Monday, 30 January 2017

பீதியில் ஏர்டெல் மற்றும் ஜியோ...


யாரும் எதிர்பார்த்திராத,இந்த இரண்டு மாபெரும் மொபைல் நெட்ஒர்க் இணைப்பு செய்தி,யாருக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறதோ,இல்லையோ..
நிச்சயம் ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆமாங்க...இந்திய நாட்டின்
மிகப்பெரிய மொபைல் நெட்ஒர்க் ஆஃப்ரேட்டர்களான வோடோபோன் இந்தியாவும்,ஐடியா செல்லுலார் இணைவதற்கான முன்னெடுப்பை தொடங்கி விட்டன.இது பற்றிய விரிவான செய்தியினை அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க..
Link:1
http://viid.me/qh9niI
Link:2
https://youtu.be/gLNMEBncRew

Sunday, 29 January 2017

ஏழைகளின் ஐஸ் ஆப்பிள் சாப்பிட்டுருக்கீங்களா....?


இயற்கை தந்த உணவுகள் தான் எத்தனை....எத்தனை....?
நாம் தான் அதனையெல்லாம் மறந்து, உடலுக்கு தீங்கு தரும் உணவுகளை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

வெளிநாட்டுக்காரன் நம் உணவை நல்லது என நாடி வருகிறான்...ஆனால்
நாமோ,நம் உடலுக்கு ஒவ்வாது எனத்
தெரிந்தும் ருசிக்காக அவங்க (வெளிநாட்டுக்காரன்) உணவை நாடிச்செல்கிறோம்.

என்ன செய்ய.....எல்லாம் உலகமயமாக்கலின் விளைவு.

சரி....விசயத்திற்கு வருகிறேன்..

தமிழ்நாட்டில் பெரும்பாலான
கிராமப்பகுதியிலும் மற்றும் ஒரு சில நகரப்பகுதியிலும்,கோடை காலங்களில் அரிதிலும் அரிதாக காணக் கிடைக்கின்றது,இந்த ஏழைகளின் ஐஸ் ஆப்பிள்.

ஆமாங்க....நான் சொல்வது என்னவென்று தெரிகிறதா...?

இதற்கு தமிழில் நுங்கு(nungu)என்று பெயர்.இங்கிலீஸ்காரன் இதற்கு வைத்த பெயர் தான் ஐஸ் ஆப்பிள்
(ice apple).


சரி...இந்த ஐஸ் ஆப்பிளில் அப்படி என்னதான் இருக்கு...?

ஜிங்க்
கால்சியம்
இரும்புச்சத்து
பாஸ்பரஸ்
வைட்டமின்கள் A,B,C
பொட்டாசியம்
சிட்ரினால்
நீர்ச்சத்து
கார்போஹைட்ரேட்
நார்ச்சத்து
புரதச்சத்து

இதை சாப்பிடுவதால் நமது
உடம்பிற்கு ஏற்படும் நன்மைகள்....

உடலை குளிர்ச்சிப்படுத்தும்.

வியர்க்குருவை போக்கும்.

தோலில் உருவாகும் பருக்கள் போக்குகிறது.

வெப்ப பக்கவாதம் குணப்படுத்த உதவுகிறது.

கெட்ட கொழுப்பை மட்டுப்படுத்தும்.

வாந்தி மற்றும் குமட்டலுக்கு மருந்தாகும்.

வயிற்றுக்கோளாறை சரிசெய்யும்.

அஜீரணக்கோளாறை சரி செய்யும்.

வயிற்று வலி நீங்க உதவுகிறது.
(அளவோடு எடுத்துக்கொண்டால்)

கர்ப்பிணிகள் இதனை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் (அசிடிட்டி,
மலச்சிக்கல் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபடலாம்).

சின்னம்மை நோய் நீங்க உதவுகிறது.

உடல் சோர்வு நீங்க...

உடலில் தோன்றும் அரிப்பை குணப்படுத்தும்.

உடல் எடை குறைக்க...

முகப்பொலிவாக்க பயன்படுகிறது.

முகப்பரு நீங்க...

மார்பகப்புற்றுநோய் உருவாக்கும் செல்களை அழிக்க உதவுகிறது.

உடல் நீர்ச்சத்தை தக்கவைக்க...என எண்ணிலடங்காத பல பலன்களை கொடுக்க வல்லது தான்,இந்த நுங்கு எனும் ஐஸ் ஆப்பிள்.


சரி இதனை எப்படி பயன்படுத்தலாம்...?

இளசாக வாங்கி தோல் நீக்கியோ, அல்லது நீக்காமலோ சாப்பிடலாம்.

பால்,சர்பத் பானத்துடன் இதனை சேர்த்து,உடலுக்கு குளுமை தரும்
நுங்கு சர்பத்தாக பருகலாம்.

தோலினை நீக்கி ஜெல் பகுதியை உடம்பினில் பூசலாம்.

மேலே சொல்லப்பட்டது யாவும் எனக்கு தெரிந்தவை மட்டும் தான்.

எது எப்படியோ....நமது பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான நுங்கின் (ice apple) அருமை பெருமைகளை
பற்றி ஓரளவிற்கு அறிந்து கொள்ள, உங்களுக்கு இந்த பதிவு உதவியிருக்கும் என நான் நம்புகிறேன்.

Saturday, 28 January 2017

எமனை அருகில் வைத்துக்கொண்டு தூங்கலாமா...?
நிம்மதியாகவும்,நீண்டகாலம் உயிரோடு வாழ வேண்டும் என்றால்....இதனை அருகில் வைப்பதை தவிர்ப்பதோடு மட்டுமல்லாது,சீக்கிரமே புறந்தள்ளிவிடுங்கள்.

இல்லையேல்...நீங்கள் எமனை அருகிலே வைத்துக்கொண்டு தூங்குவது போல் ஆகிவிடும்.

நான் எதைப்பற்றி சொல்கிறேன் என்பது பற்றி ஓரளவுக்கு உங்களுக்கு புரிந்திருக்கும் என நான் நம்புகிறேன்.

ஆமாங்க நண்பர்களே....
இரவானால் பேய்க்கு பயப்படுகிறோமோ,இல்லையோ....  கொசுவுக்கு பயப்படுகிறோம்.

காரணம் ஒன்று தான்...
கொசுவானது நம்மை நிம்மதியாக தூங்க செய்யாமல் விடுவதோடு மட்டுமல்லாது,நோய்க்காரணியையும் நம் உடலுக்குள் செலுத்தி,நம் உயிருக்கும் உலை வைத்துவிடும்.

ஆகவே தான்,நாம் அனைவரும் கொசுவிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள பலவிதமான இயற்கை மற்றும் செயற்கை முறையிலான
கொசுவிரட்டியினை பயன்படுத்தி வருகிறோம்.

கொசுவிரட்டிகளின் ஆதியான கொசுவர்த்தி சுருள் பற்றியும்,அது நம் உயிர்க்கு வைக்கும் வேட்டு பற்றியும் இப்பதிவில் விரிவாக காண்போம்...

உலகின் பல பகுதிகளில் பல முறைகள் பின்பற்றி வந்தாலும், ஜப்பானில் தான் வணிகரீதியாக கொசுவிரட்டிகளுக்கு
முதன் முதலாக விதை தூவப்படுகிறது.
அதன் வடிவம் தான் சுருள்.

ஆமாங்க..

கிரைசாந்திமம் (Chrysanthemum)
என்றழைக்கப்படும் துலிப் மலரை காயவைத்து பெறப்படும் பைரெத்ரம்
(pyrethrum) மற்றும் மரத்தூள் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருளை இயற்கை கொசுவிரட்டியாக ஜப்பானிய மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஜப்பானிய தொழில் அதிபர்,
எலிசிரோ உயேமா (Elichiro Ueyama) தனது முயற்சியால்,கொசுவை
விரட்டும் சுருளை முதன் முதலாக
உருவாக்குகிறார்.

இது தான்......இன்று உலகமே பயன்படுத்தும் கொசுவர்த்தி
சுருளுக்கு அச்சாணி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர்,உயேமா தனது மனைவியின் ஆலோசனையின் பேரில்,பலவித நறுமணத்துடன் கூடிய கொசு விரட்டும் ஊதுபத்திகளை உலகிற்கு அறிமுகம் செய்கிறார்.

இந்த இயற்கை கொசுவர்த்தி சுருளானது பொதுவாக நீண்ட நேரம் நிலைத்து நிற்காது,சூரிய ஒளி பட்டால் எளிதில் தனது சுயத்தை இழந்து விடும்.

இதன் விளைவாக நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும்,ப்யர்த்ரோய்டு
(pyrethroid) எனும் செயற்கை ரசாயனத்தை அடிப்படையாக
கொண்ட கொசுவர்த்தி சுருளை தயாரிக்க தொடங்கினார்கள்.

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது...

ஆமாங்க...இது மனித உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தவல்லவை.

இது ஆரம்பம் என்றால்......இதன் தொடர்ச்சியாக இன்று மனித உடலுக்கு ஒவ்வாத பலவிதமான கெமிக்கல்,
பல இயற்கை நறுமணங்களுடன் சேர்க்கப்பட்டு கொசுவர்த்தி சுருள்
உலகம் முழுக்க விற்பனைக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.அதனை நாமும் விவரம் தெரியாது காசு கொடுத்து வாங்கி,அதன் புகையை காற்றோடு காற்றாக சுவாசித்து கொண்டிருக்கிறோம்.

சரி கொசுவாவது தொலைந்ததா..?  என்றால்....அதுவுமில்லை.

நம் காதருகே,நான் திரும்பி வந்துட்டேனு.... ரீங்காரமிட்டு...
நம்மை ஏளனம் செய்து கொண்டேயிருக்கிறது கொசு..!!

சரி...
அப்படி என்னதான் மனித உடலுக்கு ஒவ்வாத ரசாயனங்கள்,இந்த கொசுவர்த்தி சுருள் தயாரிக்க  பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்ப்போம்...

dibutyl hydroxyl toluene (BHT),
piperonyl butoxide (PBO),
otachlorodipropyl ether,
N,N-Diethyl-meta-toluamide (DEET),
N-(2-ethylhexyl)-bicyclo-(2,2,1)hept-5-ene-2,3-dicarboximide (MGK 264),
bis (chloromethyl) ether(BCME)
pyrethrum,
pyrethrin,
allethrin

இதுபோக இந்த கொசுவர்த்தி சுருள் எரியும் போது,புகையில் இருந்து
வெளிப்படும் பார்மால்டீஹைடு (formaldehyde) ரசாயனம்
இன்னும் மோசமானது.

அதவாது,ஒரு கொசுவர்த்தி சுருள்
வெளிப்படும் இந்த ரசாயனத்தின் தாக்கமானது மட்டும்,சுமார் 50 சிகரெட் புகைப்பதினால் என்ன விளைவு உருவாகுமோ,அத்தகைய விளைவுகளுக்கு சமமானது, என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள்..
இந்த பார்மால்டீஹைடு கெமிக்கல்,
எத்தகைய கொடிய விஷமென்று...

