுவைத்து மண்ணோடு மண்ணாகிப்போனார்.
இன்னுருவரோ தன் துன்பத்தை மறைத்து மற்ற மனிதனை இன்பத்தில் ஆழ்த்தினார்.

ஒருவர் ஹிட்லர்....

நான் சொல்லும் இன்னொருவர் யார்
என்று தெரிகிறதா....?

இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் மனதை விட்டு மறையாது,இன்றும் நம் மனதில் வாழும் மாமனிதன்.


ஆம்...
நான் சொல்வது சார்லி சாப்ளின் தான்...

அந்த மாமனிதன் இந்த மண்ணை விட்டு சென்ற நாள் தான் இன்று.

நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த
அந்த மாமனிதனை மறக்காது நினைவில் கொள்வோம்.

குழந்தை இயேசு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது மனம் கனிந்த இதயப்பூர்வமான குழந்தை இயேசு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Friday, 23 December 2016

தங்கல்(யுத்தம்)-சமூகம் சார்ந்த படம்


அமீர் கான் நடிப்பில் மல்யுத்த விளையாட்டை மையப்படுத்தி
வெளிவந்திருக்கும் திரைப்படம் தான்
தங்கல்(யுத்தம்).இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://viid.me/qts1TU

பலே வெள்ளையத்தேவா-பார்க்கலாம்...


இயக்குனர் சசிகுமார்,கோவைசரளா சங்கிலி முருகன் மற்றும் ரோகினி நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பலே வெள்ளையத்தேவா.
இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
http://viid.me/qtph3I

கத்தி சண்டை-கலகலப்புவிஷால்,தமன்னா,வடிவேலு மற்றும்
சூரி நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான்
கத்தி சண்டை.இந்த திரைப்பட விமர்சனத்தை காண பின்வரும்
வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க....
http://viid.me/qto435

Wednesday, 21 December 2016

வீரசிவாஜி-காமெடி கலாட்டா


விக்ரம் பிரபு-ஷாம்லி இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் வீரசிவாஜி.இந்த திரைப்பட விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://viid.me/qr8jxK

வானவில் தேசத்திற்கு வந்த சோதனை.....
ஆப்பிரிக்க கண்டத்தின் தென் கோடியில் அமைந்திருக்கும் தேசம்..

உலகில் அதிகளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இயற்கை நிரம்பிய அழகிய தேசம்...

பல்வேறு இனத்தவர் மற்றும் மொழியினர் வாழும் வானவில் தேசம்..

நம் நாட்டு தேசத்தந்தை காந்தியை, அரசியலில் இறங்கி வெள்ளையனை எதிர்த்து போராட தூண்டிய தேசம்...

ஒரு காலத்தில் நிறவெறியால் இருளில் மூழ்கியிருந்து,இன்று மற்ற நாடுகளுக்கே முன்னுதாரணமாக விளங்கும் நாடு...

வைரம் அபரிமிதமாக நிறைந்திருக்கும்  தேசம்...

ஆம்...நான் சொல்வது
தென்னாப்பிரிக்கா தான்.....இத்தகைய சிறப்புமிகு தேசத்தின் இன்னொரு முகத்தை உங்கள் பார்வைக்கு கொண்டுவரவே இந்த பதிவு...

சரி...நான் விசயத்திற்கு வருகிறேன்..

இந்த வானவில் தேசத்தின் மக்கள் தொகை ஐந்தரை கோடி.இந்த ஜனத்தொகையில் 10% பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா...?

நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். காரணம்,புள்ளிவிவரங்கள் அனைத்தும் இதனை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளன.

2013ம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுக்க நாற்பத்து நான்கு மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள்.

உலகளவில் எய்ட்ஸ் நோய்த்தாக்கம் அதிகம் உள்ளோர் ஆப்பிரிக்க நாடுகளான சுவாசிலாந்து,லெசோதோ போட்ஸ்வானா மற்றும் தென்னாப்பிரிக்கா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

2013ம் ஆண்டு & 2015ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி தென்னாப்பிரிக்காவில் மட்டும் முறையே 2,60,000 & 1,62,445 பேர் HIV நோய்தாக்குதலுக்கு உள்ளாகி,அது தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.இது அந்த நாட்டில் இறந்தோரில் 30% என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
HIV நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களில் 59% கர்ப்பிணி பெண்களே.

குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் பள்ளி செல்லும் சிறுமிகள் சுமார்
28% இந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிச்சிறார்கள் 4% என்றளவில்
இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2011ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி, தென்னாப்பிரிக்காவில் பள்ளி செல்லும் பெண் பிள்ளைகள் சுமார் 94000 பேர் கருவுற்று இருந்ததாகவும்,
இதில் 77000 பேர் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும்,தகவல்களை
வெளியிட்டு தன் அதிர்ச்சியினை வெளியிட்டுள்ளார் அந்த நாட்டு சுகாதார துறை அமைச்சர்.

இதில் இருந்தே,அந்த நாட்டில் பெண்
மற்றும் ஆண் குழந்தைகள் எவ்வாறு எளிதில் இந்த முறையற்ற தகாத உடலுறவால்,இந்த கொடிய நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று புரியும்.

எய்ட்சினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளின் நோய்த்தொற்றுக்கு காரணமே, ஏற்கனவே இந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர்களின் தாய்மார்கள் என்பது தான் மிகவும் வேதனையிலும்
வேதனை.

தாய்மார்கள் தெரிந்தோ,தெரியாமலோ, தாங்கள் கருவில் சுமக்கும் சிசுவுக்கும், இந்த பெறப்பட்ட நோய் எதிர்ப்பு குறை நோயினை கடத்திவிட்டு இறந்து போகிறார்கள்.

ஒருபக்கம் இந்தநாடு இந்த AIDS
நோயில் இருந்து மக்களை மீட்க பல
முயற்சி செய்தாலும்,பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை என்னவோ
குறைந்தபாடே இல்லை.

குறிப்பாக ஆணுறை(condom)
பயன்படுத்த சொல்லி தென்னாப்பிரிக்கா அரசு
எவ்வளவோ மக்களை எச்சரித்து
வற்புறுத்தினாலும்,மக்கள் ஆணுறை
பயன்படுத்த மறுத்து எய்ட்ஸ் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாவதாக தொடர் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் ART என்று அழைக்கப்படும் ரெட்ரோ வைரஸுக்கு எதிரான மருந்து சிகிச்சை அதிகளவில் நடைமுறையில் உள்ளது,இந்த தென்னாப்பிரிக்காவில் தான்.

பாதுகாப்பற்ற உறவை தவிர்த்தாலே பல நன்மைகள் வானவில் தேசத்திற்கு
வந்து சேரும் என்பதே நிதர்சனம்.

Monday, 19 December 2016

நம் நாட்டில் இப்படியும் ஒரு அரசியல்வாதி..,


நம் நாட்டில் அரசியல் வாதிகள் என்றாலே முகம் சுளிக்கக்கூடியவர்களாவே இருக்கிறார்கள்.காரணம் அவர்கள் செயல்பாடுகளே...

வெகுசிலரே இதில் விதிவிலக்காக
நம் பார்வைக்கு நட்சத்திரங்களாக
ஜொலிக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரே இவர்...

இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் முழுக்க முடங்கியதன் மூலம்
ஏராளமான மக்களின் வரிப்பணம் வீணாகிப்போனது அனைவரும் அறிந்ததே...

இப்படி வீணாகிப்போன வரிப்பணத்திற்கு ஈடு செய்யும் விதமாக, முடங்கிப்போன பாராளுமன்ற நாள்களில் தான் கலந்து கொண்டதற்காக தனக்கு
வழங்கப்பட்ட சம்பள படியை திரும்ப ஒப்படைத்திருக்கிறார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றால்
நம்ப முடிகிறதா...?

அதுவும் நம் நாட்டில்....

பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெறாமல் சலுகைகளை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை
பார்த்திருக்கோம்...

ஒருவேளை பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெற்றாலும், கூச்சல் போட்டு அமளியினை உருவாக்கும் அரசியல் வாதியை பார்த்திருக்கிறோம்...

ஆனால்,தான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிற இந்த 16
ஆண்டுகளில் இது நாள் வரை,ஒரு முறை கூட பாராளுமன்றத்தில்
அமளியில் ஈடுபட்டதில்லை.

தவிர்க்க முடியாத காரணங்களை விடுத்து,தன்னால் முடிந்த அளவு பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் பெரும்பாலும் ஆஜராகி விடுகிறார்.

தன் தொகுதி பிரச்சனைகளுக்காக மக்கள் எளிதில் அணுக கூடிய எளிய படித்த பண்பாளர்.

இவர் வேறு யாருமில்லை.

பிஜு ஜனதா தளக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்
திரு.பைஜெயந்த் ஜெய் பாண்டா(
ஒடிஷாவின் கேண்டர்பரா )அவர்கள்.

