Saturday, 25 February 2017

எச்சரிக்கை...!!!!..நீங்கள் குடிப்பது உண்மையில் பாலா...?


நண்பர்களே.....இன்று உலகம் முழுக்க மனித ஊட்டச்சத்து தேவைக்காக பாலின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது.

அத்தகைய தேவையினை தவறான வழியில் தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் பணம் திண்ணும் ஆசாமிகள் உலகம் முழுக்க உண்டு.

அத்தகைய ஆசாமிகளால் உருவானதே மனிதனை மெல்லக்கொல்லும் இந்த
செயற்கை கலப்பட பால்.

ஆமாங்க....நாம் பால் என்கிற பெயரில் அன்றாடம் குடிப்பது உண்மையில் இயற்கையான பால் இல்லை.
மாறாக செயற்கையான கெமிக்கல் நிறைந்தவை.

இதை சாப்பிட்டால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைக்கிறதோ, இல்லையோ.....உடம்பை பாழ் படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி குறைவை உருவாக்கும் என்பது என்னவோ நிச்சயம்.

சரி.....அப்படி என்ன கெமிக்கல் சேர்க்கிறாங்கனு பார்ப்போம்...

borax
boric acid
benzoic acid
salicylic acid
ammonium sulphate
Salt
Glucose
Starch
Hydrogen peroxide
Sodium carbonate
Sodium bicarbonate
Sodium hydroxide

மேலே உள்ள கெமிக்கல் யாவும்,பால் வெண்மைக்காகவும் ,சுவைக்காகவும், கெட்டித்தன்மைக்காவும், கொழுப்பிற்காகவும் என பல காரணங்களுக்காக பாலின் உண்மைத்தன்மையினை நிரூபிக்க வேண்டி செயற்கையாக சேர்க்கிறார்கள்.

இத்தகைய ரசாயனங்கள் யாவும் உடலுக்கு மோசமான தீங்கினை விளைவிப்பவை என்பதை மறக்காதீங்க...

காலம் மாற மாற,நாமும் போலியான கலப்பட பால் தான் உண்மையான பால் என நம்பி அறியாமையினால் குடித்து வருகிறோம்.

இனியாவது இயற்கையான பாலினை தேடிப்பிடித்தாவது குடிக்க முயற்சி செய்வோம்.

என்ன கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும்.கொஞ்சம் யோசியுங்கள்...?நம் உடம்பை விடவா விலை முக்கியம்.

சரி காசு இல்லையா...? அத்தகைய செயற்கை கலப்பட பாலை குடித்து உடம்பை பாழாக்குவதற்கு பதில்,
குடிக்காமல் இருப்பது உத்தமம்.

Friday, 24 February 2017

எமன்-அரசியல் சடுகுடு


நான் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும்
விஜய் ஆண்டனி மற்றும் ஜீவா ஷங்கர் இணைந்து தந்திருக்கக்கூடிய அரசியல் சார்ந்த திரைப்படம் தான் இந்த எமன்.

இந்த திரைப்படம் பற்றிய விமர்சனத்திற்கு கீழ்கண்ட வீடியோ லிங்கினை அழுத்துங்க.....
http://viid.me/qcC2BQ

Thursday, 23 February 2017

உங்கள் பிளாக் மூலம் சம்பாதிக்கலாம் வாங்க....?


அன்பர்களே... நீங்கள் தொடர்ச்சியாக ப்ளாகில் கட்டுரை எழுதுபவரா...?

அப்ப நீங்களும் எளிதில் சம்பாதிக்கலாம்.

அது எப்படி....?....என தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
http://viid.me/qcAYUA

Wednesday, 22 February 2017

மருந்துகளை தூக்கியெறிங்க....!....தண்ணீர் போதும்.


மனிதனுக்கு வரும் நோய்கள் எண்ணிலடங்காதவை.....
அத்தகைய நோய்களை குணப்படுத்த எங்கெங்கோ மருத்துவமனை தேடி அலைந்து ஓடிக்கொண்டிருக்கிறான்.