இந்த கொசுவர்த்தி சுருள்
எரிந்து உருவாகும் புகையினை சுவாசிப்பதனால்,நம் உடலுக்கு
வரும் மோசமான தீங்குகள்....

சுவாசக்கோளாறு,
ஆஸ்துமா,
குமட்டல்,
வாந்தி,
நுரையீரல் புற்றுநோய்,
மலட்டுத்தன்மை,
இருமல்,
தும்மல்,
கண்ணில் நீர் வடிதல்,
மூக்கில் தொற்று,
தொண்டைப்புண்,
கல்லீரல் தொற்று,
லூகேமியா புற்றுநோய்,
தோலில் எரிச்சல்,
சைனஸ் தொந்தரவு,
சுவாசப்பாதையில் புற்று, மூச்சுத்திணறல்

நண்பர்களே...யோசித்துப்பாருங்கள். நாம் அன்றாடம் ஏதோ ஒருவகையில், நம் உடம்பை சிதைத்து கொண்டு இருக்கோம்,என்பதனை இதன் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

சரி...இதற்கு என்ன தான் நிரந்தர தீர்வு
என்கிறீர்களா..?

தற்போது இயற்கை கொசுவிரட்டிகள் மிகுதியாக பசுமை அங்காடிகளில் கிடைக்கிறது.அதனை வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

கொசு உருவாவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள் பலவற்றை கையாள முயற்சி செய்யலாம்.

ஆனால் மறந்தும் இனிமேல் இந்த செயற்கை ரசாயனம் நிறைந்த  கொசுவர்த்தி சுருள் பயன்படுத்துவதை
தயவுசெய்து மறந்திடுங்கள்.

இல்லாவிட்டால்....

உங்களது குழந்தைகளுக்கு மேலே சொன்ன பிரச்சனைகள் உருவாக நீங்களே காரணமாகிவிடுவீர்கள், என்பதனை மறக்காதீர்...

கொசுவர்த்தி சுருள் எனும் எமனை அருகிலே வைத்து கொண்டு
தூங்காதீர்கள்...

இது உங்களுக்கு மட்டுமல்ல..
உங்களை சுற்றியுள்ளவர்க்கும் கேடு.

இயற்கையோடு இணைந்து வாழப்பழகுவோம்.

வந்தாச்சு...ஆதார்-பே...


இனி பணமில்லா பரிவர்த்தனைக்கு நமது ஆதார் எண் மற்றும் கைரேகையே போதுமானது.

ஆமாங்க...

ஆதார்-பே (aadhaar pay) எனப்படும்
ஆதார் எண் மற்றும் கைரேகையை ‌மட்டும் பயன்படுத்தி ரொக்கமில்லாத
பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய முறையை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கு இணையதள இணைப்போ, ஸ்மார்ட்போனோ தேவையில்லை. மாறாக,ஆதார் எண் மற்றும் கைரேகையை கொண்டு
நம்மால் பணத்தை செலுத்தவோ,
பெறவோ முடியும்.

14 தேசிய வங்கிகள் இதுவரை
இந்த திட்டத்தில் இணைய இசைவு தெரிவித்துள்ளதாகவும்,ஆகவே
விரைவில் இந்தியா முழுக்க இந்த
ஆதார்-பே நடைமுறைக்கு வரும் எனத்தெரிகிறது.

எது எப்படியோ....
மக்களுக்கு துயர் தராத எந்த திட்டமும் வரவேற்புக்குரியதே.


Thursday, 26 January 2017

பால் மற்றும் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்...?


அசைவ உணவு என்பது நம் பாரம்பரியத்தோடு பின்னிப்
பிணைந்த ஒன்று.

அதிலும் பால் மற்றும் சிக்கன் என்றால் நான் சொல்லவே தேவையில்லை.
அந்தளவிற்கு தமிழர் வாழ்வில் அங்கமாக நீக்கமற நிறைந்திருக்கிறது.

அன்று பாத்திரங்களில் வாங்கியது போய், இன்று பாலித்தீன் பாக்கெட்டுகளில் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

பால் என்கிற உணவு சைவமா அல்லது அசைவமா...?..என்று உலகம் முழுக்க ஒருபக்கம் பட்டிமன்றம் இன்றும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
ஆனால் விடை தான் கிடைத்த பாடில்லை.

சரி...வாங்க நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிவிடுகிறேன்.

தற்சமயம் நீங்கள் பால் மற்றும் சிக்கன் சாப்பிடுபவரா...?

அப்ப இந்த தகவல் உங்களுக்கானதே.

நீங்கள் சாப்பிடுகிற பால் மற்றும் சிக்கன் உணவுகள் உண்மையிலேயே உங்களுக்கு உடலுக்கு பயனளிப்பதா அல்லது தீங்கு விளைவிப்பதா என்பது பற்றி தெரிஞ்சுக்கணுமா...?

அப்ப கீழ்கண்ட படச்செய்தியினை பாருங்கள்....படியுங்கள்......முடிந்தால்
சக நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.


நம்மிடம் இயற்கையான அசைவ உணவு தரும் பிராணிகள் இருக்க,
தரம் இல்லாத அசைவப்பிராணி உணவு மற்றும் பால் உண்பதை  தவிர்க்கலாமே...

பாலையும்,தண்ணியையும் பிரித்தறியும் அன்னம் போல,
நாமும் நல்லது,கெட்டதை
பிரித்தறிந்து உண்ணப்
பழகலாமே...

நீண்ட நாள் நோயில்லாமல்
வாழ ஆசைப்படுபவர்கள்,
இயற்கையோடு இணைந்து
வாழலாமே....

அதே கண்கள்-பார்க்கலாம்


புதுமுக இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான் இந்த அதே கண்கள்.
இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
http://viid.me/qgaCXL

Wednesday, 25 January 2017

இதற்கும் தடையா....?
நம்மூரில் சேவல் சண்டை எந்தளவிற்கு பிரபலமோ,அந்தளவிற்கு அஸ்ஸாம் மாநிலத்தில் இந்த புல்புல் (bulbul)
குருவிச்சண்டை மிகவும் பிரபலம்...

இந்த போட்டியானது அசாம் மாநில அறுவடை திருநாளான மாஃஹ் பிஹூ
(Magh Bihu) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எவ்வாறென்றால் நம்மூரில் பொங்கல் (pongal) சமயத்தில் சேவல் சண்டை கொண்டாடுகிறமோ... அது போலத்தான்.

ஒன்று தெரியுமா...?..
நம்மூர் ஜல்லிக்கட்டு போன்று,அங்கு
எருமை சண்டையும் உண்டு (என்ன இதுவும் தற்போது தடையில் உள்ளது).

கவுகாத்தியில் இருந்து சரியாக
நாற்பது கிலோமீட்டர் (40km)
தொலைவில் உள்ள கஜோ(Hajo) கிராமத்தில் மணிகட் (Monikut)
மலையில் அமைந்துள்ள ஹயக்ரீவ மாதவா கோயிலில் கிராமத்தார்,
வருடந்தோறும் ஜனவரி-பிப்ரவரி மாத மாஃஹ் பிஹூ திருவிழா காலங்களில்
ஒன்றுகூடி,இந்த புல்புல் குருவி பந்தயத்தை நடத்துவார்கள்.

சரி வாங்க....இந்த போட்டி பற்றிய சுவாரஸ்யங்களை சொல்கிறேன்.

இந்த போட்டியில் குறைந்தது 400ல் இருந்து 500 புல்புல் குருவிகள் வரை பங்குபெறுமாம்.

பொதுவாக புல்புல் குருவிகளை போட்டிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக காட்டில் இருந்து கொண்டு
வந்து,அதனை சிறந்த போட்டியாளராக மாற்றுவதற்காக 108க்கும்
மேற்பட்ட சேர்மானங்கள் கொண்ட
உணவுக்கலவை தயாரிக்கப்பட்டு,
பின் அதற்கு வழங்கி போட்டிக்கு தயார்படுத்துவர்.

அந்த உணவுக்கலவையில் என்ன சேர்க்கப்படுகிறது என்பது பற்றிய விவரம் யாருக்கும் சொல்லமாட்டார்கள்,
அந்த புல்புல் குருவி வளர்ப்போர்.

சரியாக,அதாவது போட்டி நடைபெறும் நாளான மாஃஹ் பிஹூ திருவிழாவிற்கு முந்தைய நாள்
முழுக்க,புல்புல் குருவிகளுக்கு
உணவு வழங்காமல் பட்டினிபோட்டு விடுவார்கள்,அந்த புல்புல் குருவி
உரிமையாளர்கள்.

போட்டி அன்று,போட்டியில் பங்கெடுக்கும்  பசியோடு உள்ள இரு
புல்புல் குருவிகளுக்கு இடையே
வாழைப்பழத்தை உணவாக மாற்றி, மாற்றி நீட்டி அவைகளை ஏமாற்றி, உணவுக்காக சண்டை போடும் வாய்ப்பினை உருவாக்குவார்கள்.

அதற்கேற்றாற் போல் அந்த இரு குருவிகளுக்கு இடையே சண்டை உருவாகும்.இறுதியில் வெற்றிபெறும் புல்புல் குருவி உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும்.

இரண்டு குருவிகளின் காலில்
கயிறு கட்டப்பட்டு,குருவியானது  உரிமையாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இறுதியாக வெற்றி பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து புல்புல் குருவிகளும் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டுவிடும்.

போட்டியில் வெற்றிபெற்றவருக்கு முதல் பரிசாக ரூபாய் 1501ம் இரண்டாம் பரிசாக ரூபாய் 501ம் மூன்றாம் பரிசாக ரூபாய் 301ம்,கேடயமும் பரிசாக
வழங்கப்படும்.

புல்புல் குருவிச்சண்டை இங்கு காலம் காலமாக நடைபெற்று வந்தது.ஆனால் தற்போது இங்கும் விலங்கு நல வாரியம் (AWBI) மூலம்,இந்த போட்டி நடைபெற தடைவிதித்துள்ளது கவுகாத்தி உயர்நீதிமன்றம் (காரணம் பறவைகளை துன்புறுத்துகிறார்கள்).

இதற்கும் ஜல்லிக்கட்டு போல தடை நீங்குமா....?

சிந்திக்க வேண்டிய விஷயம்..


Monday, 23 January 2017

ஜல்லிக்கட்டுக்காக தன்னுயிர் தந்த தமிழச்சி...


ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து
தமிழ் இனத்தில் உள்ள ஆண்,பெண் என வயது வித்யாசம் பார்க்காது,தமிழக்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து
அனைவரும் போராடினர்.

அப்படி போராடிய அனைவரின் தற்போதைய நிலை என்ன....?..
என்பது யாருக்கும் தெரியாது.