மக்களை நேசிக்கும் இவரை பாராட்டுவோம்....

Sunday, 18 December 2016

பறவையின் எச்சத்தால் பணக்கார நாடான குட்டித்தீவு..


அது எப்படி...பறவையின் எச்சத்தால் பணக்கார நாடாக முடியும்....!!!.என்று
உங்களை போல எனக்கும் சற்று வியப்பாக  தான் இருந்தது.அதற்கு விடை தேட முயற்சித்ததன் விளைவே இந்த பதிவு.

சரி வாங்க...அந்த நாட்டை பற்றி சொல்கிறேன்...கண்டுபிடிங்க பார்ப்போம்...!

தென் பசிபிக் கடலில் சரியாக ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் இருந்து சுமார் 4000 கிலோ மீட்டர் தொலைவில் நீள் வட்ட வடிவில் அமைந்திருக்கும் அமைதியான,
அழகிய குட்டித்தீவு.

இந்த நாடு 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்,சுமார் 10000 அளவிலான மக்கள் தொகை மட்டுமே கொண்ட சிறிய தேசம்.இந்த நாடு உலகிலேயே பரப்பளவில் மூன்றாவது சிறிய நாடாக உள்ளது.பவளப்பாறைகள் சூழ்ந்த தேசம்.

என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா....?

இல்லையா.....?

அந்த அழகிய தேசத்தின் பெயர்
இது தான்-நவ்ரூ


1968ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்தது இந்த நாடு. 1968ம் ஆண்டு அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.

மீன் பிடித்தல் மற்றும் விவசாயமே
இந்த நாட்டு மக்களின் பிராதான தொழில்.

தங்கள் நாட்டின் இயற்கை கொடையினை பற்றி நீண்ட நாள்களாக அறியாதவர்களாகவே அந்நாட்டு மக்கள் இருந்தனர்.ஒருவழியாக
தங்கள் நாட்டின் மதிப்பை
வெளிநாட்டினர் வாயிலாக அறிந்து கொண்டனர் அந்நாட்டு மக்கள்.

ஆமாங்க...

அது நாள் வரை,அந்நாட்டு மக்களுக்கு தங்கள் நாட்டில் மலை போல் குவிந்து கிடப்பது,விலை மதிக்க முடியாத பாஸ்பேட் என்கிற பொக்கிஷம்
என்று தெரியவில்லை.

அது என்ன பாஸ்பேட்...? அதனால்  என்ன பயன்....?

தாவரங்கள் உயிர்வாழ மிகவும் அவசியமான உரமாக....
பிளாஸ்டிக் தயாரிக்க...
மனிதனுக்கு அவசியமான தாது உப்பு...
வெடிபொருள் தயாரிக்க...

நான் மேலே சொன்னது சின்ன உதாரணம் தான்.இதன் பயன்பாடு பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றால்,இந்த ஒரு பதிவு போதாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி..விசயத்திற்கு வருகிறேன்...

இது போன்ற பாஸ்பேட் படிமங்கள் நிறைந்த பாறைகள்,பசிபிக் கடலில் உள்ள மற்ற தீவுகளான பனபா மற்றும் மகாடீ போன்ற தீவுகளுக்கு அடுத்த படியாக இந்த நவ்ரூ தீவில் தான் அதிகப்படியாக உள்ளன.

இந்த பாஸ்பேட் பின்னணியில் தான் பறவையின் எச்சம் இருக்கிறது.

என்ன ஆச்சர்யமா இருக்கா..!!!

ஆமாங்க....இது போன்ற பறவையின் எச்சம் நிறைந்த பாறைகள் தீவின் மையப்பகுதியில் இருக்கிறது.
இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பறவைகள் பல இங்கு வந்து எச்சம் இட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.அந்த எச்சத்தில் தான் பாஸ்பேட் நிறைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கேட்பார் அற்று கெடக்கும் பொக்கிஷத்தை வெளிநாட்டுக்காரன் சும்மா விடுவானா என்ன......?

இயற்கை செல்வத்தை அள்ளி செல்ல,
'பணம் தருகிறேன்'என ஆசை காட்டி  நவ்ரூவை பணியவைக்க முயற்சித்தன பல வெள்ளைக்கார நாடுகள்.

ஆசை யாரைத்தான் விட்டது...

ஒருவழியாக 1960 மற்றும் 1970 களில் ஒப்பந்தங்கள் பல போடப்பட்டு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு பாஸ்பேட் விற்று, செல்வம் கொழிக்கும் நாடாக நவ்ரூ மாறியது.

அதன் தொடர்ச்சியாக சவுதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக தனி நபர் வருமானத்தில் உச்சத்தை எட்டியது நவ்ரூ.

அதுவரை பணத்திற்கு கஷ்டப்பட்ட நவ்ரூ மக்கள்,பணத்தை செலவழிக்க தெரியாமல் திண்டாடித்தான் போனார்கள்.

பக்கத்துக்கு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசீலாந்து நாடுகளுக்கு தங்களது பிள்ளைகளை படிக்க அனுப்பி வைத்தார்கள். உழைப்பை மறந்து கேளிக்கைகளில் நாட்டம் கொண்டார்கள்.அதிகளவில் குடிக்கும்,போதைக்கும் அடிமையானார்கள்.

இயற்கையாக இந்தத்தீவில் விவசாயம் செய்வது மிகவும் அரிது.காரணம் இங்கு குறைந்த அளவிலான பயிர் விளைவிக்கும் நிலம் கடலின் ஒரு ஓரப்பகுதியில் மட்டுமே இருக்கிறது .
அதிலும் தேங்காய் மற்றும் பழங்களான வாழை,அன்னாசி போன்றவை மட்டுமே அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

ஆகவே உணவுக்காக பிற நாடுகளை சார்ந்தே இன்றும் இருக்கிறது இந்த நவ்ரூ தீவு.


இந்த நாட்டு மக்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்ட சிக்கன் மற்றும் இதர பதப்படுத்தட்ட உணவுகளையே உண்பதால்,
அவர்களது உடல் எடை கூடி, இன்று உலகளவில் அதிக பருமன் உடையோர் அதாவது,தொண்ணுற்று ஐந்து(95%) சதவீதத்திற்கும் அதிகமானோர் வசிப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

சொகுசு வாழ்க்கையால் உடல் பெருத்த
அந்த நாட்டு மக்களை நடை பயில சொல்லி உத்தரவு போட்டு இருக்கிறதாம் அந்த நாட்டு அரசு.

அதோடு 31 சதவீதம் பேர் நீரழிவு
என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோயாளிகள் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்.இது போக கிட்னி,இதயம் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் இங்கு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நாட்டுக்கு என்று தனியாக ராணுவம் கிடையாது.உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டும் குறைந்தளவில் காவலர்கள் பணியில் உள்ளனர்.தன் நாட்டு பாதுகாப்பிற்கு முழுமையாக ஆஸ்திரேலியா ராணுவத்தையே சார்ந்துள்ளது.

ஒன்று தெரியுமா...?
2014ல் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் தேடி சென்ற 157 தமிழ் அகதிகளை,ஆஸ்திரேலியா தன் நாட்டில் அடைக்கலம் கொடுக்காமல்,
அவர்களை நவுருவுக்கு அனுப்பி
வைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்... ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் எந்தளவு நவ்ரூ நாட்டின் மேல் உள்ளது என்று.

நவ்ரூ நாடு குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா,தென்கொரியா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பை கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் சுரங்கத்தொழிலில் கொடி கட்டி பறந்தாலும்,தனது இயற்கை செல்வத்தை முழுமையாக இழந்து,பொலிவிழந்து வறுமையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது நவ்ரூ என்றால் அது தான் இன்றைய எதார்த்த நிலைமை.

பறவையின் எச்சத்தால் பணம் கொழித்த தேசம்..
மனிதனின் பேராசையால்
மரணித்து கொண்டிருக்கிறது....

Friday, 16 December 2016

மக்களே உஷார்.....இந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடாதீங்க..


இந்திய அரசு 344 FDC (fixed dose combination) மருந்துகளை தடை செய்வதாக அறிவித்துள்ளது.

இதில் முக்கியமாக விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா,கோரெக்ஸ் காப் சிரப்,
பெனிசிடைல் காப் சிரப் போன்ற பிரபல மருந்துகளும் அடக்கம்.

சரி வாங்க மேலும் பல முக்கியமான தடை செய்யப்பட்ட மருந்துகளின் கலவையினை காண்போம்.

இதில் ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் மருந்து கலவை இருப்பின்,அதனை பயன்படுத்துவதை தவிருங்கள். காரணம் அத்தகைய மருந்துகளின் கூட்டுக்கலவை மனிதனுக்கு தீங்கு விளைவிப்பவை என்று கண்டறியப்பட்டு,அதனை விற்கவும்,பயன்படுத்தவும் இந்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகளின் கூட்டு கலவை பின்வருமாறு...