ஆனால்,கைவசமாக இருக்கிற
எளிய மருத்துவ முறைகளை மேற்கொண்டாலே போதும்....
நம் அலைச்சலையும்,காசையும்
மிச்சப்படுத்தலாம்...என்பதை ஏனோ மறந்துவிடுகிறான்.

அத்தகைய எளிமையான மருத்துவ முறைகளில் ஒன்று தான் இந்த தண்ணீர் மருத்துவம்.

இந்த மருத்துவ முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
http://viid.me/qcfs40

Tuesday, 21 February 2017

இனி எல்லாம் துட்டு தான்.....


இலவசங்களால் இதுநாள் வரை மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஜியோ, தற்போது வருமானத்தை ஈட்ட முடிவு செய்துள்ளதன் முதல் முயற்சியாக, அடுத்த மாதத்தில் இருந்து இலவசமாக வழங்கிய இணையதள டேட்டாவிற்கு டாட்டா காட்ட முடிவு செய்துள்ளது.

ஆமாங்க....இனி நீங்க ஜியோ இன்டர்நெட் இலவசமாக பயன்படுத்த முடியாது. ஆனாலும் குறைந்த கட்டணத்தில் நீங்க இன்டர்நெட்
சேவையினை பெற வகை செய்யும் பிரைம்(prime) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பிளான் பற்றி விரிவான தகவல் பெற பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qx9TzT

நன்றியுள்ள நம்மூர் நாய்....


நாய் என்பது மனித இனத்தோடு பின்னிப்பிணைந்து கிடக்கும் நன்றியுள்ள செல்லப்பிராணி என்றால் மிகையில்லை.

நாயை...நாய் என்று சொன்னால், நம்மை கடிந்து கொள்ளும் பல பேர் உண்டு.நாயை தன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே பாவிக்கிறார்கள்.
மரியாதையோடு பெயர் வைத்து கூப்பிடுகிறார்கள்.

அந்தளவிற்கு சக மனிதனுக்கு மதிப்பு கொடுக்காது,தன் நாய்க்கு மதிப்பு கொடுக்கும் மனிதர்களை நான்
கண் கூட கண்டிருக்கிறேன்.

நான் கூட சிறுவயதில் நாய்க்குட்டியை தூக்கித் திரிந்த காலங்கள் உண்டு. என்ன....நாயைக் கண்டால் இன்றும்
எனக்கு எப்போதும் இருக்கிற ஒரே பயம்...அது கடிக்குமே....என்பது தான்.

காரணம்.......நாயிடம் நானும் கடி வாங்கியிருக்கேன்.ஆனாலும் என்ன...
தொப்புள் சுத்தி ஊசி போடும் அளவிற்கு மோசமாக சென்றதில்லை.

சரி.... நான் விசயத்திற்கு வருகிறேன்.

நாட்டு நாய் பற்றிய சில உண்மைத்தகவல்கள் நான் படித்தது, உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக இங்கு பதிவிடுகிறேன்.


நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும்.

பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன.....என்கிறார்,நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர்

மேலும் அவர் நாட்டு நாய்கள் பற்றி கூறிய தகவல்கள்....

எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.


தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன.

உடல் முழுக்க செவலையும் வாய்
பகுதி கருப்பாகவும் இருக்கும்,கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது.
இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.

கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும்.

பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன.

ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால்,நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெரு நாய்களாக்கி விட்டோம்....


நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான்.

முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது,பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது.

ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், *நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை.*

வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.


இப்போது தெரு நாய்களாக்கப்பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.

அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு.

வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.

இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும்.
தொற்று நோய்கள் பரவும்.
குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும்.ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல,நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.

கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி
நாய் அமைக்கப்பட்டு உள்ளது.


பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.

நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.

தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும்.நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.


ஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.

எனவேதான் அறிவுள்ள அந்த
நாய்கள் சவாசனம் போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்.


எது எப்படியோ...
நாய் நன்றியுள்ளது தான்.