காரணம்,இறுதிநாளான நேற்று நடந்த வன்முறை சம்பவங்கள் அனைத்தும், தமிழர் மனதில் என்றும் ஆறாத வடுவாக இருக்கும் என்றால் மிகையில்லை.

அதிலும் குறிப்பாக,அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று,நேற்று (23jan-2017) நடந்த வன்முறையில்  இந்த இளம்பெண் பலியானார்,என்று சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வலம் வருகிறது.


இந்த சகோதரியின் இறந்த புகைப்படம் ஏனோ...என் கண்களை குளமாக்கி கொண்டிருக்கிறது.

உண்மையில் இந்த பெண் யார்...?
எந்த ஊரில் இருந்து வந்தார்....?
என்கிற எந்த விவரமும் இதுவரை
இந்த இளம்பெண்ணை பற்றி தெரியவில்லை.

அலங்காநல்லூரில் போராடிய தோழர்கள் யாருக்கேனும்
இவர் பற்றிய விவரம் தெரிந்தால்,
உடனே தயவுகூர்ந்து பகிருங்கள்.....

அந்த இளம்பெண் வரவிற்க்காக காத்திருக்கும் அவரது
பெற்றோரை நினைத்து,ஒரு
தமிழ் சகோதரனாய் மிகவும்
வருத்தப்படுகிறேன்,துயரப்படுகிறேன்.

இவரைப்போன்று எத்தனை தமிழர்களை,இந்த வன்முறை காவு வாங்கியதோ...?எனக்கு தெரியாது.

இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள்,இவரைப்
போன்று ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக உயிரை இழந்த சகோதர, சகோதரிகளுக்கு உரிய
நியாயம் பெற்றுத்தர வேண்டுமா...
வேண்டாமா...?

குறிப்பாக இவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு அனுசரணையாக இருப்பது தமிழ் சொந்தங்களாகிய அனைவரின் கடமையும் கூட.

எனக்குள்ள ஒரே வருத்தம் மற்றும் ஆதங்கம்......

நேற்று போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்த
ஒருவர் கூட,இவரை போன்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் இழந்தவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இனிமேலாவது சாதி,மதம் கடந்து தமிழ் இனத்திற்காக போராடி,உயிர் இழந்தவர்கள் பற்றி நினைவில் கொள்வதோடு,அவர்களது
தியாகத்தை போற்ற வேண்டும்.

செய்வார்களா....?

உணர்வுக்கு மதிப்பளிக்கும் நாம்,
நம் உயிருக்கும்
மதிப்பளிக்க வேண்டும்.

Sunday, 22 January 2017

நாளை நமதே....


நம் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டை காக்க ஒரு போதும்
நாம் பின்வாங்கவே கூடாது.

இன்று மாலையில் இருந்து,சமூக வலைத்தளங்கள் மூலம் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி, நம் நெடிய போராட்டத்தை நீர்த்து போகச்செய்ய முனைந்துள்ளனர்.

அதனை ஒரு போதும் நாம்
கருத்தில் கொள்ளாது,நாம்
நினைத்த காரியத்தை சாதிக்கும்
வரை தொடர்ந்து போராட வேண்டும்.

நம்மை ஆளும் அரசாங்கங்களை
அடிபணிய வைப்போம்...நம் மக்களின் காலடியில்.

ஒருவார காலமாக போராடும் தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தற்போதைய தேவை முழுமையான வெற்றியே.....

அத்தகைய முழுமையான வெற்றி
பெற நமது ஒரே இலக்கு,
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில்
தலைமுறை தலைமுறையாய்
தொடர உதவும் நிரந்தர சட்டம்.

அந்த சட்டத்தை (PCA act) மத்திய அரசு நிறைவேற்றும் வரை நாம் முன்வைத்த கால்களை,பின்வாங்கும் பேச்சிற்கு இடம்கொடாது வீறுநடை போட வேண்டும்.

பொறுத்தார் பூமியாள்வார்....
அதற்கான காலமும் கனிந்து கொண்டிருக்கிறது.

நமது தற்போதைய ஒரே இலக்கு ஜல்லிக்கட்டு மட்டுமே...
அதை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்..........

Friday, 20 January 2017

ஜல்லிக்கட்டுக்கு முதலில் தடைவிதித்த தமிழர்..


இன்று நமது கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க கோரி,மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மன்றாடிக்
கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

மேலும் நாம் அனைவரும் ஒருசேர
ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா (peta)
தான் காரணம் என்று,அந்த
அமைப்புக்கு எதிராகவும் போராடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால்,உண்மையில் இதுபோன்ற அமைப்புகள் பல ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து போராட உறுதுணையாக இருப்பது ஒரு
உயர்நீதிமன்ற தீர்ப்பு.

ஆமாங்க..அத்தகைய வரலாற்று பிழையான தீர்ப்பினை வழங்கி,
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர
தடை விதிக்க முதன் முதலாக
அச்சாரம் போட்ட ஒரு தமிழ்ப்பெண் நீதிபதி என்றால் வியப்பாக இருக்கிறதா...?

ஆம்....இது தான் தமிழர்களால் ஜீரணிக்க முடியாத வரலாற்று
உண்மை.

அந்த தமிழ்ப்பெண் நீதிபதியின் பெயர்......R.பானுமதி.

அவர் தமிழக(chennai) உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதியாக இருந்த பொழுது,ரேக்ளா ரேஸ் தொடர்பான வழக்கில் தான்தோன்றித்தனமாக,வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத ஜல்லிக்கட்டிற்கும், ரேக்ளாவுடன் சேர்த்து தடை விதித்து உத்தரவிட்டார் என்கிறார்,ரேக்ளா தொடர்பான வழக்கில் மனுதாரர் முனுசாமித்தேவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜி செலான்.

குறிப்பாக தான் அவரிடம்(நீதிபதி
R.பானுமதி),ஏற்கனவே இது போன்ற வழக்குகளில்,மூத்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பினை முன்னுதாரணம் காட்டி விளக்கிய போதும்,அவர் இதனை 'மிருகவதை' என்றும்,ஆகவே இனியும் இதனை ஏற்கமுடியாது என்று கூறி,ரேக்ளா ரேஸ்,ஜல்லிக்கட்டு போன்ற காளை சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் அனைத்தையும்
தடை செய்வதாக தீர்ப்பினை வழங்கி அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

ஏன்.....அவ்வாறு ரேக்ளா ரேஸ்
வழக்கிற்கு சம்பந்தமேயில்லாத அத்தகையதொரு தீர்ப்பினை வழங்கினார்,என்று இதுவரை தெரியவில்லை என்கிறார் அந்த வழக்கறிஞர்.

ஒன்று தெரியுமா....?...நண்பர்களே...

இவர் (R.பானுமதி) தான் தமிழ்நாட்டை சேர்ந்த முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஆறாவது பெண்
உச்ச நீதிமன்ற நீதிபதியும் கூட.
தற்போதும் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார்....

ஒரு காலத்தில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த தமிழ்ப்பெண்மணி,நாட்டின்
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்,என்கிற
செய்தி கேட்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த,
பெருமைபட்டுக்கொண்ட
கோடானுகோடி தமிழர்களில்
நானும் ஒருவன்.

இந்த பதிவினை போடும் முன்பு
வரை,தமிழனாய் அவர் மேல் நான் வைத்திருந்த அளவுக்கதிகமான
மரியாதை அனைத்தும்
சுக்குநூறாகிப்போனது.

காரணம் ஒன்று தான்...அவர் தன் மனதிற்கு விரும்பியோ,விரும்பாமலோ பிறப்பித்த ஜல்லிக்கட்டு மீதான தடை
உத்தரவு.

தனிப்பட்டு உங்களை விமர்சிப்பதற்க்காக எழுதப்பட்ட பதிவல்ல இது...

ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு,
பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் பிள்ளையாக,சாமான்ய மனுஷனாக என் மனதை துளைத்தெடுத்துக் கொண்டிருக்கும் கேள்விகளே...?

சராசரி மனுஷனாக நான் உங்களுக்கு முன்வைக்கின்ற கேள்விகள்...?

பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தானாக முன்வந்து தடை செய்வதன் உண்மையான
காரணம் என்ன.....?

ரேக்ளா ரேஸ் தொடர்பான வழக்கில் அந்த போட்டிக்கு மட்டும் தடை விதிக்காமல்,ஒட்டுமொத்தமாக
காளை சம்பந்தப்பட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தடை
விதிக்க காரணம் என்ன...?

சரி...உங்களுக்கு உண்மையில் காளையின் மீது தனிப்பட்ட அக்கறை இருப்பின்,ஏன் காளையினை கொல்வதற்கும்,உண்பதற்கும் தடைவிதிக்கவில்லை....?

மூத்த நீதிபதிகள் வழங்கிய
தீர்ப்பினை வழக்கு தொடர்பாக,
முன்னுதாரணமாக எடுத்து சொன்னபிறகும் கருத்தில்
கொள்ளாததன் பின்னணி என்ன....?

தமிழனாய் ஒரு கேள்வி...?

தமிழர் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டை ஒழித்துக்கட்ட துணிந்த நீங்கள்,தமிழச்சியாய் தம் இனத்திற்கு
தவறு இழைத்துவிட்டோமென்று, என்றாவது உங்கள் மனதிற்குள்
உறுத்தியது உண்டா....இல்லையா...?
(தெரிந்தோ,தெரியாமலோ நீங்கள் வழங்கிய தீர்ப்பு,தமிழகமே ஸ்தம்பித்து நிற்க காரணமாக இருக்கிறது இன்று..)

ஜல்லிக்கட்டு தடைக்கு ஆணிவேரே நீங்கள் தான்...அதுவும் தமிழ்ப்பெண் என்று நினைக்கும் பொழுது, உண்மையிலேயே ரத்தம் கொதிக்கிறது.

உங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற்பட்டு
நீதியினை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் இருந்த நீங்கள் ,
உங்கள் சுயநலத்திற்காக உணர்ச்சிவயப்பட்டு, அவசரக்கோலத்தில் சர்வாதிகார மனப்பான்மையோடு, தான்தோன்றித்தனமாக எழுதிய தீர்ப்பாகவே தோன்றுகிறது.

தமிழ் கலாச்சாரம் தெரிந்த நீங்களே தடை விதிக்கும் பொழுது,தமிழ் கலாச்சாரம் அறியாத நீதிபதிகளிடம்,
ஒரு தமிழனாய்...எவ்வாறு நியாயத்தை எதிர்பார்க்க முடியும்...? (உங்கள் தீர்ப்பே மற்ற நீதிபதிகளுக்கு முன்னுதாரணம் ஆகிவிடாதா..)

இறுதியாக எனக்கு ஒரு ஐயம்...!! நீங்கள் ஒன்றும் பீட்டா ஆதரவாளர் இல்லையே...!!