Aceclofenac + Paracetamol + Rabeprazole

Nimesulide + Diclofenac

Nimesulide + Cetirizine + Caffeine

Nimesulide + Tizanidine

Paracetamol + Cetirizine + Caffeine

Diclofenac + Tramadol + Chlorzoxazone

Dicyclomine + Paracetamol + Domperidone

Nimesulide + Paracetamol dispersible tablets

Paracetamol + Phenylephrine + Caffeine

Diclofenac + Tramadol + Paracetamol

Diclofenac + Paracetamol + Chlorzoxazone + Famotidine

Naproxen + Paracetamol

Nimesulide + Serratiopeptidase

Paracetamol + Diclofenac + Famotidine

Nimesulide + Pitofenone + Fenpiverinium + Benzyl Alcohol

Omeprazole + Paracetamol + Diclofenac

Nimesulide + Paracetamol injection

Tamsulosin + Diclofenac

Paracetamol + Phenylephrine + Chlorpheniramine + Dextromethorphan + Caffeine

Diclofenac + Zinc Carnosine

Diclofenac + Paracetamol + Chlorpheniramine Maleate + Magnesium Trisillicate

Paracetamol + Pseudoephedrine + Cetrizine

Phenylbutazone + Sodium Salicylate

Lornoxicam + Paracetamol + Trypsin

Paracetamol + Mefenamic Acid + Ranitidine + Dicyclomine

Nimesulide + Dicyclomine

Heparin + Diclofenac

Glucosamine + Methyl Sulfonyl Methane + Vitamin D3 + Manganese + Boron + Copper + Zinc

Paracetamol + Tapentadol

Tranexamic Acid + Proanthocyanidin

Benzoxonium Chloride + Lidocaine

Lornoxicam + Paracetamol + Tramadol

Lornoxicam + Paracetamol + Serratiopeptidase

Diclofenac + Paracetamol + Magnesium Trisilicate

Paracetamol + Domperidone + Caffeine

Ammonium Chloride + Sodium Citrate + Chlorpheniramine Maleate + Menthol

Paracetamol + Prochlorperazine Maleate

Combikit of 3 tablets of Serratiopeptidase (enteric coated 20000 units) + Diclofenac Potassium and 2 tablets of Doxycycline

Nimesulide + Paracetamol Suspension

Aceclofenac + Paracetamol + Famotidine

Aceclofenac + Zinc Carnosine

Paracetamol + Disodium Hydrogen Citrate + Caffeine

Paracetamol + DL Methionine

Disodium Hydrogen Citrate + Paracetamol

Paracetamol + Caffeine + Codeine

Aceclofenac (SR) + Paracetamol

Diclofenac + Paracetamol injection

Azithromycin + Cefixime

Amoxicillin + Dicloxacillin

Amoxicillin 250 mg + Potassium Clavulanate Diluted 62.5 mg

Azithromycin + Levofloxacin

Cefixime + Linezolid

Amoxicillin + Cefixime + Potassium Clavulanic Acid

Ofloxacin + Nitazoxanide

Cefpodoxime Proxetil + Levofloxacin

Combikit of Azithromycin, Secnidazole and Fluconazole

Levofloxacin + Ornidazole + Alpha Tocopherol Acetate

Nimorazole + Ofloxacin

Azithromycin + Ofloxacin

Amoxycillin + Tinidazole

Doxycycline + Serratiopeptidase

Cefixime + Levofloxacin

Ofloxacin + Metronidazole + Zinc Acetate

Diphenoxylate + Atropine + Furazolidone

Combikit of Fluconazole Tablet, Azithromycin Tablet and Ornidazole Tablets

Ciprofloxacin + Phenazopyridine

Amoxycillin + Dicloxacillin + Serratiopeptidase

Combikit of Fluconazole Tablet, Azithromycin Tablet and Ornidazole Tablets

Ciprofloxacin + Phenazopyridine

Amoxycillin + Dicloxacillin + Serratiopeptidase

Azithromycin + Cefpodoxime

Lignocaine + Clotrimazole + Ofloxacin + Beclomethasone

Cefuroxime + Linezolid

Ofloxacin + Ornidazole + Zinc Bisglycinate

Metronidazole + Norfloxacin

Amoxicillin + Bromhexine

Ciprofloxacin + Fluticasone + Clotrimazole + Neomycin

Metronidazole + Tetracycline

Cephalexin + Neomycin + Prednisolone

Azithromycin + Ambroxol

Cilnidipine + Metoprolol Succinate + Metoprolol Tartrate

L-Arginine + Sildenafil

Atorvastatin + Vitamin D3 + Folic Acid + Vitamin B12 + Pyridoxine

Metformin + Atorvastatin

Clindamycin + Telmisartan

Olmesartan + Hydrochlorothiazide + Chlorthalidone

 L-5-Methyltetrahydrofolate Calcium + Escitalopram i

Pholcodine + Promethazine

Paracetamol + Promethazine

Betahistine + Ginkgo Biloba Extract + Vinpocetine + Piracetam

 Cetirizine + Diethyl Carbamazine

Doxylamine + Pyridoxine + Mefenamic Acid + Paracetamol

Drotaverine + Clidinium + Chlordiazepoxide

Imipramine + Diazepam

Flupentixol + Escitalopram

 Paracetamol + Prochloperazine

Gabapentin + Mecobalamin + Pyridoxine + Thiamine

 Imipramine + Chlordiazepoxide + Trifluoperazine + Trihexyphenidyl

 Chlorpromazine + Trihexyphenidyl

Ursodeoxycholic Acid + Silymarin

Metformin 1000/1000/500/500mg + Pioglitazone 7.5/7.5/7.5/7.5mg + Glimepiride
1/2/1/2mg

Gliclazide 80 mg + Metformin 325 mg

Voglibose + Metformin + Chromium Picolinate

Pioglitazone 7.5/7.5mg + Metformin 500/1000mg

Glimepiride 1mg/2mg/3mg + Pioglitazone 15mg/15mg/15mg + Metformin 1000mg/
1000mg/1000mg

Glimepiride 1mg/2mg+ Pioglitazone 15mg/15mg + Metformin 850mg/850mg

Metformin 850mg + Pioglitazone 7.5 mg + Glimepiride 2mg

Metformin 850mg + Pioglitazone 7.5 mg + Glimepiride 1mg

Metformin 500mg/500mg + Gliclazide SR 30mg/60mg + Pioglitazone 7.5mg/7.5mg

Voglibose + Pioglitazone + Metformin

Metformin + Bromocriptine

Metformin + Glimepiride + Methylcobalamin

 Pioglitazone 30 mg + Metformin 500 mg

Glimepiride + Pioglitazone + Metformin

Glipizide 2.5mg + Metformin 400 mg

 Pioglitazone 15mg + Metformin 850 mg

 Metformin ER + Gliclazide MR + Voglibose

Chromium Polynicotinate + Metformin

Metformin + Gliclazide + Piogllitazone + Chromium Polynicotinate

Metformin + Gliclazide + Chromium Polynicotinate

Glibenclamide + Metformin (SR)+ Pioglitazone

Metformin (Sustainded Release) 500mg + Pioglitazone 15 mg + Glimepiride 3mg

Metformin (SR) 500mg + Pioglitazone 5mg

Chloramphenicol + Beclomethasone + Clomitrimazole + Lignocaine

 Clotrimazole + Ofloxaxin + Lignocaine + Glycerine and Propylene Glycol

 Chloramphennicol + Lignocaine + Betamethasone + Clotrimazole + Ofloxacin + Antipyrine

Ofloxacin + Clotrimazole + Betamethasone + Lignocaine

Gentamicin Sulphate + Clotrimazole + Betamethasone + Lignocaine

Clotrimazole + Beclomethasone + Ofloxacin + Lignocaine

Becloemthasone + Clotrimazole + Chloramphenicol + Gentamycin + Lignocaine Ear drops

 Flunarizine + Paracetamole + Domperidone

 Rabeprazole + Zinc Carnosine

 Magaldrate + Famotidine + Simethicone

Cyproheptadine + Thiamine

 Magaldrate + Ranitidine + Pancreatin + Domperidone

 Ranitidine + Magaldrate + Simethicone

Magaldrate + Papain + Fungul Diastase + Simethicone

Rabeprazole + Zinc + Domperidone

 Famotidine + Oxytacaine + Magaldrate

 Ranitidine + Domperidone + Simethicone

Alginic Acid + Sodium Bicarbonate + Dried Aluminium Hydroxide + Magnesium Hydroxide

 Clidinium + Paracetamol + Dicyclomine + Activated Dimethicone

Furazolidone + Metronidazole + Loperamide

Rabeprazole + Diclofenac + Paracetamol

 Ranitidine + Magaldrate

 Norfloxacin + Metronidazole + Zinc Acetate

 Zinc Carnosine + Oxetacaine

Oxetacaine + Magaldrate + Famotidine

Pantoprazole (as Enteric Coated Tablet) + Zinc Carnosine (as Film Coated Tablets)