இந்த பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்களை தாராளமாக தெரிவிக்கலாம்.

நன்றி.

Monday, 20 February 2017

உஷார்.....உங்க குழந்தை பத்திரம்.


இன்றைய காலங்களில்
குழந்தைகள் கடத்தப்படுவது
என்பது சர்வசாதாரணமான
அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் "கலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல்" என்கிற தலைப்பில் பகிரப்பட்டு வரும் அதிரவைக்கும் தகவல்களை இந்த பதிவின் மூலம்  உங்களுடன் நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

குழந்தைக் கடத்தல்... எங்கோ, யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘திருச்சியில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது, திருச்சியளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல.உண்மையில்,
அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க்.

சில வருடங்களுக்கு முன் குழந்தைக் கடத்தல் பின்னணியை மனம் அதிரச் சொன்ன ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் நினைவிருக்கலாம்.

சில வாரங்களுக்கு முன், நடிகர் பார்த்திபன் சென்னை காவல் ஆணையரிடம் குழந்தைக் கடத்தல் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்; குழந்தைகள் கடத்தலுக்கு எதிராக, ‘அபயம்’ அமைப்பு உருவானது.
தவிர, ஏராளமான தன்னார்வ அமைப்புகள் இந்தப் பிரச்னைக்காக குரல் கொடுத்து வருகின்றன. காரணம், அந்தளவுக்குப் பரவலாக உங்கள் ஊர்களிலும், தெருக்களிலும் ஊடுருவியுள்ளது இந்த நெட்வொர்க். அதன் மாயக்கரங்களில் எந்தக் குழந்தையும் சிக்கலாம் என்பதே நிலை... உங்கள் குழந்தை உட்பட.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.இதில் 300-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள். தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும்  50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

குழந்தைகளை யார் கடத்துகிறார்கள்... எப்படிக் கடத்துகிறார்கள்... எதற்காக கடத்துகிறார்கள்? அதிர்ச்சியளிக்கும் பின்னணியை எடுத்துரைத்தார், குழந்தைகள் உரிமைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் இயக்குநர் ஆர்.தேவநேயன்.

எந்த வீட்டுக் குழந்தையும் கடத்தப்படலாம்........

‘‘குழந்தைகள் கடத்தல் இன்றைய சூழலில் மிக முக்கியமான பிரச்னையாக, பரவலான குற்றமாக மாறிவிட்டது என்பது சுடும் நிஜம். பிளாட்ஃபாரங்களில் வசிக்கும் குடும்பத்துப் பிள்ளைகளும், அரசு மருத்துவ மனைகளில் பிரசவிக்கப்படும் குழந்தைகளும்தான் அதிகமாகக் கடத்தப்படுகிறார்கள்.
தவிர, நடுத்தர வர்க்கத்தில் இருந்து தொழிலதிபர் வீட்டுக் குழந்தைகள் வரை யாரும் கடத்தப்படலாம் என்பதும் நிதர்சனம்.

எப்படிக் கடத்தப்படுகிறார்கள்....?

பிளாட்ஃபாரக் குழந்தைகள் பெரும்பாலும் இரவு நேரத்தில், பெற்றோர் அயர்ந்து தூங்கும்போது லாவகமாகக் கடத்தப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் கடத்தப்படுவதில் அங்கு பணியாற்றும் செவிலியர்களில் இருந்து கடைநிலை ஊழியர்கள்வரை பலர் உடந்தையாக இருக்கிறார்கள்.

நடுத்தரக் குடும்பத்தினர், தொழிலதிபர்கள் வீட்டுக் குழந்தையைக் கடத்தத் திட்டமிட்டுவிட்டால்... அந்தக் கும்பல் அக்குழந்தையின் நடமாட்டங்களை பல மாதங்களாகக் கண்காணிக்கிறது.
அது எப்போது பள்ளிக்குச் செல்கிறது, திரும்புகிறது, அழைத்துச் செல்பவர் யார், குழந்தை எப்போது தனியாக இருக்கும், விடுமுறை நாட்களில் எங்கு விளையாடச் செல்லும் என்று தெரிந்துகொண்டு, ஒருவரை இயல்பாக அந்தக் குழந்தையுடன் பழகவிட்டு, தகுந்த நேரத்தில் கடத்திவிடுகிறார்கள்.