நீதிபதிகளே....நீங்கள் ஒன்றும் தேவதூதர்கள் இல்லை.
நீங்கள் அவசரப்பட்டு எழுதுகிற தீர்ப்புகள் ஒரு இனத்தையே இன்று
வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

நாங்கள் காளைகளை வஞ்சிக்கிறோமென்று;
நீங்கள்
எங்களை வஞ்சிக்கிறீர்கள்....

Thursday, 19 January 2017

இவருக்கு வணக்கம் வைக்கலாமே....


தமிழகமே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் நம்மைக்காக்கும் காவல் துறையில் இருந்து வெளிப்படையாக ஆதரவுக்குரல் இன்று
வெளிப்பட்டிருக்கிறது இவர் மூலமாக..

ஆம்....
மாய அழகன் என்கிற காவலர்,
தாங்களும் தமிழர்களே...
தங்களது ஆதரவு என்றும் தமிழ் மண்ணுக்கே..... ஜல்லிக்கட்டுக்கே... என்று வெளிப்படையாக தனது ஆதரவை ஊடகங்களில் மூலம் தெரிவித்துள்ளார்.

அவரது துணிச்சலை பாராட்டி வரவேற்போம்..

தமிழருக்கு எதிராக மோதியும்....நீதியும்...
ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் தங்களால் பிறப்பிக்க இயலாது என
கை விரித்திருக்கிறார் மோடி,என்கிற செய்தியை கேட்டவுடன் தமிழனாய் என் நெஞ்சம் குமுறுகிறது.

நாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாடு மாநில மக்களின் கலாச்சார அடையாளமான வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு,உங்களுக்கு வேண்டும் என்றால் பொழுதுபோக்காக தெரியலாம்.

ஆனால்,ஜல்லிக்கட்டு என்பது
பல்லாயிரம் ஆண்டுகளாக
தமிழர்களாகிய எங்களது உயிரிலும்,
உணர்விலும்,வாழ்விலும் ரத்தமும் சதையுமாக கலந்து கிடக்குறது.

அத்தகைய தமிழரின் வீர விளையாட்டினை நடத்த அவசர
சட்டம் பிறப்பிக்க முடியாது,காரணம்... வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்று நியாயம் கற்பிக்க முயலுகிறீர்கள்.

அந்தளவிற்கு நீங்கள்
நியாயவான்களா....?..என
உங்களுக்கு மனசாட்சி என்று
ஒன்று இருந்தால் நீங்களே
கேட்டுப் பாருங்கள்...

மேலாண்மை காவிரி வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது நீங்கள் என்ன செய்தீர்கள்....?

மேலாண்மை காவிரி வாரியம் நிச்சயம்
அமைப்போம்...என சொல்லிவிட்டு,
சில தினங்களிலேயே எங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்றீர்கள்.
(கர்நாடகத்தில் தங்களது செல்வாக்கை இழக்கக்கூடாது என செய்த அரசியல்
கூத்து என் ஊர் உலகமே அறியும்)

சரி...இதுவரைக்கும் நீங்கள் அவசர சட்டம் போட்டதே இல்லையா...?

மோடி அவர்களே....
உங்களது சுயநலனுக்காக,2014ல்
உங்களது தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன்,நீங்கள் கூட்டிய முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே,
நிர்பேந்திரா மிஸ்ரா என்பவரை பிரதமரின்(தனக்கு) முதன்மைச் செயலாளராகப் பதவியில் அமர்த்த,தொலைத்தொடர்பு துறையில் இருந்த அவரை பணிமாற்றம் செய்வதற்காக TRAI-ன் சட்டத்திருத்தத்தின் மீது அவசர சட்டம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டு அது ஜனாதிபதி ஒப்புதலுடன் அவசர சட்டமாகப் பிறப்பித்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கா....?இல்லை...அதுவும் மறந்துபோச்சா..! மக்களாகிய எங்களிடம் கொடுத்த தேர்தல் வாக்குறுதி போல.

அடுத்ததாக....நிலமசோதா சட்டம் இயற்ற மூன்று முறை அவசர போட்டதை இந்த உலகமே அறியும்.

இதுபோக,முந்தைய BJP கூட்டணி ஆட்சியில் உங்கள் அரசியல் ஆசான்
A.B வாஜ்பாய் பிரதமர் ஆக
இருந்தபோது மட்டும்,சுமார்
58 முறை அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எல்லாம் சரி...நீங்கள் உண்மையிலேயே
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிப்பவராக இருப்பவர் என்றால்....?

ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு எதிராக
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருமெனில், அடுத்த நிமிடமே ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட திருத்தம் நிச்சயம் மேற்கொள்வேன்,என உங்களால் தமிழர்களாகிய எங்களுக்கு உத்தரவாதம் தரமுடியுமா...?

அப்படி அறிவிக்க உங்களுக்கு
திராணி இருக்கா......?...நிச்சயம் உங்களுக்கு இருக்க வாய்ப்பே
இல்லை.

காரணம்,உங்களுக்கு தமிழர்
நலனில் உண்மையான அக்கறை இருந்திருப்பின்,மூன்று வருடமாக ஜல்லிக்கட்டு மீதான தடையினை
நீக்க முயற்சி செய்திருப்பீர்களே...!

உங்களது வோட்டு அரசியலுக்காக, தமிழரது நலனில் தமக்கு அக்கறை
இருக்கிறது என காண்பிப்பதற்காக தமிழில் ட்விட் போடுவது,வேட்டி கட்டி வேஷம் போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உங்களது பேச்சுக்கும், பித்தலாட்டத்திற்கும் இந்தியாவின்
மற்ற மாநிலங்கள் வேண்டுமென்றால் தலையாட்டலாம்.....தமிழர்களாகிய நாங்கள் ஒரு போதும் உங்களை நம்பவோ,ஏமாறவோ தயாரில்லை.

அதிகாரத்தை கையில் வைத்துக்
கொண்டு அவசர சட்டத்தை இயற்ற முடியாது என்கிறீர்கள்.

மக்களுக்காக தான் சட்டமே தவிர, சட்டத்திற்க்காக மக்கள் இல்லை என்பதை உணர்ந்து இருந்தால் நிச்சயம் தமிழர் உணர்வில் கைவைத்து இவ்வாறு வேடிக்கை பார்த்திருக்க மாட்டீர்கள்.

எங்களது கலாச்சாரம்,பண்பாடு பற்றி தெரியாத உங்களைப்போன்ற அரசியல்வாதிகளிடம் நாட்டை கொடுத்தது எங்களது பிழையோ....
என எண்ணத் தோன்றுகிறது.

சரி...அரசியல்வாதிகள் இப்படி இருக்கிறார்களே....என்று நீதிமன்றம் சென்றால்,நீதிமான்கள் அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என, தாங்களும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்களே...என  தங்களது நடவடிக்கையின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்.

மக்களது பாரம்பரியத்திற்கும், உணர்வுக்கும்,கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்காத ஒரு சார்புடைய நீதிபதிகளை என்னவென்று சொல்வது.....?
வெட்கித் தலைகுனிவதை தவிர்த்து.

உண்மையில் நீதிமான்களுக்கு அக்கறையிருந்து இருந்தால்....

கலாச்சார,பாரம்பரிய விஷயங்களில்  நாங்கள் தலையிடமாட்டோம் என ஒதுங்கியிருக்க வேண்டும்.

நாட்டின் ஒரு மாநில மக்கள்
ஒருபக்கம் கொந்தளித்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது,
சூழல் கருதி காலம் தாழ்த்தாது நீதிமன்றம் தீர்ப்பை வழங்காமல் பார்வையாளர் போல் வேடிக்கை பார்ப்பது கொடுமையிலும் கொடுமை.

இதற்கு முன் நீதிபதிகள் யாரும் விரைவாக தீர்ப்பு வழங்கியதே இல்லையா....?...(உலகறிந்த நீதிபதி
குமாரசாமி தீர்ப்பை மறக்க முடியுமா....)

இதில் இருந்து ஒன்றே ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது.ஒருவேளை நீங்களும் மோடி போன்று தமிழர் நலனில் அக்கறையில்லாதவர்களோ.... என்னவோ....என்று..?

அது உங்களது தாமதமாகிற தீர்ப்பின் மூலம் வெளிப்படையாக தெரிகிறது.

தமிழர் விஷயத்தில் நீதிபதிகளும், அரசியல்வாதிகளும் அக்கறையின்மையுடன் செயல்படுவது வெட்கக்கேடானது.

உங்கள் இருவரது வஞ்சகத்தை, எங்களது அகிம்சை போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்வோம்...சட்டத்தை மாற்றியமைப்போம்...அது நிச்சயம்.

பிற வேடிக்கை மனிதரைப்போல், தமிழனை வீழ்வான் என நினைத்தாயோ....

Wednesday, 18 January 2017

'பீட்டா'எனும் கொலைகார கும்பல்.....


என்னடா....மிருகவதை என்று சொல்லி தானே நம் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியது இந்த பீட்டா அமைப்பு.

அது எப்படி....இவர்களை மிருகவதை கும்பல் என்கிறீர்கள்.....ஒன்றும் புரியலையே....!!!..என நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது.

அதற்கு விடை சொல்லவே இந்த பதிவின் நோக்கம்.

வாங்க.....சற்று விரிவாக பார்க்கலாம்..


PETA (People for the ethical treatment of animals) அமைப்பானது 1980ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது.

அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும்
ஒரு காப்பகம் என  தன்னைப்
பதிவு செய்து கொண்டது.

சரி...அதன் பின்னர் நடந்தது
என்ன...?

வீதியில் ஆதரவின்றி அலையும்
நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப்
போவதாக அறிவித்தது பீட்டா.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன் கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின.

லட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே
அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி
ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.

அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால்,பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.


1998 ல் இருந்து 2015 ஆம் ஆண்டு
வரை பீட்டா கொலை செய்த
நாய்கள், பூனைகள், முயல்கள்
மற்றும் இன்ன பிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அதிர்ச்சி அடைய வேண்டாம்...34,970
மேலும் விவரங்களுக்கு:
http://viid.me/qaBUbU

ஆமாம் நண்பர்களே...இந்தக் கருணை
நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்....
கொம்பைப் பிடிக்கிறாய்....
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்...
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்...

எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று.

எப்படியென்றால், 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்,
பீட்டா செய்வது அதுவே தான்...

பீட்டா - மிருகவதை வியாபாரம்

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில்
ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?

அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!

அமெரிக்காவில் வளர்ப்புப்
பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.

எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது
என்பது தான் உண்மை.


சரி....அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று
நீங்கள் கேட்கலாம்.

நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.

போட்டியே இல்லாமல் நடக்கும்
இந்த மிருகவதை வியாபாரம்
பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும்
அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது
என்பதே இன்றைய நிலை!

சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?


நம்ம தெருவில் சாதாரணமாக
காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை
பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.

பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.

நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.

காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.

இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு
இந்த மாடு வைத்திருப்பவர்கள்
பால் கறப்பார்கள்.

பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் இது போல்
சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே? மூன்றரை இலட்சம் கோடிகள்!

சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.

இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை. சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும். ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.

வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!

எனவேதான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை  இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.

உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.

அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.

அதனால்தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை
என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள்....


இதில் என்ன வியப்பு என்றால்....!!! மிருகவதைக்கு எதிராக போராடுகிறோம் என சொல்லிக்கொள்கிற இந்த அமைப்பு (peta),ஒருபக்கம் மிருகங்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது,
கருணைக்கொலை என்கிற பெயரால்...

இத்தகைய கேடுகெட்ட அமைப்பை அங்கீகரித்ததோடு மட்டுமல்லாது;
இவர்கள் சொல்வது எல்லாம் தான்
நியாயம் என நம்பி,நம் கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒழித்துக்கட்ட துணைபோயுள்ளனர், வெட்கம் கெட்ட கைக்கூலிகளான இந்திய ஆட்சியாளர்களும்,
நீதிமான்களும் (தற்போதைய செய்தி: மான் வேட்டை வழக்கில் இருந்து சல்மான் கான் விடுதலை).

இவர்களிடம் இருந்து நியாயம் கேட்பது, நம் அறிவீனமே தவிர...வேறென்ன.


Tuesday, 17 January 2017

நீங்கள் சைவப்பிரியரா....?...அப்ப படிங்க.


இன்று நாம் சாப்பிடுகிற, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில்,ஏதோ ஒருவகையில் மிருகங்களில் இருந்து பெறப்பட்ட பல வேதிப்பொருள்கள்
சுவைக்காகவும்,நிறத்திற்காகவும்
கலக்கப்படுகிறது.

இத்தகைய மிருகங்களில் இருந்து பெறப்பட்ட வேதிப்பொருள்களில்
எது நாம் சாப்பிடுகிற உணவில்
சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை நாம் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக ingredients என்கிற தலைப்பின் கீழ் சேர்மானங்கள்
உணவுபாக்கெட்டின் ஒரு பகுதியில்
வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

அதில் நீங்கள் கவனிக்க வேண்டியது
E என்று பெரிய ஆங்கில எழுத்தில் ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
(நம்மூரில் விற்பனையாகும் உணவுப்பொருள்களின் பாக்கெட்டுகளில் 'E' குறிப்பிடப்படாமல் வெறும் எண் மட்டும் கூட  குறிப்பிட்டு இருக்கலாம்)

'E' - என்றால் ஐரோப்பா என பொருள்படும்.
எண்கள்  வேதிப்பொருளினை குறிப்பிடும்.
'e' -என்றால் எமல்சிபையர் என பொருள்படும்.

நூற்றுக்கணக்கில் இது போன்ற குறியீடுகள் உலகளவில் இன்றும்
நடைமுறையில் இருக்கிறது.

அவற்றில் சில மிருக (எருது,கோழி மற்றும் பன்றி) இறைச்சிகளில் இருந்தும்,கடலில் இருந்தும் பெறப்படும் வேதிப்பொருள்களை குறிக்கிறது.

அந்த குறியீட்டு எண்கள் மற்றும் அது குறிக்கும் வேதிப்பொருள்கள்.....

E120-
கொச்சினில்
(cochineal)

E441-
ஜெலட்டின்
(gelatin)

E542-
எலும்பு பாஸ்பேட்
(bone phosphate)

E570-
ஸ்டெரிக் அமிலம்
(stearic acid )

E572-
மெக்னீசியம் ஸ்டிரேட் மற்றும்
கால்சியம் ஸ்டிரேட்
(magnesium stearate and calcium stearate)

E585-
பெர்ரோஸ் லாக்டேட் (ferrous lactate)

E620-
குளுட்டாமிக் அமிலம்
(glutamic acid)

E621-
மோனோசோடியம் குளுட்டாமேட்
(monosodium glutamate)

E626-
குவானிலிக் அமிலம்
(guanylic acid)

E631-
டைசோடியம் இனோசினேட்
(disodium  inosinate)

E635-
டைசோடியம் 5'-ரிபோநீக்ளியோ டைடுகள்
(disodium  5'-ribonucleotides)

E640 -
கிளைஸின் மற்றும் அது சார்ந்த சோடியம் உப்பு
(glycine and its sodium salt)

என்ன நண்பர்களே....
நீங்கள் சைவப்பிரியர் என்றால்,  சாப்பிடுவதற்கு முன் உணவு பாக்கெட்டை (பிஸ்கட்,மேகி,சிப்ஸ், பப்பிள் கம்,கேக்,சாக்லேட் என எதுவாகவும் இருக்கலாம்) கொஞ்சம் திருப்பி பாருங்கள்.

மேலே சொன்ன குறியீடுகளில்
ஏதேனும் ஒன்று இருந்தாலும்,அந்த உணவுப்பொருளில் அசைவம் கலந்திருக்கிறது என உணர்ந்து கொள்ளுங்கள்.

இது ஒருபுறம் இருக்க....இந்த வேதிப்பொருள்களால் ஏற்படுகிற விளைவுகள் இன்னும் தாராளம்.அது பற்றிய தகவல்களை விரிவாக
இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.

இவரைக் காணவில்லை.....


Monday, 16 January 2017

உண்மையில்....பீட்டாவின் நோக்கம் தான் என்ன....?தமிழர்களின் கலாச்சாரத்தில் கை வைத்திருக்கும் வெளிநாட்டை
தலைமை இடமாக கொண்டு செயல்படும் பீட்டாவின்(beta)
உண்மையான நோக்கத்தை,
மேலே உள்ள படச்செய்தி தெளிவாக
உங்களுக்கு உணர்த்தும் என நான் நம்புகிறேன்

இந்த படச்செய்தி தொடர்பாக தங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் ஏதேனும் இருப்பின்,அதனை இங்கு பதிவிடலாம்.

Sunday, 15 January 2017

ஜல்லிக்கட்டை ஒழித்துக்கட்ட போராடும் உயர்ஜாதி கூட்டம்...


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒழித்துக்கட்ட கங்கனம் கட்டிக்கொண்டு அலைபவர்கள் யார் என்கிற கேள்விக்கு,இந்த படச்செய்தியே உங்களுக்கு பதில் சொல்லிவிடும் என நான் நம்புகிறேன்.

இவர்களை அழித்தொழிக்க அவர்கள் ஆயுதமான சட்டம் கொண்டே,நாமும்
திருப்பித் தாக்குவோம்.

இந்த படச்செய்தி ஒருவேளை உங்கள் உணர்வை தட்டி எழுப்பினால்,மறக்காது உங்களது எண்ணத்தை கருத்தாக பிரதிபலிக்கலாம்.

Saturday, 14 January 2017

தமிழனை இன்றும் உயிர் காக்கும் வெள்ளையன்....வீணாப்போய் மேற்கே அரபிக்கடலில்
கலக்கும் தண்ணீரை,கிழக்கு பக்கமாய் திருப்பி,தமிழக வறட்சி நிலங்களை வளம் கொழிக்க செய்ய பாடுபட்டவர்...

அதற்காக,தன் சொத்து முழுதையும் விற்று வைராக்கியமாக,மக்கள்
துணை கொண்டு தடுப்பணை
கட்டிய வெள்ளைக்கரிகாலன்....

ஒரு காலத்தில் மதுரை மற்றும் ராமநாதபுரம் சார்ந்த மாவட்ட மக்கள்
மழையை மட்டும் சார்ந்தே விவசாயம் செய்தனர்.இன்று ஓரளவிற்கு நதி சார்ந்து விவசாயம் நடக்கிறது என்றால் அதற்கு முழுமுதற்காரணம் இவரே...

மேலும்,தென் தமிழக மாவட்டங்கள் ஓரளவிற்கு வறட்சியில் இருந்து மீண்டு இருக்கிறது என்றால் இவர் தான் காரணம்....

நான் யாரைப் பற்றி சொல்கிறேன்
என்று தெரிகிறதா.....?

ஆமாங்க..

அவர் வேறு யாரும் இல்லை. முல்லைப்பெரியாறு அணை
கட்ட காரணமான
பென்னி குயிக்....

தன்னுடைய அணை கட்டுகிற முயற்சி மற்றும் வேண்டுகோளுக்கு ஆங்கிலேய அரசு செவி சாய்க்காவிட்டாலும், வறட்சியால் துயரப்படும் தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்க, துணிச்சலுடன் போராடி வெற்றியும் பெற்றார்.

அவரது செயலை போற்றும் விதமாக அந்த பகுதி மக்கள்,இன்றும் அவரை கடவுளாக பாவித்து பொங்கல் வைத்து
வணங்குகின்றனர்.

மேலும்,தங்கள் பிள்ளைகளுக்கு அவர் பெயர் சூட்டி பெருமை கொள்கின்றனர், என்றால் பார்த்திக்கொள்ளுங்கள்.... மக்கள் அவர் மீது வைத்துள்ள பாசத்தை.

அவர் இனம் மட்டும் வெள்ளை இல்லை; அவரின் குணமும்,மனமும் வெள்ளை
தான்....

அத்தகைய வெள்ளை மனம் கொண்ட,
வாழும் தெய்வம் பென்னி குய்க்கிற்கு இன்று (ஜனவரி 15) பிறந்த நாள்.

இன்றைய நாளில் நாமும் அவரை
நினைவில் கொள்வோம்..

நீங்களே சொல்லுங்கள்... இவர்களை என்ன செய்யலாம்...?.வார்த்தைகளில் பிழை தேட வேண்டாம்; விஷத்தை கவனியுங்கள்.
இந்த ஜந்துக்களால் தமிழர்களாகிய நமக்கென்ன பிரயோஜனம்.... சிந்தியுங்கள்....

மேலே உள்ள படச்செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இந்த செய்தி உண்மையில்  உங்களுக்கு உரைக்கும் என்றால்,
இது பற்றிய உங்களது மேலான கருத்துகள் எதுவாக இருப்பினும்
பதிவு செய்யலாம்...

நீங்களே சொல்லுங்கள்... இவர்களை என்ன செய்யலாம்...?

கோடிட்ட இடங்களை நிரப்புக-வாய்விட்டு சிரிக்கலாம்....


ரா.பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதுமையான திரைப்படம் தான் இந்த
கோடிட்ட இடங்களை நிரப்புக.
இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://viid.me/qpeeA1

உலகமே கொண்டாடும் அறுவடைத்திருவிழா பற்றி உங்களுக்குத் தெரியுமா....?