Zinc Carnosine + Magnesium Hydroxide + Dried Aluminium Hydroxide + Simethicone

Zinc Carnosine + Sucralfate

Mebeverine & Inner HPMC capsule (Streptococcus Faecalis + Clostridium butyricum + Bacillus mesentricus + Lactic Acid Bacillus)

Clindamycin + Clotrimazole + Lactic Acid Bacillus

Sildenafil + Estradiol Valerate

Clomifene Citrate + Ubidecarenone + Zinc + Folic Acid + Methylcobalamin + Pyridoxine + Lycopene + Selenium + Levocarnitine Tartrate + L-Arginine

Thyroxine + Pyridoxine + Folic Acid

Gentamycin + Dexamethasone + Chloramphenicol + Tobramycin + Ofloxacin

Dextromethorphan + Levocetirizine + Phenylephrine + Zinc

Nimesulide + Loratadine + Phenylephrine + Ambroxol

Bromhexine + Phenylephrine + Chlorepheniramine Maleate

Dextromethorphan + Bromhexine + Guaiphenesin

Paracetamol + Loratadine + Phenylephrine + Dextromethorphan + Caffeine

Nimesulide + Phenylephrine + Caffeine + Levocetirizine

Azithromycin + Acebrophylline

Diphenhydramine + Terpine + Ammonium Chloride + Sodium Chloride + Menthol

Nimesulide + Paracetamol + Cetirizine + Phenylephrine

Paracetamol + Loratadine + Dextromethophan + Pseudoepheridine + Caffeine

Chlorpheniramine Maleate + Dextromethorphan + Dextromethophan + Guaiphenesin +
Ammonium Chloride + Menthol

Chlorpheniramine Maleate + Ammonium Chloride + Sodium Citrate

 Cetirizine + Phenylephrine + Paracetamol + Zinc Gluconate

Ambroxol + Guaiphenesin + Ammonium Chloride + Phenylephrine + Chlorpheniramine Maleate + Menthol

Dextromethorphen + Bromhexine + Chlorpheniramine Maleate + Guaiphenesin

Levocetirizine + Ambroxol + Phenylephrine + Guaiphenesin

Dextromethorphan + Chlorpheniramine + Chlorpheniramine Maleate

Cetirizine + Ambroxol + Guaiphenesin + Ammonium Chloride + Phenylephrine + Menthol

 Chlorpheniramine + Phenylephrine + Caffeine

Dextromethorphan + Triprolidine + Phenylephrine

Terpinhydrate + Dextromethorphan + Menthol

Dextromethorphan + Phenylephrine + Zinc Gluconate + Menthol

Chlorpheniramine + Codeine + Sodium Citrate + Menthol Syrup

 Enrofloxacin + Bromhexin

 Bromhexine + Dextromethorphan + Phenylephrine + Menthol

Levofloxacin + Bromhexine

 Levocetirizine + Ranitidine

 Levocetirizine + Phenylephrine + Ambroxol + Guaiphenesin + Paracetamol

Cetirizine + Dextromethorphan + Phenylephrine + Zinc Gluconate + Paracetamol + Menthol

Paracetamol + Pseudoephedrine + Dextromethorphan + Cetirizine

Diphenhydramine + Guaiphenesin + Ammonium Chloride + Bromhexine

Chlorpheniramine + Dextromethorphan + Phenylephrine + Paracetamol

Dextromethorphen + Promethazine

Diethylcabamazine Citrate + Cetirizine + Guaiphenesin

Pseudoephedrine + Dextromethorphan + Cetirizine

Chlorpheniramine + Phenylephrine + Dextromethophan + Menthol

Ambroxol + Terbutaline + Dextromethorphan

Dextromethorphan + Chlorpheniramine + Guaiphenesin

Terbutaline + Bromhexine + Guaiphenesin + Dextromethorphan

Dextromethorphan + Tripolidine + Phenylephirine

Paracetamol + Dextromethorphan + Chlorpheniramine

Pholcodine + Phenylephrine + Promethazine

Codeine + Levocetirizine + Menthol

Dextromethorphan + Ambroxol + Guaifenesin + Phenylephrine + Chlorpheniramine

Cetirizine + Phenylephrine + Dextromethorphan + Menthol

Roxithromycin + Serratiopeptidase

Paracetamol + Phenylephrine + Triprolidine

Acetaminophen + Loratadine + Ambroxol + Phenylephrine

Cetirizine + Acetaminophen + Dextromethorphan + Phenyephrine + Zinc Gluconate

Diphenhydramine + Guaifenesin + Bromhexine + Ammonium Chloride + Menthol

Chlopheniramine Maleate + Codeine Syrup

Cetirizine + Dextromethorphan + Zinc Gluconate + Menthol

Paracetamol + Phenylephrine + Desloratadine + Zinc Gluconate + Ambroxol

Levocetirizine + Montelukast + Acebrophylline

Dextromethorphan + Phenylephrine + Ammonium Chloride + Menthol

Dextromethorphan + Bromhexine + Guaiphenesin + Menthol

Acrivastine + Paracetamol + Caffeine + Phenylephrine

Naphazoline + Carboxy Methyl Cellulose + Menthol + Camphor + Phenylephrine

Dextromethorphan + Cetirizine

Nimesulide + Paracetamol + Levocetirizine + Phenylephrine + Caffeine

Terbutaline + Ambroxol + Guaiphenesin + Zinc + Menthol

Codeine + Chlorpheniramine + Alcohol Syrup

Dextromethorphan + Phenylephrine + Guaifenesin + Triprolidine

Ammomium Chloride + Bromhexine + Dextromethorphan

Diethylcarbamazine + Cetirizine + Ambroxol

Ethylmorphine + Noscapine + Chlorpheniramine

Cetirizine + Dextromethorphan + Ambroxol

Bromhexine + Dextromethorphan + Ammonium Chloride + Menthol

Ambroxol + Guaifenesin + Phenylephrine + Chlorpheniramine

Paracetamol + Phenylephrine + Chlorpheniramine + Zinc Gluconate

Dextromethorphan + Phenylephrine + Cetirizine + Paracetamol + Caffeine

Dextromethophan + Chlorpheniramine + Guaifenesin + Ammonium Chloride

Levocetirizine + Dextromethorphan + Zinc

Paracetamol + Phenylephrine + Levocetirizine + Caffeine

Chlorphaniramine + Ammonium Chloride + Sodium Chloride

Paracetamol + Dextromethorphan + Bromhexine + Phenylephrine + Diphenhydramine

Salbutamol + Bromhexine + Guaiphenesin + Menthol

Chlorpheniramine + Ammonium Chloride + Noscapine + Sodium Citrate

Cetirizine + Dextromethorphan + Bromhexine + Guaifenesin

Diethyl Carbamazine + Chlorpheniramine + Guaifenesin

Ketotifen + Cetirizine

Terbutaline + Bromhexine + Etofylline

Ketotifen + Theophylline

Ambroxol + Salbutamol + Theophylline

Cetririzine + Nimesulide + Phenylephrine

Chlorpheniramine + Phenylephrine + Paracetamol + Zink Gluconate

Acetaminophen + Guaifenesin + Dextromethorphan + Chlorpheniramine

Cetirizine + Dextromethorphan + Phenylephrine + Tulsi

Cetirizine + Phenylephrine + Paracetamol + Ambroxol + Caffeine

Guaifenesin + Dextromethorphan

Levocetirizine + Paracetamol + Phenylephirine + Caffeine

Caffeine + Paracetamol + Phenylephrine + Chlorpheniramine

Ketotifen + Levocetrizine

Paracetamol + Levocetirizine + Phenylephirine + Zink Gluconate

Paracetamol + Phenylephrine + Triprolidine + Caffeine

Caffeine + Paracetamol + Phenylephrine + Cetirizine

Caffeine + Paracetamol + Chlorpheniramine

Ammonium Chloride + Dextromethorphan + Cetirizine + Menthol

Dextromethorphan + Paracetamol + Cetirizine + Phenylephrine

Chlorpheniramine + Terpin + Antimony Potassium Tartrate + Ammonium Chloride + Sodium Citrate + Menthol

Terbutaline + Etofylline + Ambroxol

Paracetamol + Codeine + Chlorpheniramine

Paracetamol+Pseudoephedrine+Certirizine+Caffeine

Chlorpheniramine+Ammonium Chloride + Menthol

N-Acetyl Cysteine + Ambroxol + Phenylephrine + Levocertirizine

Dextromethorphan + Phenylephrine + Tripolidine + Menthol

Salbutamol + Certirizine + Ambroxol

Dextromethorphan + Phenylephrine + Bromhexine + Guaifenesin + Chlorpheniramine

Nimesulide + Certirizine + Phenylephrine

Naphazoline + Chlorpheniramine + Zinc Sulphate + Boric Acid + Sodium Chloride + Chlorobutol