ஒரு குழந்தை கடத்தப்பட்ட செய்தி வருகிறதே தவிர, அது மீட்கப்பட்டதா என்ற அப்டேட்கள் பெரும்பாலும் வருவதில்லை.

கடத்தப்படும் 100 குழந்தைகளில், 10 - 20 குழந்தைகள்தான் நல்ல நிலையிலோ, சேதாரங்களுடனோ மீட்கப் படுகின்றனர்.மற்ற குழந்தைகளின் நிலை அறியப்படாதது.

கடத்தல் காரர்களை அடையாளம் கண்டு விடுவதால், கடத்தப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்பட்டுவிடுகின்றனர்.

எதற்காகக் கடத்துகிறார்கள் குழந்தைகளை.....?

சட்டத்துக்குப் புறம்பான முறையில் தத்தெடுத்தல், பிச்சை எடுத்தல், குழந்தை தொழி லாளர்கள், பாலியல் குற்றங்கள், உடலுறுப்பு திருட்டு, நரபலி என பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகளை, தங்கள் பிள்ளை கள் போல மடியில் கட்டிக்கொண்டு பிச்சை எடுக்கிறது ஒரு கும்பல். ஏராளமான சிக்னல்களில் இந்தக் கும்பல் பெருகிக்கொண்டே வருகிறது. அந்தக் குழந்தைகளுக்கு போதையேற்றும் மருந்தைக் கொடுத்து, எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருப்பார்கள். மயங்கிய குழந்தையைச் சுமந்தபடி, கையேந்தி, பொதுமக்களின் பரிதாபத்தை தூண்டி, பிச்சையெடுப்பது இந்த கும்பலின் தொழில். ஒரு வாரம் சோழிங்கநல்லூர், அடுத்த வாரம் தாம்பரம் என இடம் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு தொடர்ச்சியான நெட்வொர்க்.

பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சட்டத்துக்கு புறம்பான தத்தெடுத்தலுக்காகவும் கடத்தப் படுகின்றனர். குறிப்பாக, இந்தத் தேவையில் ஆண் குழந்தைகளுக்குப் பெரிய டிமாண்ட் இருக்கிறது.

கடத்தப்பட்ட 5 - 10 வயதுடைய குழந்தைகளை மாநில எல்லைகளில் சட்ட விரோத செயல்பாடுகளில் பயன்படுத்துகின்றனர். அதாவது, மாநில எல்லைகளில் உள்ள சோதனைகளில் இருந்து தப்பிக்க, கடத்தப்பட்ட குழந்தைகளின் உடைகளுக்குள் போதை பொருட்களை வைத்து கடத்து கின்றனர். இதே வயதுடைய குழந்தைகளைக் கடத்தி, கொத்தடிமைகளாகவும் பயன்படுத்துகின்றனர்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கடத்தி நரபலி போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். மற்ற கடத்தல்களைக் காட்டிலும், இதற்காக கடத்தப்படுவது குறைவுதான்.

 10 - 16 வயதுடைய சிறுமிகளை மையப்படுத்திய கடத்தல்கள் பெரும்பாலும், பாலியல் தொழிலுக்காகத் தான்.

இந்தச் சிறுமிகளை மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளில் செயல்படும் பாலியல் தொழிலுக்கும், ஆபாச படங்களை எடுக்கவும் பயன்படுத்து கிறார்கள்.

வயது வரம்பின்றி உடலுறுப்பு திருட்டுக்காகவும் பெருமளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

தொழிலதிபர்களின் குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்கும் கும்பலும் உண்டு. சென்னை `ஈசிஆர்'(ECR) `ஓஎம்ஆர்'(OMR) மற்றும் தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஏராளமான ரியல் எஸ்டேட் பிரச்னைகளுக்காகவும், குழந்தைகளைக் கடத்தி காரியத்தை சாதிக்கும் கும்பல்கள் ஏராளமாகச் செயல்படுகின்றன.