நாம் நினைக்கிறோம்........
ஏதோ நம் நாட்டில் தான் பொங்கல்,சங்க்ராந்தி,பைசாகி என்கிற பெயர்களில் அறுவடைத்திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது என்று.

ஆனால்,உண்மை நிலையோ வேறு விதமாக இருக்கிறது.

ஆமாங்க....
உலகம் முழுக்க வெவ்வேறு பெயரில் வேளாண்மை சார்ந்த அறுவடை திருவிழாக்கள்,வருடந்தோறும் வெவ்வேறு மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

என்ன... நாம் அரிசியை
மையமாக வைத்து பொங்கலை கொண்டாடுவதைப்போன்று,
மற்ற நாடுகளில் கோதுமை, பழங்கள் மற்றும் திணைவகைகள் அடையாளம் கொண்டு பல அறுவடை திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சரி வாங்க.......
அந்த அறுவடைத்திருவிழாக்கள்
பெயர் மற்றும் அவற்றை
கொண்டாடுகிற நாடுகளின் பெயரையும் காண்போம்.

சியாண்டி திராட்சை அறுவடைத்திருவிழா(Chianti grape harvest festival) - இத்தாலி

இடெல்-மென் ட்ரைபல் அறுவடைத்திருவிழா(Itel’men tribal harvest festival)-ரஷ்யா

மெக்ரெஹென் திருவிழா(mehregan
festival)-ஈரான்

ட்ரங்-து திருவிழா(Trung Thu festival
-வியட்நாம்

ச்சு-சுக் அறுவடைத்திருவிழா
(Chu Suk harvest festival) -கொரியா

மூன் திருவிழா(harvest moon festival)
-சீனா

நினமே-ச்சாய் திருவிழா(Niiname-sai festival) -ஜப்பான்

யாம் அறுவடைத்திருவிழா (yam harvest festival -கானா மற்றும் நைஜீரியா

என்ன நண்பர்களே....
வியப்பா இருக்கா....!!
இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. காரணம் ஒன்று தான்.

அது வேறு ஒன்றும் இல்லை.....

விவசாயம்.

இது தான்,உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் சாதி,மதம்,இனம் மொழி என அனைத்து அடையாளங்கள் கடந்து ஒன்றினைப்பதும்,வாழ வைப்பதும் ஆகும்

என்ன செய்ய....
மனிதன் உயிர் வாழ
வயிறு தேவை.....
வயிற்றுக்கு உணவு தேவை....
உணவுக்கு விவசாயம் அவசியம்.

அத்தகைய விவசாயத்தை
போற்றவே,உலகம் முழுக்க அறுவடைத்திருவிழாவாக மனிதனால், மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

என்ன நண்பர்களே.....
பொங்கல் கொண்டாடியாச்சா....?

Friday, 13 January 2017

பொங்கலோ.....பொங்கல்."தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பதற்கு ஏற்ப,
தமிழ் நெஞ்சங்களாகிய
உங்கள் அனைவரது
வாழ்வும் வளம்பெற,
எனது இதயம் கனிந்த
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.......

படம் காட்டும் அமேசானின் புதிய ஆப்...


அமேசான் தனது பிரைம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் மற்றும்
புதிய வாடிக்கையாளர்களை
ஈர்க்கவும், புதிதாக செயலி
ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி பற்றி முழுவிவரம் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qoMkqb

Thursday, 12 January 2017

பொங்கலைப் போற்றும் சிங்கப்பூர்...


தமிழர்கள் மிகுதியாக வாழ்வதோடு மட்டுமல்லாது,மரியாதையுடன் நடத்தப்படக்கூடிய உலக நாடுகளில்
மிக முக்கியமானது சிங்கப்பூர்.

நம்மூரில் பொங்கலை சிறப்பாக, மனமகிழ்வோடு கொண்டாட முடியாமல் நாம் திண்டாடி கொண்டிருக்கிறோம்.

ஆனால்,நம் சக தமிழ் மக்கள் வாழும் சிங்கப்பூரில் இன்று பொங்கல் திருநாள் கோலாகலமாக
துவங்கி சிறப்புற நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக தமிழர்கள் அதிகம்
வசிக்கும் பகுதி 'லிட்டில் இந்தியா'
பகுதி முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.


சாலையின் இருபக்கம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.அவையாவும் தமிழர் கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.

அந்த வகையில்,அவர்களாவது நிம்மதியாக தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாடுகிறார்களே.. என்பதில் உண்மையில் தாய்த்தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியே..

ஆனால்,நம் தாய் தமிழகத்திலோ,
பொங்கலின் அங்கமான ஜல்லிக்கட்டு நடத்த  மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் சில ஆண்டுகளாக மன்றாடி கொண்டிருக்கிறோம்.

நான் கேட்குறேன்...நாம் காலம் காலமாக கடைபிடித்து வரும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இவர்கள் யார்...?

ஏன்...நாம் மன்றாட வேண்டும்...?

இது போன்ற உணர்வு சார்ந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு்,தமிழ் இனத்தின் கலாச்சாரத்தை ஒழிக்க எடுத்த முயற்சியோ....என எண்ணத் தூண்டுகிறது

நமது இனத்திற்கும்,கலாச்சாரத்திற்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்காத
நாட்டில் வாழ்வது மிகவும் வேதனை அளிக்கிறது.

நீங்களே சொல்லுங்கள்....?

நாம் தேர்ந்தெடுத்த கடைந்து எடுத்த,
வடி கட்டுன,பயனில்லா இந்த முட்டாள் அரசியல்வாதிகளால் நமக்கு என்ன பயன்...?

இங்கு இருக்கிற எந்த ஒரு பிரதான அரசியல் கட்சிக்கோ,அந்த கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கோ,இதை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது...?

தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டம் போடும் போது,எதிர்க்கத்துணியாது
வேடிக்கை பார்ப்பான்......

பதவியை ருசித்து,அனுபவித்து விட்டு அவர்கள் தான் காரணம் என்று வெட்கமில்லாமல் மக்களிடம் வோட்டு அரசியல் செய்வான்....

இன்னொரு கட்சியோ,அவர்கள் இருவர் தான் காரணம் என்று கைவிரிப்பான்....

ஏண்டா மடையங்களா.......?

அவன் தான் சரியில்லை...என்று தானே
மக்களாகிய நாங்கள் உங்களை தெரிவு செய்தோம் என்று,என்றாவது உங்களுக்கு உரைத்து இருக்கிறதா...?

அப்படி ஒருவேளை உங்களுக்கு உரைத்து இருந்தால்....
வாய் பேசாது,செயலில் அல்லவா...காட்டியிருப்பீர்கள்.

பதவி ஆசை பிடித்த கையாலாகாதா
உங்களை தேர்ந்தெடுத்ததற்காக, நாங்கள் எல்லாம் கூனிக்குறுகியல்லவா நிற்கிறோம்.

இப்படி அரசியல்வாதிகள்(வியாதிகள்) வாழுகிற தேசம்.குற்றம் சொல்லியே.... நாட்டையே குட்டிச்சுவராக்க பிறந்தவர்கள்,ஒரு போதும் மாறப்போவதில்லை.

மாறாக சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ் அரசியல் வாதிகள் தாங்கள் வாழ்ந்த மண்ணுக்கும் , மக்களுக்கும் உண்மையாக இருந்தார்கள்.இப்போதும் இருக்கிறார்கள்.அதன் வெளிப்பாடாகவே,சிங்கப்பூர் நாடு தான் உயர்ந்த நிலை எட்ட காரணமாக இருந்த தமிழர்களையும்,அவர்களது கலாச்சாரத்தையும் கொண்டாடுகிறது...

ஆனால் இந்தியாவோ,அரசியல் வாதிகளின் அல்ப காரணங்களுக்காக
தமிழர்கள் நிம்மதியாக பொங்கல் விழா கொண்டாட முடியாமல் வருடம் தோறும்
திண்டாட வைக்கிறது.

இது மாறனும்....

அந்தந்த பகுதி வாழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இந்தியா என்பது பல கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் நாடு என்பதனை மனதில் கொண்டு சட்டம் இயற்ற வேண்டும்.

தவிர உணர்வை நசுக்கும் விதமாக செயல்படக்கூடாது என்பது தான் இங்கு வாழும் அனைத்து தமிழர்களின் எண்ணமும் வேண்டுகோளும்....

இல்லையேல் தேசீயம் என்கிற உணர்வே,தமிழர் மனதை விட்டு
மறைந்து போய்விடும் என்பதை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

சாதி,மதம் கடந்து ஒரு இனமாய்
ஜல்லிக்கட்டுடன் கொண்டாடும் பொங்கலை அனுமதிப்பீர்களா....?..
என்பது தான் கோடானுகோடி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

நிறைவேறுமா......?

நிறைவேற்றுவீர்களா....?

பைரவா-ரசிகர்களுக்கு விருந்து


இளையதளபதி விஜய் நடிப்பில் பொங்கல் திரையீடாக முன்னரே வெளிவந்திருக்கும் திரைப்படம்
தான் பைரவா.....

இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://viid.me/qobKDS

Tuesday, 10 January 2017

பெண் பிறப்பை மட்டுமே தீர்மானிக்கும் அதிசய மருந்து....


என்னடா.........இது என்ன புதுசா இருக்கு.

அது எப்படி சாத்தியம்......அதுவும் ஆண் இல்லாத பெண் சமுதாயமா.... வாய்ப்பே இல்லை என்கிறீர்களா....?

ஆனால்,அதனை நம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா
சார்ந்த மருந்தியல் விஞ்ஞானி
DR.B.S ஆலேக் (aulakh),இந்த பெண் பாலினத்தை தீர்மானிக்கும் கெமிக்கல் பார்முலா அடிப்படையிலான புதிய  அதிசய மருந்தினை கண்டுபிடித்து சாத்தியப்படுத்தியிருக்கிறார்

என்ன அவர் கண்டுபிடித்தது மனிதனில் இல்லை.மாறாக கால்நடையில்....

இந்த மருந்தை கால்நடைகளுக்கு கொடுத்தால் பெண் கன்றுகள் மட்டுமே ஈன்றும்..ஆண் காளைகள் ஈன்றாது.
(நாளைக்கே.....இது மனிதனில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அப்புறம் என்ன.... உலகம் முழுக்க
சக்தி மயமாகத்தான் இருக்கும்).

சரி...இந்த மருந்து என்ன செய்யுது....?

இந்த female sex fixer மருந்து கருக்கலைப்பு வேலையினை செய்வதில்லை.மாறாக பெண் பாலினத்தை தீர்மானிக்கும் xx செக்ஸ் குரோமோசோமை மட்டும் கரு உருவாக்கத்தில் பங்கு பெற செய்கிறது (மாறாக xy குரோமோசோமை கரு உருவாக்கத்தில் பங்கு பெறாமல் செய்துவிடுகிறது).