Paracetamol + Bromhexine + Phenylephrine + Chlorpheniramine + Guaifenesin

Salbutamol + Bromhexine

Dextromethorphan + Phenylephrine + Guaifenesin + Certirizine + Acetaminophen

Guaifenesin + Bromhexine + Chlorpheniramine + Paracetamol

Chlorpheniramine + Ammonium Chloride + Chloroform + Menthol

Salbutamol + Choline Theophylinate + Ambroxol

Chlorpheniramine + Codeine Phosphate + Menthol Syrup

Pseudoephedrine + Bromhexine

Certirizine + Phenylephrine + Paracetamol + Caffeine + Nimesulide

Dextromethorphan + Cetirizine + Guaifenesin + Ammonium Chloride

Ambroxol + Salbutamol + Choline Theophyllinate + Menthol

Paracetamol + Chlorpheniramine + Ambroxol + Guaifenesin + Phenylephrine

Chlorpheniramine + Vasaka + Tolubalsm + Ammonium Chloride + Sodium Citrate + Menthol

Bromhexine + Cetrizine + Phenylephrine IP+Guaifenesin + Menthol

Dextromethorphan + Ambroxol + Ammonium Chloride + Chlorpheniramine + Menthol

Dextromethorphan + Phenylephrine + Cetirizine + Zinc + Menthol

Terbutaline + N-Acetyl L-Cysteine + Guaifenesin

Calcium Gluconate + Levocetirizine

Paracetamol + Levocetirizine + Pseudoephedrine

Salbutamol + Choline Theophylinate + Carbocisteine

Chlorpheniramine + Vitamin C

Calcium Gluconate + Chlorpheniramine + Vitamin C

Chlorpheniramine + Paracetamol + Pseudoephedrine + Caffeine

Guaifenesin + Bromhexine + Chlorpheniramine + Phenylephrine + Paracetamol + Serratiopeptidase (as enteric coated granules) 10000 SP Units

Paracetamol + Pheniramine

Betamethasone + Fusidic Acid + Gentamycin + Tolnaftate + lodochlorhydroxyquinoline
(ICHQ)

Clobetasol + Ofloxacin + Miconazole + Zinc Sulphate

Clobetasole + Gentamicin + Miconazole + Zinc Sulphate

Levocetirizine + Ambroxol + Phenylephrine + Paracetamol

Permethrin + Cetrimide + Menthol

Beclomethasone + Clotimazole + Neomycin + lodochlorohydroxyquinone

Neomycin + Doxycycline

Ciprofloxacin + Fluocinolone + Clotrimazole + Neomycin + Chlorocresol

Clobetasol + Ofloxacin + Ketoconazol + Zinc Sulphate

Betamethasone + Gentamicin + Tolnaftate + lodochlorhydroxyquinoline

Clobetasol + Gentamicin + Tolnaftate + lodochlorhydroxyquinone + Ketoconazole

Allantoin + Dimethieone + Urea + Propylene + Glycerin + Liquid Paraffin

Acriflavine + Thymol + Cetrimide

Betamethasone + Neomycin + Tolnaftate + lodochlorohydroxyquinoline + Cholorocresol

Clobetasol + Neomycin + Miconazole + Clotrimazole

Ketoconazole + Tea Tree oil + Allantion + Zinc Oxide + Aloe Vera + Jojoba oil + Lavander oil + Soa noodels

Clobetasol Propionate + Ofloxacin + Ornidazole + Terbinafine

Clobetasol + Neomycin + Miconazole + Zinc Sulphate

fixed dose combination of Beclomethasone Diproprionate + Neomycin + Tolnaftate + lodochlorhydroxyquinoline + Chlorocresol

Betamethasone + Gentamycin + Zinc Sulphate + Clotrimoazole + Chlorocresol

Borax + Boric Acid + Naphazoline + Menthol + Camphor + Methyl Hydroxy Benzoate

Bromhexine + Dextromethorphan

Dextromethophan + Chlopheniramine + Bromhexine

Menthol + Anesthetic Ether

Dextrometharphan + Chlopheniramine + Ammonium + Sodium Citrate + Menthol

Ergotamine Tartrate + Belladona Dry Extract+Caffeine + Paracetamol

Phenytoin + Phenobarbitone

Gliclazide 40mg + Metformin 400mg

Paracetamol + Ambroxol + Phenylephrine + Chlorpheniramine

Oflaxacin + Ornidazole Suspension

Albuterol + Etofylline + Bromhexine + Menthol

Albuterol + Bromhexine + Theophylline

Salbutamol + Hydroxyethyltheophylline (Etofylline) + Bromhexine

Paracetamol + Phenylephrine + Levocetirizine + Sodium Citrate

Paracetamol + Propyphenazone + Caffeine

Guaifenesin + Diphenhydramine + Bromhexine + Phenylephrine

Dried Alumnium Hydroxie Gel + Prophantheline + Diazepam

Bromhenxine + Phenylephrine + Chlorpheniramine + Paracetamol

Beclomethasone + Clotrimazole + Gentamicin + lodochlorhydroxyquinoline

Telmisartan + Metformin

Ammonium Citrate + Vitamin B 12 + Folic Acid + Zinc Sulphate

Levothyroxine + Phyridoxine + Nicotinamide

Benfotiamine + Metformin

Thyroid + Thiamine + Riboflavin + Phyridoxine + Calcium Pantothenate + Tocopheryl Acetate + Nicotinamide

Ascorbic Acid + Manadione Sodium Bisulphate + Rutin + Dibasic Calcium Phosphate + Adrenochrome mono Semicarbazone

Phenylephrine + Chlorpheniramine + Paracetamol + Bromhexine + Caffeine

Clotrimazole + Beclomethasone + Lignocaine + Ofloxacin + Acetic Aicd + Sodium Methyl Paraben + Propyl Paraben

மேற்கூறிய அத்தனை மருந்துகளின் கூட்டு கலவையினை உடைய மருந்துகள் உண்பதை தவிர்க்க முயல்வோம்.

முடிந்தால் சக நண்பர்களுக்கு, இந்த தடைசெய்யப்பட்ட மருந்துகள் பற்றி
தெரிவித்து விழுப்புணர்வு ஏற்படுத்த முயலுங்கள்.

இந்த சேதி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பகிருங்கள்.

வாழ்க்கை முழுமையாக
வாழ்வதற்கே....தடை செய்யப்பட்ட மருந்துகளை தெரியாமல் திண்று
சாவதற்கல்ல.

ட்ரக்கியோஸ்டோமி...செயற்கை சுவாசம்


தமிழக பிரபல அரசியல் தலைவர்கள் நீண்ட நாள்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது,அவர்களுக்கு
என்ன சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே
நம்மை தொற்றிக்கொள்கிறது.

உதாரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மேற்கொள்ளப்பட்ட எக்மோ (ECMO) சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ள எத்தகைய ஆர்வம் ஏற்பட்டதோ,அது போன்றே தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு வழங்கப்படும்
ட்ரக்கியோஸ்டோமி (tracheostomy)
என்கிற சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டதால் இந்த பதிவின் மூலம் அந்த மருத்துவ சிகிச்சை முறை பற்றி பகிர்கிறேன்.

ட்ரக்கியோஸ்டோமி..அப்படினா என்ன....?

தொண்டையின் நடுப்பகுதியில் துளையிட்டு,அதற்குள் டியூப்பை செலுத்தப்பட்டு,பின்னர் அந்த டியூப் மூலம் காற்று குழாயை இணைத்து, நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் செயற்கை சுவாச சிகிச்சை முறையே ட்ரக்கியோஸ்டோமி என்பதாகும்.

எப்பொழுது இந்த சிகிச்சை அவசியமாகிறது....?

தொண்டையிலுள்ள மூச்சு குழல் சேதமடைந்திருந்தால்.....

நோய் தொற்று காரணமாக தொண்டையிலிருந்து நுரையீரல் செல்லும் குழாய் பாதிக்கப்பட்டால்...

எப்படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது...?

தொண்டையில் துளையிட்டு டியூப்பை உள் செலுத்திய பிறகு அந்த பகுதியை சுற்றிலும் தையல் போடப்படும்.

தொண்டையில் பொருத்தப்படும் டியூப்பை தேவைப்படும்போது பொருத்திக்கொள்ளவோ அல்லது எடுத்துவிடவோ முடியுமாறு செய்வார்கள்.

ஆனாலும் தொண்டையில் ட்ரக்கியோஸ்டோமி இணைப்பு குழாய் அப்படியே பொருத்தப்பட்டு இருக்கும்.