குழந்தைக் கடத்தல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகளை சிறுவயதிலேயே கடத்திவிடுவதால், அவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அடையாளம் காண முடியாமலும், தனக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமலும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல வாழப் பழகி விடுகின்றனர்’’ என்கிறார் தேவநேயன்.

குழந்தை கடத்தலில் தமிழகம்.....

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, கொல்கத்தா, பீகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கும், தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் போன்ற நகரங்களுக்கும் குழந்தைகள் அதிகமாக கடத்தப்படுகின்றனர்.

குழந்தைகள் கடத்தலில் மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த குழந்தை கடத்தல்கள்:

2014 - 441
2015 - 656
2016 (முதல் மூன்று மாதங்களில்) - 58

கடத்தல் டார்கெட் இடங்கள்......

ஒரு நாளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் அரசு மருத்துவமனைகளில்தான் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

தவிர, ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில், கடத்தல் கும்பல் டீமாக செயல்பட்டு பிள்ளைகளைக் கடத்துகிறார்கள்.

தற்போது கோடைவாசஸ்தலங்கள் தான் அவர்களின் டார்கெட் இடங்கள். இந்தச் சமயத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் தங்களின் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

கடத்தல் நெட்வொர்க்.......?

கடத்தப்பட்ட ஒரு குழந்தை, எப்படி கைமாற்றப்படுகிறது என்பதை, குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டபோது, இதயத் துடிப்பு அதிகரித்தது.

‘‘கடத்தப்பட்ட ஒரு குழந்தையானது, ஒரு மணி நேரத்துக்குள் அடுத்த குரூப்புக்கு கைமாற்றப்படும். அடுத்து சில மணி நேரங்களுக்குள் மாநில எல்லையைக் கடந்து சென்றுவிடும். அடுத்தடுத்து பல குரூப்களுக்கு கைமாற்றப்பட்டு, பல மணி நேரங்களில் மெயின் கும்பலிடம் ஒப்படைக்கப்படும். அந்த மெயின் கும்பல், பெரும்பாலும் மும்பை, கொல்கத்தா நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த கடத்தல் பின்னணியில், பல பெரிய வெளிநாட்டு நெட்வொர்க் செயல்படுகின்றன.

ஒவ்வொரு ஆண், பெண் குழந்தையும் அவரவர் வயது, அழகு, உடல் அமைப்பைப் பொறுத்து ரேட் ஃபிக்ஸ் செய்யப்படுகிறார்கள். ஆயிரத்தில் இருந்து பல லட்சம்வரை இந்த ரேட் மாறுபடும். தொழிலதிபர்களின் குழந்தைகளுக்கு, கோடியில் ரேட் பேரம் நடக்கும். கடத்தப்பட்ட எந்த ஒரு குழந்தையையும், ஓராண்டுக்கு மேல் ஒரு இடத்தில் வைத்திருக்க மாட்டார்கள். வெளிநாடுகளுக்குக் குழந்தைகளை கடத்திவிட்டால், 80 - 90% மீட்பது கடினம். இந்த குழந்தைகள் கடத்தல் கும்பலைப் பிடிப்பது அரிதான செயல். அப்படியே ஒரு குரூப் போலீஸிடம் சிக்கினாலும், அடுத்த குரூப்பை காட்டிக்கொடுக்கவே மாட்டார்கள். அதனால்தான் இதுவரை எந்த நெட்வொர்க்கும் மாட்டவில்லை’’ என்கிறார் நண்பர்.

இந்த பதிவின் நோக்கம் குழந்தை கடத்தல் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவது தவிர வேறொன்றுமில்லை.

இந்த பதிவு தொடர்பாக உங்களுக்கு மாற்றுக்கருத்து இருப்பின் அதனை இங்கு பகிரலாம்.