இந்த மருந்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவது இல்லை எனவும் சொல்கிறார்கள்.அது எந்தளவுக்கு சாத்தியம் இல்லை எனத் தெரியவில்லை.ஆனாலும் இதனை அங்கீகரிக்கும் விதமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா போன்ற உலக நாடுகள் பலவும் ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த மருந்தை இந்தியர் கண்டுபிடித்தாலும்,இந்தியாவில்
இந்த மருந்து உண்மையிலேயே அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்கிற விவரம் இல்லை.மேலும் இந்த மருந்து நம் நாட்டில் எந்த அளவில் பயன்பாட்டில் உள்ளது என்கிற தகவலும் இல்லை.

AulproFem,Heifermate,Pro-heifer என்று மூன்று விதமான பெயர்களில் உலகமெங்கும் நடைமுறையில் உள்ளதாக தகவல்.

இந்த மருந்து பயன்படுத்துவது
எளிதும் கூட.ஆமாங்க.... கால்நடைகளின் வாய் வழியாக இந்த மருந்து செலுத்தப்படுகிறது.

நீங்களே யோசித்து பாருங்கள்....இந்த மருந்தால்,மனித சமூகத்திற்கு  என்ன பயன்....?

பெண் பசுக்கள் மட்டும் அதிகம் பிறந்தால்.....

இயற்கையாகவே பால் உற்பத்தி மிகுதியாகும்.

இதன் மூலம் உலகில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் சிறுவயதிலே இறப்பது தவிர்க்கப்படும்.

உலகில் உள்ள பல நாடுகள் வறுமையில் இருந்து மீள்வதோடு,தனது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள இயலும் .

மேற்கூறிய ஊட்டச்சத்து குறைவால்
குழந்தைகள் இறப்பு,வறுமை போன்ற
விஷயங்கள் தான் இந்த மருந்தினை கண்டுபிடிக்க தனக்கு தூண்டுகோளாய் அமைந்ததாக இதனை கண்டுபிடித்த மருந்தியல் விஞ்ஞானி,DR.B.S ஆலேக் (aulakh), தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து மனித இனத்திற்கு அச்சுறுத்தல் என்று சொல்வோரும் உண்டு.

எது எப்படியோ........ மக்களுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் பயன்பட்டால் சந்தோசமே.

Monday, 9 January 2017

'உமாமி'-னு சொல்றாங்களே.... அப்படினா என்ன...?


உமாமி'-னு பேரு வேணும்னா புதுசா உங்களுக்கு தோணலாம்.
ஆனால்,உலகமே இன்று இதனை 'அசினோமோட்டோ' என்கிற வடிவில் சுவையூட்டியாக உணவில்
சேர்த்து ருசி பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த 'உமாமி' என்கிற வார்த்தை ஜப்பானிய மொழியில் இருந்து பெறப்பட்டது.காரணம்,இந்த
புதிய சுவையினை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே...

ஆமாம்...இந்த உமாமி சுவை தரும்
அசினோமோட்டோ எனும் மோனோ சோடியம் குளூட்டாமேட்டை(MSG),
முதன் முதலாக இக்குனே இக்கேடா எனும் ஜப்பானியர் 1907ம் ஆண்டு கடற்பாசியில்(seaweed) இருந்து பிரித்தெடுத்தாலும்,சமீப காலத்தில் தான் அமெரிக்கா போன்ற அனைத்து மேலை நாடுகளும்,தனிச்சுவையாக (உலகின் ஐந்தாம் சுவை) அங்கீகரித்துள்ளன.

உமாமி என்றால் ஆங்கிலத்தில் 'டெலிசியஸ் ' (delicious) என்றும்,தமிழில் 'நற்சுவை' என்றும் பொருள்படும்.

உலகிற்கு வேண்டும் என்றால்,
ஐந்தாம் சுவையாக இருக்கலாம்.
ஆனால்,தமிழனோ அறுசுவையை (இனிப்பு,புளிப்பு,கசப்பு,உவர்ப்பு,
துவர்ப்பு,கார்ப்பு) அன்றே உலகிற்கு அறிமுகப்படுத்திவிட்டான்.

ஆனால்,இன்றோ நாம் அனைவரும்
உலகமயமாக்கலின் விளைவாக இந்த அசினோமோட்டோவிற்கு அடிமையாகி கிடக்கிறோம்.

என்ன செய்றது..நம் நாவிற்கு புதுசு புதுசா ருசி கேட்குது...

இதன் சுவை ஒரு பக்கம் புதிதாக இருந்தாலும்,இதனால் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகள் ஏராளம்.ஆமாங்க...அசினோமோட்டோ
நம்மை மெல்ல மெல்லக்கொல்லும் வேதிப்பொருள் ஆகும்.
(ஒன்று தெரியுமா உங்களுக்கு.....?
அசினோமோட்டோ என்றால் MSG விற்பனை செய்யும் உரிமை பெற்ற ஜப்பானிய கம்பெனிகளில் ஒன்று)

எது எப்படியோ....இன்று உலகமே உமாமி சுவைக்கு அடிமை என்றால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

காரணம் ஒன்று தான்..அதன் தனிச்சுவை.

எச்சரிக்கை....சூப்பர்ஹவர் அன்லிமிடெட் இண்டர்நெட் ஆபர் துணையுடன் உங்கள் பணத்திற்கு வேட்டு வைக்கும் வோடபோன்...


நண்பர்களே....
புதிதாக வோடபோன் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் சூப்பர்ஹவர்
(superhour) அளவற்ற இண்டர்நெட் ஆபர் (unlimited 3g/4g internet offer)
பற்றிய உண்மை நிலை அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....

யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த தமிழக இளைஞர்...


தந்தை சமையலால்,யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த தமிழக இளைஞர் என்கிற தலைப்பில் ஒரு பதிவினை ஒன் இந்தியா தமிழ் வெளியிட்டுள்ளது.

முதலில் அந்த தமிழ் இளைஞர்
கோபிநாத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த பதிவின் நோக்கம்,முழுக்க முழுக்க யூடியூப் மூலம் சம்பாதிக்க நினைக்கும் தமிழக இளையோருக்கு இந்த செய்தி
மிகவும் ஊக்கமாக இருக்கும் என்கிற எண்ணம் தான்.

ஒருவேளை,இந்த பதிவு தொடர்பாக மாற்றுக்கருத்து இருப்பின் தயவுசெய்து தெரிவிக்கலாம்.

விருப்பம் இருந்தால்....
இந்த பதிவின் முழு விவரத்தினை அறிய பின்வரும் லிங்கினை க்ளிக் பண்ணுங்க.
http://tamil.goodreturns.in/news/2017/01/09/you-tube-sensation-from-tamil-nadu-helps-son-earn-lakhs-rupees-006760.html

நன்றி:ஒன் இந்தியா தமிழ்

Saturday, 7 January 2017

இந்த தகவல் உண்மையா....இல்ல பொய்யா... உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.


ஆசிரியர் பணி தொடர்பாக,
நம்மை வியப்பில் ஆழ்த்துகிற தகவல் குறிப்பிடங்கிய விளக்கப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த படச்செய்தி உண்மையில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
வேலை பார்க்காமல் ஊதியம் பெறுகிறார்களா.....? என்கிற
பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

அப்படி...என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள,கீழே உள்ள தகவல் அடங்கிய படத்தை கொஞ்சம் உற்று பாருங்கள்.


ஒருவேளை பார்வையாளர்களில் யாரேனும் ஆசிரியராக இருப்பின்,
இந்த படச்செய்தியின் உண்மைத் தன்மையினை மக்களுக்கு
தெளிவுபடுத்துங்கள்.

எது எப்படியோ.....
இத்தனை சலுகைகள் இருந்தாலும்,
தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பல ஆசிரியர்களின் (ஒரு சில ஆசிரியர்கள் தவிர்த்து) பங்கு
மக்களின் அறிவு வளர்வதில்
அதிகமாக  இருக்கிறது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இதில் உங்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என நான் நம்புகிறேன்.

எனக்கு இந்த படச்செய்தியின் உண்மைத்தன்மை தெரியவில்லை.

ஒருவேளை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.நானும் தெரிந்து கொள்கிறேன்,இது உண்மையா....
இல்லை பொய்யாவென்று.

உங்கள் மின்சார கட்டணம் எவ்வளவுன்னு தெரியனுமா...


நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவின் (யூனிட்) கட்டணத்தை  எளிதில் கணக்கிடலாம்.
கணக்கிடுவது எவ்வாறு எனத்தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
Link:1
http://viid.me/qidcm4
Link:2
https://youtu.be/bXwmMPKF7TM

நீங்கள் முற்பிறவியில் எங்கே, எப்படி இருந்தீங்கன்னு உங்களுக்கு தெரியணுமா...?


நமது முற்பிறவி மற்றும் எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ள,நமக்கு எப்பொழுதும் ஆர்வம் மிகுதியாகவே இருக்கும்.

அந்த ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக இந்த இணையதளம் அமைந்திருக்கிறது.இதில் உங்களது பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தின் தகவல்களை உள்ளீடு செய்தால் போதும்.

உங்களது முற்பிறவியில் எங்கு பிறந்தீர்கள் மற்றும் என்னவாக இருந்தீர்கள் போன்ற தகவல்கள் கிடைக்கின்றன.

இதில் கிடைக்கப்பெறும் தகவல்கள்
பற்றிய உண்மை நிலை யாருக்கும் தெரியாது.ஆனாலும்,இது நம்மை
உண்மையிலேயே ஆச்சர்யப்படுத்துகிறது.

இது போன்ற விஷயங்களில் உங்களுக்கு உண்மையில் நாட்டம்
இருந்தால் மட்டும் பின்வரும் லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://www.askastrologer.com/Pastlife.html

மாற்றுக்கருத்து இருப்பின் தயவு செய்து வெளிப்படுத்துங்கள்.

Friday, 6 January 2017

அல்சருக்கு தீர்வு தரும் அட்டகாசமான இயற்கை உணவு....


வயிற்றுப்புண் மற்றும் வயிற்றுபோக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் இயற்கை உணவை பற்றி விவரம் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
Link:1
http://viid.me/qioIps
Link:2
https://youtu.be/6pXi0DVj5PM

Thursday, 5 January 2017

அர்த்தமுள்ள வரிகள்-33


இவ்வுலகில்
தவறே செய்யாத
மனிதன் இல்லை...
ஆனாலும்
தான் செய்த தவறை ஒருபோதும் திருத்திக்கொள்ளாதவன்
மனிதனே இல்லை.

மக்களே உஷார்....உங்க காசு பத்திரம்.


உங்களது ஐந்து ரூபாயை மிச்சப்படுத்த ஆன்லைனில் காஸ் சிலிண்டர் புக் பண்ணும் ஆசை இருக்கா....?

ஒருவேளை அப்படி இருந்தா...இந்த பதிவை கொஞ்சம் வாசிங்க.அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க....புக் பண்ணலாமா அல்லது வேண்டாமா என்று....?