ஒரு நோயாளிக்கு எப்பொழுது உடல் பூரண குணமாகி,சுவாசம் இயல்பான இயற்கை நிலைக்கு மாறுகிறதோ, அப்பொழுது மட்டுமே இந்த  ட்ரக்கியோஸ்டோமி இணைப்பு குழாய்
அவரது உடலில் இருந்து முழுமையாக நீக்கப்படும்.

இது மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமே.ஆனாலும் இதிலும் முழுகண்காணிப்பு மிகவும் அவசியம். இல்லையேல் நோயாளியின் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படும் அபாயம் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஒருபக்கம் தொழில்நுட்பம் வளர வளர,
மறுபக்கம் மருத்துவத்திலும் மெதுவாக இது போன்ற புதிய புதிய சிகிச்சை முறைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவையனைத்தும் காலத்தின் கட்டாயம் என்று சொன்னால் அது மிகையில்லை.

இறுதியாக இந்த சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை விருப்பு வெறுப்பின்றி பூரண நலம்பெற வாழ்த்துவோம்.

Thursday, 15 December 2016

ப்ளீஸ்....இன்றோடு மைதாவை மறந்துருங்க.இன்றைய காலகட்டத்தில்,மைதா மாவு இல்லாத உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது என்பது மிகவும் கடினமான காரியம்.அந்த அளவிற்கு பேக்கரி உணவில் இருந்து துரித உணவான
பீட்ஸா வரை எங்கும் நீக்க மற நிறைந்திருக்கிறது.

சரி.......இந்த மைதா மாவு எப்படி செயற்கையாக தயாரிக்கப்படுகிறது மற்றும் இந்த மைதா மாவினால் தயாரிக்கப்படும் உணவினால் நமக்கு என்ன பிரச்சனை போன்ற பல கேள்விகளுக்கு விடை காணவே இந்த பதிவு.

பொதுவாக மைதா மாவு கோதுமையில் இருந்து பெறப்படுகிறது.கோதுமை தானியமானது நார்ச்சத்து,புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது.

இத்தகைய கோதுமை தானியம் மூன்று அடுக்குகளை உடையது.அதில் முதல் அடுக்கு பிரான்(bran),இரண்டாம் அடுக்கு ஜெர்ம்(germ) மற்றும் மூன்றாம் உள்ளடுக்கு எண்டோஸ்பெர்ம் (endosperm).

இந்த எண்டோஸ்பெர்ம் அடுக்கில் இருந்து தான் நாம் உண்ணுகிற ஸ்டார்ச் நிறைந்த மைதா மாவு பெறப்படுகிறது.

கோதுமையில் இருந்து முழுக்க முழுக்க புரதம் மற்றும் நார்ச்சத்து பிரிக்கப்பட்டு பெறப்படும் வெறும் சர்க்கரை சத்து மட்டும் நிறைந்த மாவுப்பொருளே மைதா.

இதனை பிரித்தெடுக்க மட்டுமல்லாது ப்ளீச் செய்ய அதாவது சுத்தப்படுத்த பென்சோயில் பெராக்சைடு(benzoyl peroxide) என்கிற கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.இது தான் மைதா மாவு பளிச்சென்று வெள்ளையாக மிளிர்வதற்கு காரணமாகிறது.பொதுவாக இந்த கெமிக்கல் துணி வெளுக்க பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. பற்கள்,முடி போன்றவற்றை ப்ளீச் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாருங்க...நண்பர்களே......
இத்தகைய சுத்தப்படுத்தி வெளுக்கும் சக்தி மிக்க கெமிக்கல் தான்,அன்றாடம்
நாம் உண்ணும் மைதா மாவினால் தயாரிக்கப்பட்ட உணவின் மூலம் நம் உடலுக்குள் செல்கிறது.

இது கேன்சர் உருவாக்க தூண்டுகோலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஆனாலும் இது நேரடியாக கேன்சர் உருவாக்கும் காரணியாக இதுவரை அறியப்படவில்லை என்பது ஒருவகையில் மைதா பிரியர்களுக்கு சந்தோசமான செய்தியே....!

ஆனாலும் இன்னொரு கெமிக்கலான அலோக்ஸான் (alloxan),மைதா மாவு மென்மையாக மற்றும் மிருதுவாக இருக்க சேர்க்கப்படுகிறது.

இந்த கெமிக்கல் சர்க்கரை நோய் உருவாக  காரணம் ஆகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா.....?

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும், ஏனென்றால்....அது தானே உண்மை.

ஆமாங்க...இந்த கெமிக்கல் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் வாய்ந்த இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யும் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழித்தொழிக்கிறது என்பதனை அறிவியல் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்த பீட்டா செல்கள் அழிவதன் மூலம் இன்சுலின் உற்பத்தி தடைபட்டு,நம் உடம்பானது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறும்.

அப்புறம் என்ன....உயர் சர்க்கரை அளவு குறியீட்டை(GI) எட்டி நம்மை நிரந்தர நீரழிவு நோய் உள்ளவராக மாற்றுவதோடு உயிருக்கும் உலை வைத்து விடும் என்றால் பார்த்துக்கொங்க...!

இவை போக....சிட்ரிக் அமிலம்,மினரல் ஆயில்,அஜினமோட்டோ,சோடியம் மெட்டா பை சல்பேட் மற்றும்
பென்சோயிக் அமிலம் போன்றவையும்
மைதா மாவு கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களில் பல்வேறு காரணங்களுக்காக சேர்க்கப்படுகிறது.

இதில் குறிப்பாக மினரல் ஆயில் (mineral oil) மற்றும் அஜினோமோட்டோ (ajinomoto) போன்றவை நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்று சீனா உட்பட பல நாடுகளில் உணவுப்
பொருள்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாம் தாம் இன்னும் இவற்றை உணவு சுவைக்காவவும் மற்றும் உணவு
கெடாமல் இருக்கவும், இவற்றை இன்றுவரை பயன்படுத்தி நம் உடம்பை கெடுத்து கொண்டு வருகிறோம்.

இது போன்ற உடலுக்கு தீங்கும் செய்யும் பொருள்களை உணவு தயாரிப்பில் பயன்படுத்த தடை
செய்யும் விதமாக மத்திய அரசோ, மாநில அரசுகளோ எந்த ஒரு உருப்படியான முடிவும் இதுவரை
எடுக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை.மேலை நாடுகளை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் இன்னும் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை.

மேலும் இந்த வெள்ளை மைதாவில் உள்ள கிளியடின் (Gliadin) புரோட்டீன், பசியின்மையை உருவாக்குகிறது.

இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தால் பசி என்பதே இல்லாமல்,சாப்பிட்டாலும் சாப்பிட்டது போன்ற உணர்வே நமக்கு இல்லாமல் செய்துவிடும் வன்மை இந்த புரோட்டினுக்கு உண்டு.

மைதா மாவினாலான
உணவுப்பொருள்களை தொடர்ந்து
உண்பதனால் எதிர்காலத்தில் உங்கள் உடம்பு எதிர்நோக்கும் பிரச்சனைகள்......

உடல் எடை தொடர்ந்து அதிகமாகி இறுதியில் உடல் பருமனை உருவாக்கும்.

கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும்.

அலர்ஜி ஏற்படுத்தவல்லது.

அல்சீமர் நோயினை உருவாக்கும்.

பசியின்மையை உருவாக்கும்.

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.

இதய நோய்,கீல்வாதம்,மூட்டு வலி, தோலில் அரிப்பை உண்டாக்கும்.

வீக்கத்தை உண்டு பண்ணும்.

சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதிக்கும்.

சுரப்பிகளின் செயல்பாட்டை குறைக்கும்.

வயிறு மந்தம் உண்டாகும்.

அஜீரணக்கோளாறு உண்டு பண்ணும்.

நீங்களே சொல்லுங்க மக்களே.... இத்தகைய கேடு விளைவிக்கும் மைதா மாவினால் செய்யப்பட்ட பரோட்டா முதல் பேக்கரி ஐட்டங்கள் வரையிலான அனைத்து விதமான துரித மற்றும் சுவையூட்டும் உணவுப்பொருள்கள்
நமக்கு தேவைதானா....?

மைதா இல்லாத துரித உணவை தவிர்ப்பது கடினம் என்றாலும்,நம் எதிர்காலம் காலம் கருதி தவிர்க்க முயற்சி செய்யலாமே...!

நம் உடம்பிற்கு கேடு விளைவிக்கும்
மைதா மாவினால் ஆன உணவுப் பொருள்களுக்கு இன்று முதலாவது
முற்றுப்புள்ளி வைப்போம்.

நம் ஆயுளை கொஞ்சமேனும் நீட்டிப்போம்....

Tuesday, 13 December 2016

காற்றுக்கென்ன கோபம்..காற்றே...
உனக்கு யார் மீது தான் கோபம்...?

சென்ற வருடம் மழையாய் வந்தாய்.. இந்த வருடம் புயலாய் வந்தாய்...