நன்றி

Sunday, 19 February 2017

மூன்று கோடிக்கு ஏலம் போன தமிழகத்தின் குக்கிராம கிரிக்கெட் வீரன்


10வது vivo ஐ.பி.எல் T20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை பல்வேறு இந்திய நகரங்களில் நடக்கிறது.

இதையொட்டி ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி,தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் தமிழகத்தின்,சேலத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான T.நடராஜனை எடுக்க பல்வேறு அணிகளும் போட்டி போட்டன.

அதிலும் குறிப்பாக புனே, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணிகள் முட்டி மோதின.

இறுதியில் மூன்று கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது  KXI பஞ்சாப் அணி.

இவர் சமீபத்திய தமிழ்நாடு ப்ரீமியர்
லீக் கிரிக்கெட்டில்,ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் நடராஜன்.....

குழந்தை பிரசவிக்கும் ஆண்....?அது எப்படி....ஆண்,
குழந்தை பிரசவிக்க முடியும்...?...
என்று நீங்கள் கேட்பது எனக்கு
புரிகிறது.

இது மனித இனத்தில் இல்லை.
மாறாக கடலில் வாழும் கடல் குதிரை
(sea horse) இனத்தில் இது இயல்பாக நடக்கிறது.

இங்கு பெண் கடல்குதிரை தன்னிடம் உள்ள சுமார் 1500க்கும் அதிகமான முட்டைகளை,ஆண் கடல்குதிரையின் கருப்பை (special pouch) போன்ற அமைப்பில் போட்டு சென்று விடுமாம்.
(இது எப்படி நடக்கிறது என்பது தான் அதிசயம்)

அப்புறம் என்ன...?
ஆண் கடல்குதிரை முட்டைகளுக்கு ஊட்டம் கொடுத்து,சுமார் 45 நாள்களில் சிறு குழந்தைகளாக பிரசவிக்குமாம்...

உண்மையில் ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்த கடல்குதிரை இனத்தில் எப்படி இணைவு ஏற்படுகிறது....என்பதனை கண்டறிவதில் இன்னும் குழப்பம் ஓய்ந்தபாடில்லை.

நல்ல வேளை மனிதனில் ஆண் தப்பித்தான்.....இல்லையெனில் பெண்கள் படும் வேதனையினை அனுபவித்தாகணுமே....

Friday, 17 February 2017

காஸி-கடலுக்குள் யுத்தம்ராணா,அதுல் குல்கர்னி,
கேகே மேனன்,ஓம்புரி,டாப்ஸி
நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தோ -பாகிஸ்தான் போர் சம்பந்தமான த்ரில்லர் படம் தான் இந்த காஸி.
இந்த திரைப்படத்தின் விமர்சனத்தினை காண பின்வரும் வீடியோ கிளிக் பண்ணுங்க...
http://viid.me/qxjVKv

ரம்-அதரப்பழசு


புதுமுக இயக்குனர் சாய்பரத் இயக்கத்தில் விவேக்,நரேன்,ரிஷிகேஷ், சஞ்சிதா மற்றும் மியா ஜார்ஜ் நடிப்பில் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்
தான் ரம்.
இந்த திரைப்பட விமர்சனத்தை அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://viid.me/qxjbql

Thursday, 16 February 2017

நீங்கள் வீடுகளில் பயன்படுத்தும் காஸ் சிலிண்டரின் ஆயுள் பற்றி தெரியணுமா....?


இன்று காஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளை,விரல் விட்டு எண்ணி விடலாம்.அந்தளவுக்கு அனைவரது வீடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

அத்தகைய காஸ் சிலிண்டர் ஆயுள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்பது
அவசியம் கூட....அதற்கு ஒரே காரணம்...நம் பாதுகாப்பே.

காஸ் சிலிண்டர் ஆயுள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் எளிது.

சரி அது எப்படி.....?...என்பது பற்றிய தெளிவு பெற பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://viid.me/qxpZHL

பழங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரில் புதைந்திருக்கும் ரகசியங்கள்....


இன்றைய காலங்களில் நாம் வாங்கி சாப்பிடும் பழங்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை பார்த்திருப்போம்.