அதானே... இவனுங்க ஆன்லைனில் புக் செய்ய சொல்லும் போதே யோசிச்சேன், இப்படியெல்லாம் ஏதாவது தினுசா யோசிப்பானுங்கனு..

விஷயம் இது தான்....

நாம் ஆன்லைனில் பணம் செலுத்துகையில் ஒரு பக்கம் ஐந்து ரூபாயை கழித்துவிட்டு,மறுபக்கம் எட்டு ரூபாயை வங்கி தொகையாக எடுத்துக்கொள்கிறார்கள்.

நீங்களே சொல்லுங்கள்,இதுதான் சலுகையா....?

மேலும் உங்களுக்கு புரியும்படியாக,
சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஆதாரப்பூர்வ புகைப்படத்தை பகிர்கிறேன்,கீழே பாருங்கள்...இவங்களுது ஒவ்வொரு அறிவிப்பும் நமக்கு நிம்மதியை தரும் என நினைத்தால்...பயமும்,பீதியும் தான் வருகிறது.

ஒரு பக்கம் கொடுக்குற மாறி கொடுத்துவிட்டு,அடுத்த நிமிடமே பிடுங்கி கொள்கிறார்கள்.

என்ன செய்ய....அவங்க
Given-take பாலிசி அப்படி.எல்லாம் டிஜிட்டல் யுகம்.

பணமில்லா பரிவர்த்தனைன்னு சொல்லிப்புட்டு இப்படி நம்
பணத்தையெல்லாம் லவட்டிருவானுக போல...

இது போன்ற சம்பவங்கள் நிகழும் போதெல்லாம்,''ரூம் போட்டுத்தான் யோசிப்பாய்ங்களோ''என்கிற வடிவேலுவின் நகைச்சுவை நம் கண்முன்னே நிழலாடுகிறது.

நல்ல வேளை நான் நேற்று முயற்சி செய்து,எதோ மனமில்லாமல் நாளைக்கு புக் பண்ணலாம்னு விட்டுவிட்டேன்.
இன்னைக்கு தான் தெரியுது
இவனுங்க திருட்டுத்தனம்.
எப்படியோ நான் தப்புச்சுட்டேன்..
நீங்க மாட்டிக்கிட்டு முழிக்காதீங்க.
(முழிக்கும் போதே முழியை தோண்டிருவாய்ங்க)

மக்களே உஷார்......உங்க காசு பத்திரம்.

இந்த பதிவு தொடர்பா உங்களுக்கு
ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால், தயவுசெய்து தெரிவியுங்கள்.

மூலத்தில் இருந்து விடுதலை அடைய உதவும் முத்தாய்ப்பான இயற்கை மருந்து...


மூலத்தினால் துன்பப்படுவோர் நம்மில் ஏராளம்.அத்தகைய துன்பத்தில் இருந்து விடுதலை பெற நம் வீட்டிலேயே மருந்து இயற்கையாய் இருக்கிறது.
நாம் தான் ஏனோ அதனை மருந்தாக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம்.அந்த இயற்கை உணவாகிய மருந்தை பற்றி முழு விவரம் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
Link:1
http://viid.me/quZuaU
Link:2
https://youtu.be/_iEtg4u5Gdw

Wednesday, 4 January 2017

இருமலுக்கு ஒரு அட்டகாசமான இயற்கை மருந்து....


குளிர்காலம் ஆரம்பித்ததில் இருந்து சளி,இருமல் என நம்மை சங்கடப்படுத்தும் உடல் தொடர்புடைய தொந்தரவுகள் ஏராளம்.அவற்றில் தொடர் இருமல் & அதற்கு தீர்வு காண உதவும் அட்டகாசமான இயற்கை மருந்து பற்றி விவரம் அறிய இந்த வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
Link:1
http://viid.me/quEc47
Link:2
https://youtu.be/HrE6k3G1-Sw

Tuesday, 3 January 2017

விபச்சாரத்தொழிலுக்கு வரி வசூலிக்கும் தேசம்....


என்னடா........இது....அதுவும்
போயும்போயி விபச்சாரத்திற்கு
வரி வசூல் செய்கிறார்களா.....?

உங்களைப்போல எனக்கும்,இந்த செய்தி ஆச்சர்யத்தை தந்தது.

சரி வாங்க.....அது எந்த நாடு
என்பதை பற்றி கொஞ்சம்
விரிவாக பார்ப்போம்.....

இந்தியாவை ஒருகாலத்தில் அடிமைப்படுத்திய அந்நிய தேசம்...

துலிப் மலர்களுக்கு பெயர் போன தேசம்...

உலகிலேயே பூக்களை விற்கும் மிகப்பெரிய சந்தையினை
கொண்ட நாடு......

சுற்றுலா மூலம் அதிக வருமானம் ஈட்டும் நாடு....

அதிகளவில் கால்வாய்களை கொண்ட நாடு.....

உலகளவில் அதிகமாக சீஸ் எனும் பாலாடைக்கட்டி ஏற்றுமதி செய்யும்
நாடு (கௌடா,ஈடம் சீஸ் உலகப்புகழ் பெற்றவை).....

காற்றாலைகளுக்கு புகழ் பெற்ற
நாடு....

காபி ஷாப் அதிகமுள்ள தேசம்....

கார்களை விட இரண்டு மடங்கு அதிகமாக மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களை தங்கள் பயணத்திற்கு பயன்படுத்தும் மக்கள் கொண்ட நாடு....

இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேல் விபச்சாரத்திற்கும் புகழ் பெற்றது
இந்த தேசம்...

ஆமாங்க.....நான் சொல்வது டச்,ஹாலந்து போன்ற பல பெயர்களை கொண்ட அழகிய மலர்கள் பூக்கும்
நெதர்லாந்து நாடு தான்...


இது நீண்டகாலமாக இருந்தாலும், விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரித்துள்ளது.

இந்த விபச்சாரத்தொழில் செய்வோர்க்கு இந்த நாட்டில் மிகவும் புகழ்பெற்றது ஆம்ஸ்டெர்டாம் ரெட் லைட் டிஸ்ட்ரிக்ட்(RLD).எப்படி என்றால்...
நம் நாட்டில் மும்பையில் உள்ள சிவப்புவிளக்கு பகுதியான
காமத்திபுரா போன்றது.

ரோட்டர்டாம்(Rotterdam) செக்ஸ் கிளப் மற்றும் தனியார் வீடுகள் மூலம் செய்யும் விபச்சாரத்தொழிலுக்கு பெயர்பெற்றது

ஆம்ஸ்டெர்டாம்,டீ வாலேன் பகுதி
விண்டோ(window) வகை விபச்சாரத்திற்கு பெயர் பெற்றது.

அதாவது மாலை நேரங்களில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கண்ணாடி தடுப்புக்குள் விபசாரத்தொழில் செய்வோர் காட்சி தருவர்.

விரும்புவர்கள் அதாவது வாடிக்கையாளர்கள்,கதவை தட்டி பேரம் பேசி உல்லாசத்திற்கு அழகிகளை அழைத்து செல்வார்களாம்.

பதினைந்து நிமிட உல்லாசத்திற்கு
ஐம்பது யூரோ(50 euro) வசூலிப்பார்களாம்.

சுற்றுலா செல்வோர் மற்றும் அந்த நாட்டை சேர்ந்தவர்களே இவர்களை நாடி செல்கிறார்களாம்.

தற்சமயம் இங்கு விபசாரம் செய்யும் பெரும்பாலோனோர்,இந்த நாட்டை சார்ந்தோர் அல்லாது,வெளிநாட்டவராக இருக்கிறார்களாம் (அதிலும் குறிப்பாக தாய்லாந்து,தென் அமெரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய  நாடுகளை சார்ந்த இளம் யுவதிகள் மற்றும் திருமணமாகி கைவிடப்பட்ட பெண்கள்).

விபச்சாரத்தை தொழிலாக செய்பவர்களில்,90% பெண்களும்,
5% ஆண்களும்,5% மாற்றுப் பாலினத்தவரும் உள்ளனராம்.

இந்த நாட்டு சட்டதிட்டத்தின் படி, விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலை செய்வோர் 18 வயதை கடந்தவராக இருத்தல் அவசியம்.

வாடிக்கையாளர் குறைந்தபட்சம் 16 வயதினை கடந்திருத்தல் மிகவும் அவசியம்.இல்லையேல் கடும்
தண்டனைக்குரிய குற்றமாம்.

இந்த தொழில் செய்வோர்க்கு என்று சங்கம் உண்டு.

இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை இலவசம்.அதாவது எப்போது விரும்பினாலும் தங்கள் உடம்பை
காசு செலவில்லாமல் பரிசோதித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனாலும்,இவர்களது எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வங்கிகள் கடன் மற்றும் இன்சூரன்ஸ் தர முன்வருவதில்லையாம்.இவர்கள் வங்கி கணக்கு துவங்குவது மிகவும் கடினமாம் (பெரும்பாலும் வாடிக்கையாளர்களிடம் பணத்தை தாள் வடிவிலே பெற்றுக் கொள்கிறார்களாம்...என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்)

இந்த விபச்சாரத்தொழிலை பகுதிநேர தொழிலாகவும் (அதாவது ஒரு சில மாணவிகள்),முழுநேரத்தொழிலாகவும் (வறுமையின் பிடியில் உள்ள தன்னையும்,தன் குடும்பத்தையும் காப்பாற்ற போராடும் பெண்கள்) செய்கின்றனராம்...

ஆனாலும் அந்த பகுதி அரசு நிர்வாகம் இந்த தொழிலை செய்யும் தனி நபர்களிடமும் மற்றும்
பெரிய முதலாளிகளிடமும் (செக்ஸ் கிளப் மற்றும் விடுதி மூலம் விபச்சாரத்தொழில் நடத்துவோர் ) இருந்து வரி வசூல் செய்கிறது.

ஆகவே,இந்த விபச்சாரத்தொழில் செய்யும் நபர்களுக்கு,இந்த நாடு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானதே (மக்களோ, போலீஸோ ஒரு போதும் அடிக்கடி
காசு கேட்டு துன்புறுத்துவதில்லை).

ஆள் கடத்தல் அவ்வப்போது அரங்கேறினாலும்,இந்த விபச்சாரத்தொழிலால் அந்த நாட்டிற்கு பெரியளவில் துன்பம் இல்லை,மாறாக வருமானம் தான்.

ஒருபக்கம் சுற்றுலாவை மேம்படுத்த இது போன்ற தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்கி இருக்கிறார்களோ என்னவோ....? யார் அறிவார்....?

இச்சை கொண்ட பணம் படைத்த
மனிதர்களுக்கு இது போன்ற
நாடுகள் சொர்க்கபுரிகள் தான்..

உலகில் இப்படியும் ஒரு தேசம்...