ஆம்...
இத்தனை நாள் பூங்காற்றாய்
மெதுவா தானே வீசி சென்றாய்...

இன்று ஏனோ புயலாய் வந்து
எங்கள் உயிரை மட்டுமல்ல;
உடமைகளையும் யல்லவா
வாரிசுருட்டி கொண்டு சென்றாய்...

உனக்கு தலையாட்டும்
மரங்களுக்கு கூட ஏனோ
மரணத்தை பரிசளித்தாய்.....

மரணத்தை தரும் அளவிற்கு,
மரங்கள் அப்படி என்ன தான்
பாவம் செய்தன...

மரங்களில் கூடுகட்டி வாழ்ந்த பறவைகளில் எத்தனையை
பரலோகம் அனுப்பி வைத்தாயோ...

இயற்கை மனிதனை தண்டிப்பதில் நியாயமுண்டு்.
ஆனால் இயற்கை தன்னையே தண்டிப்பது ஏனோ...?

நேற்று உன் பெயர் நடா
இன்று உன் பெயர் வர்தா
நாளை உன் பெயர் என்னவோ....?

Monday, 12 December 2016

ஆமா...அது என்ன புயல் எச்சரிக்கை கூண்டு......?


பொதுவாக கடலில் காற்று அழுத்த தாழ்வு நிலை ஏற்படும் பொழுது,கடலை ஒட்டிய மற்றும் துறைமுக பகுதிகளில் மீனவ மற்றும் அனைத்து பொதுமக்களையும் புயல் எச்சரிக்கை செய்யும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டினை ஏற்றுவதுண்டு.

அது இத்தனாவது எண் புயல் எச்சரிக்கை கூண்டு என காட்சி மற்றும் ஒலி ஊடகங்கள் வாயிலாக நாம் கேள்விப்படுவதுண்டு.உண்மையில் அந்த எச்சரிக்கை செய்யும் ஒவ்வொரு எண்ணும் உண்மையில் நமக்கு என்ன தான் சொல்கிறது என்பதை இந்த பதிவில் விரிவாக காண்போம்...

எண்:1
ஒரு புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறு உள்ளது என்பதனை தெரிவிக்கும்.

எண்:2
புயல் ஒன்று உருவாகியுள்ளது என எச்சரிக்கை செய்கிறது.

எண்:3
திடீர் காற்றோடு மழை பெய்யும் நிலை என துறைமுகத்துக்கு எச்சரிக்கை செய்கிறது.அதனால் துறைமுகத்தில் இருக்கும் படகுகள் மற்றும் கப்பல்கள்
தகுந்த பாதுகாப்புடன் நிறுத்தப்படும்.

எண்:4
துறைமுகம் மற்றும் கடல் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை செய்கிறது.இந்த வேளையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது.

எண்:5
துறைமுகத்துக்கு இடது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கை செய்கிறது.

எண்:6
துறைமுகத்துக்கு வலது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கை செய்கிறது.

எண்:7
துறைமுகம் மற்றும் அதன் சுற்றிய  பகுதிகளுக்கு ஆபத்துகள் அதிகம் என எச்சரிக்கை செய்கிறது.

எண்:8
துறைமுகத்துக்கு இடது புறமாக புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கை செய்யும்.

எண்:9
துறைமுகத்துக்கு வலது புறமாக புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கை செய்யும்.

எண்:10
துறைமுகம் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள ஊர்களுக்கு அபாய நிலை என்று முன் எச்சரிக்கை செய்யும்.

எண்:11
புயலானது பேரழிவினை உண்டாக்கும் எனவே,மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல எச்சரிக்கை செய்கிறது.என்ன நண்பர்களே....
புயல் எச்சரிக்கை கூண்டு எண்ணை சொன்னாலே நீங்கள் இனி அலெர்ட் ஆய்விடுவீர்கள் தானே...

புயல் எச்சரிக்கை கூண்டு நிறுவுவதன் அவசியத்தை இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் உணர்த்தியிருக்கும்  என நான் நம்புகிறேன்.

அடுத்த பதிவில் இன்னொரு தகவலோடு சந்திக்கிறேன்.... நன்றி.

இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்....தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இனிய திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

Sunday, 11 December 2016

தாது உப்புக்கள் மனிதனுக்கு அவசியமா....?நமக்கு தெரிந்தது எல்லாம் சோத்துக்கு போடுற உப்பு தானே....

அதானே...இது என்ன புதுசா தாது உப்பு....?

இதுவும் அது போன்ற ஒருவகையான உப்பு தான்.

ஆமாங்க.......இது வேறு ஒன்றும் இல்லை.மினரல்ஸ்(minerals) தாங்க இவ்வாறு அழைக்கப்படுகிறது.

உதாரணமா மினரல் வாட்டர்னு சொன்னா ஈஸியா புரியும்.
(தாது உப்பு தண்ணீர்னு சொன்னாப்போச்சு.ஏண்டா....காச வாங்கிட்டு உப்பு தண்ணீயா கொடுக்கிறேனு சண்டைக்கு வந்துருவாங்க...நம் மக்கள்)

சரி... அதுல மினரல்ஸ்னு
சொல்ராங்களே... அது என்னவென்று நாம் என்றாவது யோசித்திருக்கோமா....?

பொதுவா தாது உப்புக்கள் கனிமப்பொருளாக இயற்கையில் நீர், பாறை, மண் ,தாவரங்கள் ,மிருகங்கள்
என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவை.

தாவரம்,மண் மற்றும் நீரில் இருந்து தனக்கு தேவையான அதாவது, வளர்ச்சிக்கு அவசியமான தாது உப்புக்களை பெற்றுக்கொள்கிறது.

மனிதன் அத்தகைய தாவரங்களை உண்ணும் பொழுது மற்றும் நீரை அருந்தும் பொழுது இயற்கையாக தாது உப்புக்களை பெறுகிறான்.

மேலும் செயற்கையாக கடலில் இருந்து பெறக்கூடிய உப்பின் மூலம் சில தாது உப்புக்களை பெற்று உடல் மட்டுமல்ல; தன் உயிரையும் வளர்க்கிறான்.

இந்த தாது உப்புக்களை மேக்ரோ-மினரல்ஸ் மற்றும் மைக்ரோ-மினரல்ஸ்
என இருவகையாக அதன் தேவையின் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர்.

இதில் மேக்ரோ-மினரல்ஸ் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இது அன்றாடம் இல்லை என்றால்,வளர்ச்சி என்பதே தடைபட்டுவிடும்.

மாறாக, மைக்ரோ-மினரல்ஸ் என்பது குறைந்த அளவு போதுமானது.இது இல்லை என்றால்,ஒரு சில நாள் கூட தாக்குப்பிடித்து நிற்க இயலும்.

சரி....இந்த தாது உப்பால் மனிதனுக்கு என்ன பிரயோஜனம்.....?

நம் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.அதிலும் மூளை மற்றும் வளர் சிதை மாற்றத்தில் அதீத பங்கு வைக்கிறது.நம் உடம்பில் முடி,பல்,எலும்பு என அனைத்து வளர்ச்சியிலும் இதன் பங்கு அதிகம் தான்.

அதற்காக இந்த உப்புக்கள் அளவுக்கு அதிகம் இருந்தாலும் அல்லது அளவு குறைவாக இருந்தாலும் நம் உடம்பிற்கு பிரச்சனையே....

அதிலும் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள்,வயதானோர்,பாலூட்டும் தாய்மார்கள்,நோயாளிகள் போன்றோர்
சமச்சீர் அளவிலே தான் இந்த உப்புக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சரி நண்பர்களே......

தாது உப்புக்கள் தேவை பற்றி இந்த பதிவில் கண்டோம்.அடுத்த பதிவில் ஒவ்வொரு தாது உப்பு பற்றியும், அதனால் மனிதனுக்கு என்ன நன்மை பற்றியும் விரிவாக சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்.....

சென்னை-600028 இரண்டாம் பாகம்- ஜாலியாக கொண்டாடலாம்மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபு, தனது முதல் பட நடிகர்களோடு இணைந்து கிரிக்கெட்டை
மையப்படுத்தி எடுத்திருக்கும் படம் தான் சென்னை-600028 இரண்டாம் பாகம்.இந்த திரைப்பட விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க..
http://viid.me/qeNinR

Friday, 9 December 2016

அர்த்தமுள்ள வரிகள்-30


குழந்தைகள் ஒருபோதும்
கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை;
கேட்ட வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார்கள்...

என்னதான் ஆச்சு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு......சமீப காலமாக கேப்டன் விஜயகாந்த்
அவர்களை உற்றுநோக்கி கவனித்தால் தெரியும்....அவர் உடல் ரீதியாக பெரிய அளவில்  பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு கேப்டன் அவர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு வருகிற காட்சியை பார்க்கும் பொழுது
உண்மையில் நெஞ்சம் பதறுகிறது.