நாம் உண்மையில் என்ன நினைப்போம்....?
அந்த பொருளை விற்பனை செய்பவர் பெயர் விளம்பர ஸ்டிக்கர் என நினைத்து அதனை கிழித்து விட்டு,அந்த பழத்தையோ அல்லது காய்கறியையோ சாப்பிடுவோம்.

ஆனால் இனி சாப்பிடுவதற்கு முன் எண்கள் ஏதும் குறிப்பிட்டுள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா....?...என கூர்ந்து கவனியுங்கள்.

ஒருவேளை அவ்வாறு  எண்கள்
ஏதும் குறிப்பிட்டு ஸ்டிக்கர்
ஒட்டப்பட்டு இருந்தால்...... குறிப்பிட்டுள்ள அந்த பழம் அல்லது காய்கறி பற்றிய ரகசியத்தை,அந்த எண்கள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இயலும்.

அது எப்படி....?..என அறிய
கீழ்காணும் வீடியோ லிங்கினை
க்ளிக் பண்ணுங்க....
http://viid.me/qxqANt

Wednesday, 15 February 2017

உங்கள் மொபைலில் ஜல்லிக்கட்டு விளையாடலாம் வாங்க....


நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர் எனில்,உங்கள் மொபைலில் ஜல்லிக்கட்டு
விளையாட்டு விளையாட முடியும்.

ஆமாங்க...
ஜல்லிக்கட்டு ரன் என்கிற புதிய கேம் ஆப் கூகுள் பிலே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.உங்களுக்கு இந்த கேம் ஆப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளணுமா...?...பின்வரும்
வீடியோ லிங்கினை க்ளிக்
பண்ணுங்க...
http://viid.me/qzLw8q

Monday, 13 February 2017

நீண்ட நாள் நோயில்லாமல் ஆரோக்யமாக வாழணும்னு ஆசையா....?


நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து,தங்களது
ஆயுளை பெருக்கிக்கொண்டனர் என்பதற்கு உதாரணம் தான்,
அவர்கள் சிந்தனையில் உருவான
இந்த மருந்துப்பொடி.

அப்படி என்ன அது என
கேட்குறீங்களா....?

அதுதாங்க.....திரிபலா.

நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றும்
சேர்ந்த கூட்டுப்பொருள் தான்
திரிபலா மருந்துப்பொடி.

இதனை தனித்தனியாக வாங்கி, வெயிலில் காயவைத்து இடித்து,பொடி செய்து பயன்படுத்தலாம். இல்லையென்றால் கடைகளில் நேரடியாக திரிபலா பொடியினை கேட்டு வாங்கி பயன்படுத்தலாம்.

இதனால் நம் உடம்பிற்கு என்ன பயன்....?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.

இதயநோய்கள் வராமல் தடுக்கிறது.

செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது.

முதுமையைத் தாமதப்படுத்துகிறது.

மலமிளக்கியாக(laxative) செயல்படுகிறது.

புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுகிறது.

உடலில் உள்ள நச்சுப்பொருட்களை
(toxins) நீக்குகிறது.

வயிற்றில் உள்ள புழுக்களை(worms)  வெளியேற்ற உதவுகிறது.
 
வயிற்றுப்புண்ணை சரி செய்கிறது.

ரத்தசோகையை சரி செய்கிறது.

ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

உடலில் அல்சரை கட்டுப்படுத்தும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

தலைவலியைக் குணப்படுத்தும்.

உடலில் குளூகோஸின்(glucose) அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.

உடலில் கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கும்.

உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

ரத்தத்தை சுத்திகரிக்கும்.

தோல் நோய்கள் வராமல் காக்கும்.

உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்குகிறது.

தொற்று நோய்கள் வராமல் காக்கும்.

குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது.

சைனஸ் நோயைத் தீர்க்கும்.

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும்.

ரத்தத்தில் RBC எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. .

கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.

திரிபலாப் பொடியை எப்படி சாப்பிடலாம்......?

சுடுதண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
தேன் கலந்து சாப்பிடலாம்.
நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மோருடன் கலந்து சாப்பிடலாம்.
நீருடன் கலந்து சாப்பிடலாம்.