திராவிட கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்று நினைத்தோம்... இருந்தார் சில வருடங்கள் குரலிலும்,நடையிலும்
(அவர் மக்கள் பிரச்சனைக்காக
தனது சிம்மக்குரலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை கடந்த கால
சட்டமன்றத்தில் எதிர்த்து கேட்கும் கேள்விகளே அதற்கு சாட்சி).

நான் அவரின் ஆதரவாளனோ, கட்சிக்காரனோ இல்லை. பொதுசனத்தில் ஒருவனாக இந்த கேள்விகளை முன்வைக்கிறேன்.

அந்த சிம்மக்குரல் இன்று காணாமல் போனதற்கான உண்மையான
காரணம் தான் என்ன......?
கனல் கக்கும் அவர் முகத்தில்
பயம் மண்டிக்கிடப்பதன் மர்மம்
தான் என்ன....?
குழந்தை போல வார்த்தைகளை
மறந்து தவிப்பதன் மர்மம் என்ன....?
திடீர் என்று அவர் பேசுகிற வார்த்தையில் மட்டுமல்ல,
நடப்பதிலும் தடுமாற்றம் ஏன்....?
உண்மையில் அவருக்கு என்ன தான் பாதிப்பு..?

ஒரு சிலர் நினைக்கலாம்..அவரை பற்றி கேள்வி எழுப்ப நாம் யார் என்று?

யாராக இருப்பினும் பொதுவெளிக்கு வந்துவிட்டால்,அவரை பற்றி தெரிந்து கொள்வதற்கு அனைவருக்கும் கேள்வி எழுப்ப உரிமை உண்டு.

உதாரணமாக நான் வாக்களிக்காத வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனால்,நான் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் அவர் எனக்கு எம்எல்ஏ தான்.
அவரை பற்றி தெரிந்து கொள்ளவும்,
ஒருவேளை அவர் தவறு செய்தால் தட்டி கேட்கவும் நமக்கு முழு உரிமை உண்டு.

அதுபோலத்தான் நமக்கு கேப்டன் விஜயகாந்த் மேல் ஆயிரம் விருப்பு வெறுப்பு இருப்பினும்,அவரும்
நமக்கு தலைவரே.....
அத்தகைய தலைவரை பற்றி நாம் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.

எல்லாரும் சொல்கிறார்கள்....
அவர் ஒரு குடிகாரர்,அது தான் எந்த நேரமும் தள்ளாடுகிறார் என்று.
அது உண்மையோ,பொய்யோ.....
என்னவென்று என்னை போன்ற சாமானியனுக்கு தெரியாது.

அவர் தற்போது வெறு நடிகர் மட்டுமல்ல; முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவர்,தேமுதிக என்கிற கட்சியின் தலைவர்,மக்களின் சேவகன் என பொறுப்புகளுக்கு சொந்தக்காரர்.

அவரது உடலில் என்ன தான் பிரச்னை என்று,அவரது குடும்பத்தாரும் மற்றும் அவரது கட்சியினரும் தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவர்களது கடமை.

இதனை செய்வார்களா....?

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு உடல்ரீதியான பிரச்சனை வருகிற பொழுது எல்லாம் வெளிப்படைத்தன்மை
காட்டப்படும் பொழுது,ஏன் கேப்டன் அவர்களது உடல் நல விஷயத்திலும் வெளிப்படைத்தன்மை கூடாது என்பது தான்,சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் முன்வைக்கும் கேள்வி.


Thursday, 8 December 2016

எம்பாமிங்... அப்படினா என்ன...?


இறந்து போன உடலை அதன் உருவம் சிதையாது பாதுகாக்கும் ஒரு மருத்துவக் கலை தான் எம்பாமிங்
(Embalming).இதனை தமிழில் பிணசீரமைப்பு (or) உடல் பதனிடல்
என்று பொருள் கொள்ளலாம்.

நான்கு விதமான எம்பாமிங் முறைகள் நடைமுறையில் உள்ளது. அவையாவன......
surface embalming
arterial embalming
cavity embalming
hypodermic embalming

பிணசீரமைப்பு கலை என்பது இறந்த உடலின் ரத்த நாளங்களில் இருந்து ரத்தத்தை முழுமையாக நீக்கி விட்டு அதற்குப்பதிலாக பார்மால்டிஹைடு, குளுட்டரால்டிஹைடு,மெத்தனால் கொண்ட ரசாயனக்கலவையினை
உடலினுள் செலுத்தி இறந்த உடலை சிறப்பாக பேணி பாதுகாக்கும் ஒருவித முறையே ஆகும்.

17ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை மேலே சொன்ன ரசாயனக்கலவைக்கு பதில் ஆர்சனிக் மையப்படுத்திய ரசாயனக்கலவை பயன்படுத்தப்பட்டது.
ஆர்சனிக் என்பது மனிதனைக் கொள்ளும் கொடிய விஷத்தன்மை உடைய வேதிப்பொருள் ஆகும்.

இதனால் பதனிடல் செய்யப்பட்ட இறந்த உடலை மண்ணில் புதைக்கும் பொழுது மண்ணை மட்டுமல்லாது, மண்ணில் மறைந்துள்ள குடிநீர் ஆதாரத்தையும் விஷமாக்கிடும்.ஆகவே தான் ஆர்சனிக் பதில் பார்மலின் அடிப்படையிலான ரசாயனக்கலவையினை பிணசீரமைப்பு முறைக்கு பயன்படுத்த தொடங்கினர்.

இந்த பார்மலினை 1868ம் ஆண்டு,
A.W ஹாப்மன் என்கிற ஜெர்மன் வேதியியலார் கண்டுபிடித்தார்.பின்னர் இந்த பார்மலின் அடிப்படையிலான ரசாயனக்கலவை தான்,இறந்த உடல் பதனிடல் மற்றும் பதப்படுத்துதலில் இதுநாள் வரை முக்கிய பங்கு வகிக்கிறது.

17ம் நூற்றாண்டில் வில்லியம் ஹார்வே
என்பவர் புதிய நிறக்கரைசலை இறந்த மனித உடலினுள் செலுத்தி மனித ரத்த ஓட்டத்தை முதல் முதலாக கண்டறிகிறார்.அதன் பின்னர் வில்லியம் ஹண்டர் இதே முறையினை பயன்படுத்து எம்பாமிங் செய்ய முனைகிறார்.

18ம் நூற்றாண்டில் வில்லியம் ஹண்டர் அவர்களின் சகோதரர் ஜான் ஹண்டர் இதனை மென்மேலும் மேம்படுத்தி இன்று இந்த பிணசீரமைப்பு கலைக்கு முன்னோடியாக திகழ்கிறார் என்றால் மிகையில்லை.

இத்தகைய மருத்துவ கலை, நம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவ்வளவு பிரபலம் இல்லை.ஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இத்தகைய பிணசீரமைப்பு முறை சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு உதாரணமாக, இந்தக்கலையை பயன்படுத்தி அமெரிக்க போரில் இறந்து போகும் வீரர்களை,அவர்கள் குடும்பத்தினர் பார்ப்பதற்காக இறந்த உடலை எம்பாமிங் செய்து அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நம்மூரில் பணம் படைத்தவர்கள் இவ்வாறு இறந்த உடலை எம்பாமிங் செய்து பாதுகாப்பதுண்டு.

இது தான் நம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விஷயத்திலும் நடந்திருக்க வேண்டும்.

ஆமாங்க..

நமது பார்வைக்கு சுருக்கம் நிறைந்த அவரது முகம் மற்றும் சிகை பொலிவோடு இருக்க,இந்த surface embalming (தோலின் மேற்பரப்பில் ரசாயனக் கலவையை செலுத்தி பதனிடும் முறை) ஒருவேளை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது அவரது வழுவழுப்பான முகத்தை புகைப்படத்தில் பார்த்தாலே தெரிகிறது.

இந்த விஷயத்தில் வாய் திறக்க வேண்டியவர்கள்,வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள்...


எது எப்படியோ....எம்பாமிங் பற்றி விரிவாக தெரிந்த கொள்ள,மறைந்த நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முகத்தில் உள்ள நான்கு மர்மப்புள்ளிகள் காரணமாயிற்று என்றால் அது மிகையில்லை.

இது போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்களை,மக்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக எடுத்து சொன்னால் தான் என்ன...?

ஒருவேளை ரகசியம் வெளிவந்துடும் என்கிற பயமோ......என்னவோ....யார் கண்டா.....?

Wednesday, 7 December 2016

அர்த்தமுள்ள வரிகள்-30

தெருவில் கிடக்கும் காகிதமாக யாரையும் நினைக்காதே;
நாளை அது பட்டமாக பறந்தால்,
நீயும் சற்று நிமிர்ந்து தான் அதனைப்
பார்க்க வேண்டும் என்பதனை ஒருபோதும் மறவாதே......