மேலே சொன்னவை யாவும்,
என் அறிவுக்கு எட்டியவையே....

எது எப்படியோ.....இந்த பதிவு
திரிபலா பற்றிய ஒரு புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும்,
என நான் நம்புகிறேன்.

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.....?

இந்த பறவைக்கும், தமிழ்நாட்டிற்கும் அப்படி என்ன சம்பந்தம்.....?

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.....?

Thursday, 9 February 2017

சிங்கம்-3-பாய்ச்சல் அதிகம்...


சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் சிங்கம் மூன்றாம் பாகம்.இந்த திரைப்பட விமர்சனம் காண
பின்வரும் வீடியோ லிங்கினை
க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qlPqub

Wednesday, 8 February 2017

இவனை என்ன செய்யலாம்....?


இந்த கொடூரமான செய்தி கேட்ட
நேற்று இரவில் இருந்து எனக்கு
சரியாக தூக்கம் வரவில்லை.

அப்படி என்ன செய்தி கேட்குறீங்களா.....?

செய்தி இது தான்....


கடந்த 5-2-2017 ம் தேதி,சென்னை போரூர் அருகே  7 வயது சிறுமி ஹாஷினி காணாமல் போனதாக முகநூல் பக்கங்களில் செய்தி வெளியானது.

தற்போது அந்த சிறுமி,பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த படுபாதக செயலில் ஈடுபட்டதாக
தன்வந்த் என்கிற IT ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போரூர் அருகேயுள்ள மதனந்தபுரம் மாதா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியினரின் மகளான ஹாஷினி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.‌ கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி காணாமல் போனதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக,அதே குடியிருப்பில் மேல்தளத்தில் வசித்து வந்த தன்வந்த் என்பவரிடம் போலீசார் விசாரித்த போது,அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளார்.‌

இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவீர விசாரணையில் இறங்கிய போது, சிறுமி ஹாஷினியை தான் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், தலையணையால் அழுத்திக் கொலை செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறான்.

பின்னர் சிறுமி ஹாஷினி உடலை தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலைக்கு எடுத்துச் சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறான் நெஞ்சில் ஈரமில்லா கொலைகாரப்பாவி.

இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர்,எரிந்த நிலையில் கிடந்த ஹாஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து தன்வந்தை போலீசார் கைது செய்தனர்.


சில நிமிட உடல் இச்சைக்காக ஒரு இளந்தளிரை எரித்து நாசமாக்கிய கேடுகெட்ட இந்த மனிதனல்லா மிருகத்தை,என்ன செய்யலாம்...
நீங்களே சொல்லுங்க...?

நெஞ்சு பொறுக்கவில்லை....
இந்த மனநிலை கெட்ட
மானிடனை நினைத்துவிட்டால்.

ஏ....இறைவா....
நீ எங்கேனும் இருந்தால்....
இனியாவது இந்த பிஞ்சுகளின் கண்களுக்கு காட்டு........
மனிதனில்
நல்லவர் யார்....?
கேடுகெட்டவர் யார்...?  என்று.

Friday, 3 February 2017

போகன்-வித்தைக்காரன்அரவிந்தசாமி மற்றும் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் தான் இந்த போகன்.
இந்த போகன் திரைப்படம் பற்றிய
சிறு விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
http://viid.me/qk0dVa


Thursday, 2 February 2017

விவசாயிகளின் நண்பன்நீங்கள் விவசாயம் செய்பவரா...?

அப்ப இந்த செய்தி உங்களுக்கானது தான்....

ஆமாங்க...உங்களுக்கு உதவுவதற்காக இந்திய வேளாண்துறையால் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி தமிழில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவசாயிகளுக்கு உதவும் அருமையான ஆண்ட்ராய்டு செயலி
'கிசான் சுவிதா' பற்றி மேலும் விவரம் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
Link-1
http://viid.me/qjjFkF
Link-2
https://youtu.be/dih4j77IzCo